வாழ்வின் பெரிய அச்சுறுத்தலை சமாளிப்போம்: மோடி நடவடிக்கைக்கு ஐ.நா ஆதரவு

ஐ.நா இந்தியாவுடன் இணைந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது

UN Lauds PM Modi’s decision on 21 days lockdown across the country : 24ம் தேதியன்று மாலை, மக்களிடம் உரையாடிய மோடி, வருகின்ற 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார். மக்கள் அனைவரும் வீடுகளில் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தங்குதடையின்றி கிடைக்கும் என்று உத்தரவாதம்  அறிவித்துள்ளார் மோடி. இந்நிலையில் மோடியின் இந்த அறிவிப்பிற்கு உலக அரங்கில் மாபெரும் வரவேற்பும் பாராட்டும்  கிடைத்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

இந்தியாவில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் கோ-ஆர்டினேட்டர் ரெனேடா டெஸ்ஸல்லியன் மோடியின் இந்த செயல்பாட்டுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார், மேலும் இந்தியாவுக்கு தேவையான உதவிகளை செய்ய ஐ.நா முன் வருவதாகவும் அவர் அறிவித்தார். அனைவரும் ஒன்றாக ஒருங்கிணைந்து பணியாற்றினால் “நம்முடைய வாழ்வில் பார்க்கும் மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தலை சமாளிப்போம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

அதே போன்று, ஐ.நாவின் பொதுசெயலாளர் ஆண்டனியோ குட்டேரஸின் செய்தித் தொடர்பாளார் ஸ்டீஃபன் டுஜாரிக் “ஐ.நா இந்தியாவுடன் இணைந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது” என்பதை உறுதி செய்துள்ளார். நோய் கண்காணிப்பு, ஆய்வகம் மற்றும் ஆராய்ச்சி நெறிமுறைகள், இடர் தொடர்புகள், தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மற்றும் கிளஸ்டர் கட்டுப்பாட்டு திட்டங்கள் குறித்த பயிற்சி, பயணிகளின் கண்காணிப்பு போன்ற திட்டங்களை செயல்படுத்த ஐ.நா உதவும் என்பதையும் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க : சீக்கியர்களால் மூச்சுவிடும் நியூயார்க் நகரம்! நிறைவாக உறங்கும் அமெரிக்கர்கள்!

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Un lauds pm modis decision on 21 days lockdown across the country

Next Story
கொரோனா தடுப்பு நடவடிக்கை : நாட்டிற்கே முன்மாதிரியாக திகழும் திரிபுரா கிராமம்Coronavirus live news, corona latest numbers
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com