Advertisment

ஓய்வூதியமாக 50% சம்பளம்: மத்திய அரசின் புதிய ஓய்வூதிய திட்டம்; அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

பணியாளரின் பணி ஓய்வுக்கு முன் கடந்த 12 மாத பணியில், வழங்கப்பட்ட சராசரி அடிப்படை ஊதியத்தை அடிப்படையாக வைத்து ஓய்வூதியம் வழங்கப்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Aswan

மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (யுபிஎஸ்) மத்திய அமைச்சரவை அளித்துள்ள நிலையில், இந்த ஓய்வூதிய திட்டம் அடுத்த ஏப்ரல் 1,ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்து. மேலும் இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தின் முக்கிய அம்சங்களில் 50 சதவீதம் உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியம், இறப்புக்குப் பிறகு குடும்ப ஓய்வூதியம் ஆகியவை அடங்கும்.

Advertisment

Read In English: After U-turn on lateral entry, govt dumps NPS; goes back to 50% salary as pension

ஊழியர்  மற்றும் அவரது வேலையில் ஓய்வூதிய திட்த்திற்கு தேவையான சேவை ஆண்டுகளை பூர்த்தி செய்யாதவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய முறையை மறுபரிசீலனை செய்வதற்காக 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்போதைய நிதிச் செயலாளர் டி.வி.சோமநாதன் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை அமைப்பதாக அரசாங்கம் அறிவித்து ஓராண்டுக்கு பிறகு மத்திய அமைச்சரவை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அமைச்சரவையின் முடிவுகளை அறிவித்த தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு, ஐந்து தூண்கள் இருக்கும். முதல் தூண் ஒரு முறையான வழியில் தேவைக்கு வேலை செய்த பிறகும், அந்த மாதிரிகளின் அடிப்படையில் ஆக்சுவேரியல் சயின்ஸ் மேக்கிங் கணிப்புகளைப் பயன்படுத்திய பிறகும் ஊழியர்களுக்கு உறுதிசெய்யப்பட்ட தொகையை வழங்கும்.

50 சதவீதம் உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படும், இது பணியாளரின் பணி ஓய்வுக்கு முன் கடந்த 12 மாத பணியில், வழங்கப்பட்ட சராசரி அடிப்படை ஊதியத்தை மையமாக வைத்து வழங்கப்படும். ஒரு பணியாளர் 25 வருடம் பணியாற்றினால் அவருக்கு முழு ஓய்வூதியம் கிடைக்கும். அதே சமயம் 25 ஆண்டுகளுக்கும் குறைவாக 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி இருந்தால், சார்பு விகித அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்படும், ”என்று வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஒரு ஊழியர் இறந்தால் உறுதிசெய்யப்பட்ட குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். ஒரு ஊழியர் இறந்தால், அவர் இறப்பதற்கு சற்று முன்பு வழங்கப்பட்ட ஓய்வூதியத்தில் 60 சதவீதம் அவர் இறந்த பிறகு அந்த ஊழியரின் குடும்பத்திற்கு வழங்கப்படும். புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு மற்ற அம்சங்களில் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 10,000, பணிக்காலம் குறைவாக உள்ள ஊழியர்கள் மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் அல்லது தற்போதுள்ள தேசிய ஓய்வூதிய அமைப்புடன் (NPS) தொடர்புடையவர்களுக்கு ஓய்வூதியத்திற்கு போதுமான தொகை இருக்காது.

பணி நிறைவின் போது பணிக்கொடையுடன் சேர்த்து ஊழியர்களுக்கு மொத்த தொகையும் வழங்கப்படும். இந்தத் தொகை ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் சேவையில் சேகரிக்கப்படும் மற்றும் மாதாந்திர ஊதியத்தில் 10 சதவிகிதம், அதாவது ஊதியம் மற்றும் அகவிலைப்படி ஆகியவை ஒன்றாக இருக்கும். இதன் மூலம் 23 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள்.  என்பிஎஸ்-ன் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய யுபிஎஸ் திட்டம் அவர்களின் விருப்பத்தேர்வாக இருக்கும் என்றும் வைஷ்ணவ் கூறினார்.

மேலும் கூடுதலாக, மாநிலங்களும் இந்த யுபிஎஸ் கட்டமைப்பைப் பயன்படுத்தலாம் என்று அவர் கூறியுள்ளார். அரசு ஊழியர்களும் இதில் இணைந்தால், 90 கோடி ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Pension Scheme
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment