2014ம் ஆண்டு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த வழிகாட்டுதல்களின் படி, மத்திய பிரதேச மாநிலத்தில் உஜ்ஜன் மஹாக்கல் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட விகாஸ் தூபே உத்திரபிரதேசத்துக்கு அழைத்து வந்தபோது கொல்லப்பட்ட சம்பவம் குறித்து உத்தரபிரதேச அரசு விசாரணை நடத்தும்.
அந்த விசாரணையின் தன்மைகள் உண்மையை நிலைநாட்டும் என்பது புதிரான புதிராகவே உள்ளது.
ஏனெனில், மார்ச் 2017-ல் யோகி ஆதித்யநாத் அரசாங்கம் பொறுப்பேற்றதிலிருந்து, காவல் துறையினரின் பிடியிலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 119 வது நபராக விகாஸ் துபே உள்ளார்.
கைதிகள் கொல்லப்பட்ட 74 என்கவுண்டர் வழக்குகளில் மாஜிஸ்திரேட் விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. இந்த விசாரணை அனைத்திலும், காவல்துறையின் கரங்கள் கரைபடவில்லை என தெரிவிக்கப்பட்டது. மற்ற 61 என்கவுண்டர் வழக்குகளில், காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையை நீதிமன்றம் எற்றுக் கொண்டது.
இதுவரை நடந்த 6,145 துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், பலியானவர்களின் எண்ணிக்கை 119 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,258ஆகவும் உள்ளது என்று அதிகாரப்பூர்வ பதிவுகள் தெரிவிக்கின்றது. கடந்த வாரம், காவல்துறையைச் சேர்ந்த எட்டு பேரை சுட்டுக் கொல்லப்பட்டதை சேர்த்து இதுவரை 13 காவல் அதிகாரிகள் மரணமடைந்துள்ளனர். காயமடைந்த காவலர்களின் எண்ணிக்கை 885-க உள்ளது.
இந்திய நீதி பரிபாலனத்தின் மைல்கல் எனப் போற்றப்படும் உச்சநீதிமன்றத்தின் போலீஸ் என்கவுண்டர் தொடர்பான பல தீர்ப்புகளுக்கு சட்ட வடிவங்கள் இருந்தும், சுயாதீன விசாரணைகள் இருந்தும், என்கவுண்டர் கொலைகளில் உரிய செயல்முறை தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நால்வர் என்கவுண்டர் செய்யப்பட்டது தொடர்பாக, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.என்.சிர்புர்கர் தலைமையிலான சுயாதீன விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம் அவ்வாறு செய்யும்போது, தேசிய மனித உரிமைகள் ஆணையமும், தெலுங்கானா உயர் நீதிமன்றமும் நால்வர் என்கவுண்டர் தொடர்பாக சட்ட விசாரனைக்கு தடை விதித்தது. துபே கொல்லப்பட்டதைப் போன்றே, காவல் துறையினரின் பிடியிலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது தற்காப்பு நடவடிக்கையாக குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெலுங்கானா போலீசார் தெரிவித்தனர். ஏறக்குறைய ஏழு மாதங்களுக்குப் கடந்த பிறகும், விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
உத்தர பிரேதேசத்தில் அரங்கேறும் என்கவுண்டர் கொலைகள “மிகவும் கடுமையான பிரச்சினை” என்று 2019 ஜனவரியில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
மக்கள் சிவில் உரிமைக் கழகம் (People’s Union for Civil Liberties (PUCL) எனும் மனித உரிமை அமைப்பு நீதிமன்றத்தில் 50-க்கும் மேற்பட்ட கைதிகள் கொல்லப்பட்ட 1000 என்கவுண்டர் சம்பவங்கள் தொடர்பான பட்டியலை சமர்பித்தது. ஜூலை 2018 முதல் பிப்ரவரி 2019 வரை நான்கு முறை விசாரிக்கப்பட்ட வழக்கு, அதன் பின்னர் பட்டியலிடப்படவில்லை.
என்கவுண்டர் இறப்புகள் தொடர்பாக இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் 2017 முதல் உத்தரபிரதேச அரசுக்கு குறைந்தது மூன்று நோட்டிஸ்களை அனுப்பியுள்ளது. அனைத்திற்கும், தனது நடவடிக்கையை நியாயப்படுத்தும் ஒரு பொதுவான பதிலை மாநில அரசு தாக்கல் செய்தது போதிலும். வழக்கு விசாரணையில் இதுவரை எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை.
போலி என்கவுண்டர் தொடர்பாக 2013 ஆம் ஆண்டில் அமர்வு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட 11 காவல்துறையினரின் தண்டனையை இடைநீக்கம் செய்த மகாராஷ்டிரா அரசாங்கத்தை கடந்த ஆண்டு மும்பை உயர் நீதிமன்றம் கடுமையாக விமரச்சித்தது. தண்டனையை இடைநீக்கம் தொடர்பாக பிறப்பித்த 2015ம் வருட உத்தரவையும் நீதிமன்றம் ரத்து செய்தது.
கடந்த ஆண்டு குடியரசு தினத்தன்று, மாநில அரசின் சாதனை பட்டியலில் என்கவுண்டர் தொடர்பான புள்ளிவிவரங்களும் தெரிவிகக்கப்பட்டன. போலீஸ் என்கவுண்டர் தொடர்பாக சுயாதீன விசாரணை மேற்கொள்ள அதிகாரம் படைத்த, ஒவ்வொரு மாவாட்ட நீதிபதிக்கும் இந்த சாதனை பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது.
2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற மகாராஷ்டிரா மாநிலம் vs மக்கள் சிவில் உரிமைகள் சங்கம் வழக்கில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, என்கவுண்டர் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது வழிகாட்டுதல்களில் தெரிவித்தது.