News about Uma Bharti, Madhya Pradesh in tamil: மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் ஸ்ரீ சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள நிவாரி மாவட்டம் கோவில்கள் மற்றும் அரண்மனைகளுக்கு பெயர் பெற்றது. இந்நிலையில், அம்மாவட்டத்தின் ஓர்ச்சா நகரில் உள்ள மதுபானக் கடையின் முன் தெருவில் இருந்த மாடுகளைக் கட்டி வைத்துவிட்டு வைக்கோல் ஊட்டி இருக்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான உமாபாரதி.
இவர் மத்தியப் பிரதேசத்தில் பூரண மதுவிலக்கிற்கு போராடி வரும் நிலையில், மதுபானக் கடையின் முன்பு மாடுகளைக் கட்டி வைத்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானம் (IMFL) விற்கும் கடையின் முன் நின்ற அவர், பசுக்களை கட்டிவிட்டு, “பால் குடியுங்கள். மது அல்ல.” என்ற கோஷத்தை எழுப்பினார். அவர் இப்படி போராட்டம் நடத்துவத்தைக் கண்ட கடையின் விற்பனையாளர் 2022 சம்பவங்கள் மீண்டும் நிகழும் என்ற அச்சத்தில், உடனடியாக அதன் ஷட்டர்களை கீழே இறக்கினார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இதே மதுபானக் கடையில் பாஜக தலைவர் உமாபாரதி மாட்டுச் சாணத்தை அள்ளி வீசினார். மார்ச் 2022ல், அவர் போபாலில் உள்ள ஒரு மதுபானக் கடை மீது கல் வீசினார்.
“கடந்த முறை இந்த ஓர்ச்சா மதுபானக் கடையில் முன்னாள் மத்திய அமைச்சர் மாட்டு சாணத்தை வீசினார். அதனால் இந்த முறை கடையின் ஷட்டர்களை கீழே இறக்கிவிட்டேன்,” என்று விற்பனையாளர் ராம்பால் பிடிஐயிடம் தெரிவித்தார்.
நிலவும் குடிப்பழக்க பிரச்சனைக்கு தானும் ஓரளவிற்கு காரணம் என்றும், 2003 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க முயன்றதாகவும் நினைவு கூர்ந்த அவர், அதன் பின்னர் 2018-2020ல் 15 மாதங்கள் தவிர மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது என்று கூறினார். மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மது விற்பனையை முறைப்படுத்த வேண்டும் கோரிக்கை வைத்து வந்தார். தற்போது மாடுகளை கட்டி வைத்து போராட்டம் நடத்திய அவர் குடிப்பழக்கத்தை அரசு பணமாக்கக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.
மாநில தலைநகர் போபாலில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பாஜக தலைவர் உமாபாரதியின் அறிக்கைகள் மற்றும் அவரது மதுவுக்கு எதிரான பிரச்சாரம் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். முன்னதாக, குடியரசு தின விழாவில் பேசிய சவுகான், புதிய கலால் கொள்கை குடிப்பழக்கத்தை ஊக்கப்படுத்தாது என்றும் கூறியிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil