பேண்டிற்குள் நுழைந்த பாம்பை 2 மணி நேரம் கவனிக்காமல் இருந்த இளைஞர்!

பேண்டிற்குள் பாம்பு இருப்பதை பார்த்த வீரேஷ் கூச்சலிட்டு, அங்கேயே மயக்கியும் விழுந்துள்ளார்.

கர்நாடகவில் இளைஞர் ஒருவர், தனது பேண்டிற்குள் நுழைந்த பாம்பு ஒன்றை 2 மணி நேரம் கவனிக்காமல் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் நராகுண்ட் நகரைச் சேர்ந்த வீரேஷ் என்ற 32 வயது மதிக்கதக்க நபர் ஒருவர், தனது இரண்டு தினங்களுக்கு முன்பு சூப்பர் மார்கெட் ஒன்றிற்கு சென்றுள்ளார். நராகுண்ட் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் ரோட்டில் மழை தண்ணீர் வெள்ளம் போல் நின்றுக் கொண்டிருந்தது.

இந்த பாதையில் வீரேஷ் தனது இருசக்கர வாகனத்தில் சென்ற போது சுமார் 2 அடி நீளம் உள்ள பாம்பு ஒன்று, அவரின் பேண்டிற்குள் நுழைந்துள்ளது.இதை சற்றும் கவனிக்காத அவர், நிதானமாக கடைக்கு சென்று, பின்பு அவரின் நண்பர்கள் வீட்டிற்கும் சென்று வந்துள்ளார். அதே நேரத்தில் பேண்டிற்குள் இருந்த பாம்பு வீரேஷை கடிக்காமல் அமைதியாக இருந்துள்ளது.

இதனால், வீரேஷ் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டு, பின்பு குளிக்க சென்றுள்ளார். அப்போது தான் குளியலறையில் பேண்டை கழட்டிவருக்கு பேரதிர்ச்சி காக்த்துக் கொண்டிருந்தது. பேண்டிற்குள் பாம்பு இருப்பதை பார்த்த வீரேஷ் கூச்சலிட்டு, அங்கேயே மயக்கியும் வீழ்ந்துள்ளார்.

அதன் பின்பு, குடும்பத்தார் விரைந்து 2 அடி நீளம் இருந்த பாம்பை பிடித்து காட்டு பகுதியில் விட்டுள்ளன. 2 மணி நேரம் வீரேஷின் பேண்டிற்குள் இருந்த பாம்பு அவரை கடிக்காமல் இருந்ததால் அதிர்ஷட்டவசமாக அவர் உயிர் தப்பினார். இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

×Close
×Close