தன்னம்பிக்கையின் மறு உருவம்: கைகளை இழந்தாலும் தைரியத்தை இழக்காத சிறுவன்!!

குறைந்த பட்சம் கால்களையாவது கடவுள் எனக்கு விட்டு வைத்ததிற்கு அவருக்கு நான் தினமும் நன்றி சொல்கிறேன்

By: Updated: April 5, 2018, 04:23:43 PM

பஞ்சாபில் கைகளை இழந்த 11 வயது சிறுவன்  மனம் தளராமல் காலினை கொண்டு கல்வி படிப்பது, வரைவது என தன்னபிக்கையின் மறு உருவமாக வாழ்ந்து வருகிறான்.

இரண்டு கை, கால்களை  வைத்துக் கொண்டே  அதன் மதிப்பு தெரியாமல்  சுத்தும்  சில நபர்களின் மத்தியில்  பஞ்சாபில்  இரண்டு கைகளையும் இழந்த சிறுவன் பலருக்கும் முன்னோடியாக வாழ்ந்து வருகிறான். 11 வயதாகும்   கமல்ஜித் சிங்கை 3 வயதில் அந்த கொடிய நோய்  தாக்கியுள்ளது.

அப்போது தான் அவனின், கைகள் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்க ஆரம்பித்துள்ளது. உடனே,  பெற்றோர்கள் கமலை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பார்த்துள்ளனர். ஆனால்,  அவனின் கைகளை சரிசெய்ய பல லட்சம் ரூபாய் செலவாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்ததால், அவர்களால் அறுவை சிகிச்சை செய்யா முடியாமல் போகியுள்ளது.

அதன் பின்பு,  கமலின் 8 வயதில் அவனின் கைகள், முற்றிலும் செயலிழந்து விட்டன.  1 வருடம்  வீட்டிற்குள்ளே தனிமையில் இருந்த அவன்,  திடீரென்று  ஒரு நாள் தன்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்கும்படி தனது பெற்றோரிடம் கேட்டுள்ளான்.  ஆனால், அவர்களோ கைகள் இல்லாமல் எப்படி உன்னால் எழுத முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளன.

அப்போது தான் கமல் அந்த வாத்தையை தனது பெற்றோரிடம் கூறியுள்ளான்.”எனது கால் தான் எனக்கு கைகள்”  அன்றிலிருந்து இன்று வரை கமல் தனது கால்களை,  கைகளை போல் சாப்பிடுவதற்கும், எழுதுவதற்கும், படம் வரைவதற்கு என எல்லாவற்றிற்கும்  உபயோகித்து வருகிறான்.

சமீபத்தில் நடந்த பள்ளித் தேர்வில், மற்ற மாணவர்களை விட அதிகமான மதிப்பெண்கள் எடுத்து அவன் படிக்கும் பள்ளிக்கே பெருமை தேடி தந்துள்ளான். கமலை கண்டு அவரின் பெற்றோர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் பெருமை கொள்கின்றன.

இதுக் குறித்து கமல்ஜித் சிங் கூறியது, “ எனக்கு கைகள் செயல்படவில்லை என்பதை நினைத்து நான் ஒருபோதும் வருந்தியது இல்லை என் ஆசிரியர்கள், பெற்றோர்கள், நண்பர்கள் எல்லோருமே என்னை மற்ற மாணவர்களை போல் தான் பார்பார்கள்.   என் வேலையை நானே செய்துக் கொள்வேன். சாப்பிடுவது, தலையை சிவிக்கொள்வது, எழுதுவது என எல்லாமே என் கால்களை வைத்து தான். குறைந்த பட்சம் கால்களையாவது கடவுள் எனக்கு விட்டு வைத்ததிற்கு அவருக்கு நான் தினமும் நன்றி சொல்கிறேன்” என்று கூறியுள்ளான்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Unable to move hands feet once punjab boy 11 now writes paints with toes

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X