Shubhajit Roy
UN blacklisted Masood Azhar : இந்தியாவில் நடந்த பல்வேறு முக்கியமான தீவிரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்ட மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தது ஐ.நாவின் பாதுகாப்பு ஆணையம் 1267 சான்க்சன் கமிட்டி அறிவித்துள்ளது. நேற்று காலை நியூயார்க் நேரப்படி 9 மணிக்கு இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார், ஐ.நாவிற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சயத் அக்பருதீன்.
சீனாவை இந்திய பணிய வைத்தது எப்படி ?
இதனால் ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் எந்த ஒரு நாடும், ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பின் தலைவரான மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதில் எந்த நாட்டுக்கும் தடையில்லை.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மசூத்தை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதற்கு தடை விதித்து வந்த சீனாவும் தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து தற்போது மாறியிருப்பதால், இந்தியாவிற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.
கடந்த மார்ச் 13ம் தேதி, மசூத்தை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதில் சீனா தன்னுடைய எதிர்ப்பை கூறியது குறிப்பிடத்தக்கது. முதலில் அமெரிக்காவும், பின்னர் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளும் இந்தியாவிற்கு ஆதரவாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதற்கு சீனா மீண்டும் முட்டுக்கட்டை
UN blacklisted Masood Azhar
பிப்ரவரி 14ம் தேதி புல்வாமா பகுதியில், பாதுகாப்புப் படை வீரர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டது. பிப்ரவரி 21ம் தேதி முதல்முறையாக பாதுகாப்பு கவுன்சில் தன்னுடைய கண்டனங்களை பதிவு செய்தன. இதற்கு முன்பு காஷ்மீரில் நடைபெற்ற எந்த விதமான தாக்குதல்களுக்கும் ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சில் கண்டனங்கள் இதுவரை தெரிவித்தது இல்லை. இது தான் முதல்முறை.
மேலும் அந்த கண்டன அறிக்கையில், ஜெய்ஷ் அமைப்பைப் பற்றி குறிப்பிட்டது மேலும் இந்தியாவின் கோரிக்கைக்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்தது. இது குறித்த தகவல்களை, பயங்கரவாதிகளின் பட்டியலில் அசாரின் பெயரை இணைத்தவுடன் அக்பருதீன் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அறிவித்தார்.
2017ம் ஆண்டிற்கு பிறகு, முதன்முறையாக புல்வாமா தாக்குதல் நடைபெற்ற 6 நாட்களுக்குள்ளேயே அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ் நாடுகள், மசூத்தை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்த தீவிரவாத இயக்கம் தொடர்பான முடிவுகளை எடுக்கும் போது, எந்த ஒரு நாடும் சாதக பாதகங்களை நிச்சயம் ஆராயும். இந்தியா மட்டும் அல்லாமல், சர்வதேச அரங்கில் பல்வேறு நாடுகள், மசூத்தை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு தங்களின் ஆதரவை தெரிவித்தனர். ஆப்ரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான், கனடா போன்ற நாடுகள் ஆரம்பத்திலேயே இந்தியாவிற்கு சாதகமாக கவுன்சிலில் ஆதரவு அளித்தனர்.
தொழில்நுட்ப ரீதியாக மசூதை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க முட்டுக்கட்டை போட்டது சீனா. 6 மாதங்களுக்கு இனி அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இயலாது என்று நினைத்திருந்த நிலையில், அமெரிக்கா சீனாவிற்கு அழுத்தம் கொடுத்து இந்த அறிவிப்பினை சாத்தியப்படுத்தியது.
வீட்டோ எனப்படும் தடுத்து நிறுத்தும் உரிமை சீனாவிற்கு இருக்கும் காரணத்தால், சர்வதேச தீவிரவாதியாக மசூத்தை அறிவிக்கும் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை நான்கு முறை தடுத்துள்ளது. தற்போது சர்வதேச தீவிரவாதியாக மசூத்தை அறிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், அடுத்த கட்டமான மக்களின் வாக்குகளுக்குச் செல்லும்.
ஒரு பயங்கரவாதிக்கு ஆதரவாக சீனா ஒரு முடிவினை எடுக்குமானால், நிச்சயம் மக்கள் மத்தியில் பலத்த கண்டனங்களை சந்திக்க நேரிடும் என்பதை சீனா நன்றாக உணர்ந்திருக்கிறது. இந்தியா தன்னுடைய நிலைப்பாட்டை சீனாவிற்கு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், வெளியுறவுச் செயலாளர் விஜய் கோஹலே அமெரிக்கா, சீனா, ரஷ்யாவிற்கும் பயணம் மேற்கொண்டார்.
மகிழ்ச்சியடைந்த ஐ.நா பிரதிநிதி
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஏற்கனவே பலவேறு பிரச்சனைகள் நிலுவையில் உள்ள நிலையில், சீனாவின் மாற்றம் ஒரு முன்னேற்றத்தை தரலாம். இரு தரப்பினரிடையேயான பேச்சுவார்த்த்தை இந்தியா - சீனா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பதட்டமான சூழலை குறைக்கும்.
கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் அரசியல் கொள்கைகளால் மக்கள் பெரும் அதிருப்தியுற்றதை கவனித்தில் கொண்டே இப்படி ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது சீனா என்று தெரியவந்துள்ளது.
2016, 2017 என்று இருமுறை தோல்வியடைந்த தீர்மானம் தற்போது வெற்றி பெற்றதை நினைத்து பெருமையாக கூறும் ஐ.நா இந்திய பிரதிநிதி அக்பருதீன் “நான் தோனியின் ஸ்டைலை பின்பற்றுபவன். நமக்கு நேரம் இன்னும் இருக்கிறது என்பதை நம்புபவன். இது முடிந்துவிட்டது. கைவிட்டுவிடுவோம் என்று நான் ஒரு போதும் நினைப்பதில்லை” என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.