குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் இந்த புதிய சட்டம் அடிப்படையிலேயெ பாரபட்சமானது என்று கவலை தெரிவித்துள்ளது.
“புதிய குடியுரிமை திருத்த சட்டம் அடிப்படையில் பாரபட்சமானது என்று நாங்கள் கவலைப்படுகிறோம். துன்புறுத்தப்பட்ட குழுக்களைப் பாதுகாக்கும் நோக்கம் வரவேற்கப்படுகிறது. ஆனால், புதிய சட்டம் சிறுபான்மை பிரிவுகளில் அடங்கியுள்ள முஸ்லிம்களுக்கு பாதுகாப்பை வழங்கவில்லை” என ஐ.நா அமைப்பு வெள்ளிக்கிழமை டுவிட் செய்துள்ளது.
#India: We are concerned that the new #CitizenshipAmendmentAct is fundamentally discriminatory in nature. Goal of protecting persecuted groups is welcomed, but new law does not extend protection to Muslims, incl. minority sects: https://t.co/ziCNTWvxc2#FightRacism #CABProtests pic.twitter.com/apWbEqpDOZ
— UN Human Rights (@UNHumanRights) December 13, 2019
ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான அமைப்பு அறிக்கையில் கூறியிருப்பதாவது: “திருத்தப்பட்ட சட்டம் இந்தியாவின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டத்தின் முன் சமத்துவத்திற்கான உறுதிப்பாட்டையும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை மற்றும் இனபாகுபாட்டை ஒழிப்பதற்கான மாநாட்டின் கீழ் இந்தியாவின் கடமைகளையும் குறைத்து மதிப்பிடுவதற்கு உட்படுத்தும். எந்த ஒரு இந்திய அரசும் இன, மதம் மற்றும் இன அடிப்படையிலான பாகுபாடு காண்பதை தடை செய்கிறது. இந்தியாவின் வெளிநாட்டினருக்கு குடியுரிமை அளுக்கும் சட்டம் நடைமுறையில் இருந்தாலும் இந்த திருத்தம் மக்கள் தேசியத்தை அணுகுவதில் பாரபட்சமான விளைவை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய சட்டம் குறித்து சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்) தனது அச்சத்தை வெளிப்படுத்திய சில நாட்களுக்குப் பிறகு இந்தச் சட்டம் குறித்த ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் எதிர்வினை வந்துள்ளது.
மக்களவையில் குடியுரிமை திருத்த மசோதா மத அளவுகோல்களைக் கொடுத்து நிறைவேற்றப்பட்டதன் மூலம் அது மிகவும் கவலையடைந்துள்ளதாக இந்த ஆணையம் கூறியதுடன், “நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால், உள்துறை அமைச்சர் மற்றும் பிற முதன்மை தலைமைக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை அமெரிக்க அரசு பரிசீலிக்க வேண்டும்” என்று கூறியுள்ளது.
டிசம்பர் மாதம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், சமணர்கள் மற்றும் பார்சிகளுக்கு குடியுரிமை வழங்க முற்படுகிறது. பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 2014 டிசம்பர் 31 வரை நாட்டிற்குள் நுழைந்த முஸ்லிம்களை வெளியேற்றுகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்றன. வியாழக்கிழமை போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியானார்கள்.
இதனிடையே, டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது. ஆர்ப்பாட்டத்தில் கல் வீச்சு நடைபெற்றதாக செய்திகள் வெளியானது. போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க தடியடியையும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் பயன்படுத்தினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.