அரசு ஊழியர்களுக்கு 'உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியம்', 'உறுதிப்படுத்தப்பட்ட குடும்ப ஓய்வூதியம்' மற்றும் 'உறுதிப்படுத்தப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம்' ஆகியவற்றை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (யு.பி.எஸ்) மத்திய அமைச்சரவை நேற்று வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: What is Unified Pension Scheme?
இந்தத் திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வர உள்ளது. மேலும், ஊழியர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டம் (என்.பி.எஸ்) மற்றும் யு.பி.எஸ் ஆகியவற்றில் ஒன்றைத் தேர்வுசெய்யலாம்.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
📌 இத்திட்டம் ஒரு ‘உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியத்தை’ வழங்குகிறது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர் ஒருவர், ஓய்வு பெறுவதற்கு முன் 12 மாதங்களில் எடுக்கப்பட்ட சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறுவார். முழு ஓய்வூதியத் தொகையைப் பெறுவதற்கான தகுதியாக பணி காலம் 25 ஆண்டுகளாக இருக்கும். 25 ஆண்டுகளுக்கு குறைவாக அரசுப் பணியில் இருந்து 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஓய்வூதியத் தொகை விகிதாச்சார அடிப்படையில் கணக்கிடப்படும்.
📌 தற்போதைய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களின் பங்களிப்பு 10 சதவீதமும், மத்திய அரசின் பங்களிப்பு 14 சதவீதமும் உள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி மத்திய அரசின் பங்களிப்பு 18 சதவீதமாக உயர்த்தப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில், சுமார் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.
📌 ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமானது ஊழியரின் இறப்பிற்கு உடனடியாக 60 சதவீத ஓய்வூதியத்தில் 'உறுதிப்படுத்தப்பட்ட குடும்ப ஓய்வூதியத்தை' வழங்குகிறது.
📌 குறைந்தபட்சம் 10 வருடங்கள் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, மாதம் ஒன்றுக்கு 10,000 ரூபாய்க்கான ‘உறுதிப்படுத்தப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியத்தை’ இத்திட்டம் அங்கீகரிக்கிறது.
📌 தொழில்துறை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI-IW) அடிப்படையிலான அகவிலை நிவாரணம், 'உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியம்', 'உறுதிப்படுத்தப்பட்ட குடும்ப ஓய்வூதியம்' மற்றும் 'உறுதிப்படுத்தப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம்' ஆகியவற்றிலும் வழங்கப்படும்.
📌 பணிக்கொடையுடன் (கிராஜ்ஜூட்டி) கூடுதலாக, ஓய்வூதியத்தின் போது மொத்தத் தொகையும் வழங்கப்படும். இது நிறைவு செய்யப்பட்ட ஒவ்வொரு ஆறு மாத சேவைக்கும் ஓய்வுபெறும் தேதியின்படி மாதாந்திர ஊதியத்தில் (ஊதியம் + டி.ஏ) பத்தில் ஒரு பங்காக இருக்கும். கொடுப்பனவு உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியத்தின் அளவைக் குறைக்காது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“