10,000 பேர் பௌத்த மதத்திற்கு மாறிய நிகழ்வில் அவரைக் காட்டும் காணொளி வெளியான சில நாட்களுக்குப் பிறகு, டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம் ஞாயிற்றுக்கிழமை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார்.
சமூக சீர்திருத்தவாதி பி.ஆர்.அம்பேத்கரின் 22 சபதங்களை ஏற்று, இந்துக் கடவுள்களையோ அல்லது தெய்வங்களையோ பிரார்த்தனை செய்ய மாட்டோம் என்று கூட்டத்தில் கூடியிருந்தவர்கள் உறுதி செய்தனர். அரவிந்த் கெஜ்ரிவாலும் அவரது கட்சியினரும் இந்துக்களை "வெறுக்கிறார்கள்" என்று பா.ஜ.க கூறிய இந்த நிகழ்வு விமர்சனத்திற்கு உள்ளானது. அப்போது ராஜேந்திர பால் கௌதம், அரசியல் சாசனத்தின்படி தனது மதத்தை கடைப்பிடிக்க உரிமை உண்டு என்று கூறியிருந்தார். பின்னர், பா.ஜ.க.,வின் விமர்சன நடவடிக்கையை பிரச்சாரம் என்று சாடிய ராஜேந்திர பால் கௌதம், இதனால் பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.
இதையும் படியுங்கள்: ராமர் கோவிலுக்கு இலவச பயணம்; குஜராத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி
ராஜேந்திர பால் கௌதம் தனது ராஜினாமாவில், “அக்டோபர் 5 ஆம் தேதி அம்பேத்கர் பவனில் நடந்த நிகழ்ச்சியில் எனது தனிப்பட்ட முறையில் நான் சேர்ந்தேன். ஆம் ஆத்மி கட்சிக்கும் நான் அமைச்சராக இருப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முன்னாள் பா.ஜ.க அமைச்சர் தாவர் சந்த் கெலாட் எழுதிய அம்பேத்கரின் எழுத்துகள் மற்றும் உரைகள் என்ற புத்தகத்தின் 17 ஆவது பதிப்பிலும் பாபாசாகேப்பின் 22 சபதங்கள் இடம்பெற்றுள்ளன. இவை நாடு முழுவதும் மீண்டும் மீண்டும் வருகின்றன... பா.ஜ.க இதை கேவலமான அரசியலுக்கு பயன்படுத்துகிறது, அதனால் நான் எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்,” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வீடியோ வெளியானதையடுத்து, ராஜேந்திர பால் கௌதம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜ.க வலியுறுத்தியது. ஆம் ஆத்மி கட்சியும் டெல்லி அரசாங்கமும் இந்த நிகழ்வு அல்லது பா.ஜ.க.,வின் கோரிக்கைகள் குறித்து எந்த எதிர்வினையும் செய்யவில்லை, ஆனால் ராஜேந்திர பால் கௌதமிடம் அரவிந்த் கெஜ்ரிவால் "கோபமாக" இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil