Advertisment

சனாதன தர்மம், அரசியல் மேடையில் விவாதிக்க வேண்டிய விஷயம் அல்ல: உமாபாரதி

தி.மு.க.வை விமர்சித்த உமாபாரதி, சனாதன தர்மம் பற்றிய விவாதத்தை அறிஞர்களிடம் விட்டு விடுங்கள், என்றார்.

author-image
WebDesk
New Update
Uma Bharti

Former Madhya Pradesh chief minister Uma Bharti

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் உமாபாரதி செவ்வாய்கிழமை கூறுகையில், சனாதன தர்மம் என்பது அரசியல்வாதிகளுக்கான விஷயம் அல்ல. இதை அரசியல் மேடையில் விவாதிக்க வேண்டாம் என்று நான் தலைவர்களை கேட்டுக்கொள்கிறேன். இது அரசியல்வாதிகளுக்குரிய விடயம் அல்ல. இது முழுக்க முழுக்க துறவிகள் மற்றும் சமய அறிஞர்களுக்குரிய விஷயம்…, என்று அவர் செஹோர் மாவட்டத்தில் விநாயக சதுர்த்தி விழாவில் கூறினார்.

Advertisment

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து பேசியதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விஷயத்தை சுற்றி விவாதத்தை தூண்டியுள்ளது.

தி.மு.க.வை விமர்சித்த உமாபாரதி, உணவு, உடை, இருப்பிடம் பற்றி அனைத்து தரப்பினரும் பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சனாதன தர்மம் பற்றிய விவாதத்தை அறிஞர்களிடம் விட்டு விடுங்கள், என்றார்.

பெண்கள் இடஒதுக்கீடு மசோதா குறித்து பேசிய பாரதி, மாநில சட்டசபை மற்றும் மக்களவையில் பெண்கள் நுழைவது முக்கியம்.

பெண்கள் பா...வுக்கு வாக்களிக்கிறார்கள். அவர்கள் பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். மத்தியப் பிரதேசத்திலும், பெண்களுக்கு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது, எனவே பெண்கள் தங்கள் வாக்குகளை பா...வுக்கு அளிப்பார்கள். ஆனால், எல்லா வேலைகளையும் வெறும் வாக்குகளுக்காக மட்டும் செய்ய வேண்டுமா?

பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த பெண்களைக் கவனிப்பது நமது பொறுப்பு அல்லவா? 1,000-2,000 ரூபாய் கொடுத்தால் என்ன நடக்கும்? அவர்களுக்கு சட்டசபை மற்றும் லோக்சபாவில் பதவி வழங்க வேண்டும்.

மாநில அரசின் லட்லி பெஹ்னா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.1,250 வழங்கப்படுகிறது, இது வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் பிரச்சாரத்தின் முக்கிய திட்டமாக உள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் 50 சதவீத இடங்களை ஒதுக்குமாறு முதல்வர் சிவராஜ் சிங் சவுகானிடம் உமாபாரதி கேட்டுக் கொண்டார்.

இந்த 50 சதவீதத்தில் பாதியை எடுத்து எஸ்சி, எஸ்டி, ஓபிசி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து, விதானசபா இடங்களை முடிவு செய்யுங்கள். முதலில் உங்கள் கட்சியின் தன்மையை காட்டுங்கள். இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது முக்கியமல்ல...

மண்டல் கமிஷனின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லீம் பெண்கள், மிகவும் ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தவர்கள், அந்த பெண்களுக்கும் அந்த பதவியை வழங்க முடியும்.

தனது நிலைப்பாடு கட்சிக்கு எதிரானது அல்ல என்றார் பாரதி. நான் மாநிலத்தில் எனது கட்சிக்காக பிரச்சாரம் செய்வேன். கட்சியில் ஜனநாயகம் உள்ளது, எனது கருத்தை தெரிவிக்க எனக்கு உரிமை உள்ளது. நான் கூறுவது கட்சிக்கு எதிரானது என கூறினால், சமூக பிரச்னைகள் குறித்து பேச முடியாது. சமூகப் பிரச்னைகள் குறித்து பேச சுதந்திரம் இருக்க வேண்டும், என்றார் உமாபாரதி…

இதனிடையே, உமா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

உமாபாரதி ஒரு மூத்த தலைவர், நாங்கள் அவரை மிகவும் மதிக்கிறோம். அவர் நிலைப்பாட்டில் ஒட்டிக்கொண்டால் அவது நெருப்புப் பிம்பம் அப்படியே இருக்கும். அவர் தன் உறுதியை மாற்றிக் கொள்ளக் கூடாது. தன் கருத்துக்களை மாற்றிக்கொள்வது அவது அடையாளமாகிவிட்டது. அவர் சிவராஜுக்கு எதிராக அறிக்கைகளை அளித்துள்ளார், பின்னர் அவரை தனது தம்பி என்று அழைக்கிறார், என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கே கே மிஸ்ரா கூறினார்.

பாரதியின் கருத்துகள் காங்கிரஸால் திரிக்கப்பட்டவை என்றும், சனாதன தர்மத்தைப் பற்றி கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்குமாறு அவர் அரசியல்வாதிகளைக் கேட்டுக்கொண்டது, எதிர்கட்சியான இந்தியா கூட்டணிக்கு என்றும், பாஜகவுக்காக அல்ல என்றும் பாஜக கூறியுள்ளது.

பாஜக செய்தித் தொடர்பாளர் நரேந்திர சலூஜா கூறுகையில், உமாபாரதியின் அறிக்கையை காங்கிரஸே திரித்து வருகிறது. சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர்களிடம் பேசுகிறார். இடஒதுக்கீடு குறித்த அவரது அறிக்கைகள் வரவேற்கத்தக்கது மேலும் அது குறித்து தீவிரமாக விவாதிக்கப்படும், என்றார்.

Read in English: Sanatan Dharma not a subject for politicians: Uma Bharti

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment