பாலின சமத்துவம் மற்றும் சட்டத்தின் முன் சமத்துவம் ஆகிய கோட்பாடுகள் முன்மொழியப்பட்ட பொது சிவில் சட்டத்தில் வரையறைகளை வடிவமைக்க வாய்ப்புள்ளது. இதற்கான பரிந்துரைகள், இந்திய சட்ட ஆணையத்தால் மத அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து அழைக்கப்பட்டுள்ளன.
பாலின சமத்துவத்தின் அரசியலமைப்பு ஆணையுடன் முரண்படும் தனிப்பட்ட சட்டங்கள், முன்மொழியப்பட்ட பொது சிவில் சட்டத்தில் (UCC) ஆய்வு செய்யப்பட்டு தீர்க்கப்படும், என்று இந்தியன் எக்ஸ்பிரஸிடம் வட்டாரங்கள் தெரிவித்தன. பலதார மணத்தை அனுமதிக்கும் அல்லது சொத்துரிமை அல்லது திருமணத்தில் பெண்களுக்கு சம உரிமைகளை தடை செய்யும் சட்டங்கள் இதில் அடங்கும்.
திருமணம் மற்றும் வாரிசுரிமையின் அனைத்து அம்சங்களையும் ஆளும் தனிநபர் சட்டங்களில் பரந்த சீரான தன்மையைக் கொண்டுவர, தற்போதுள்ள சட்டங்களில் உள்ள மாற்றங்களின் சரமாக பொது சிவில் சட்டம் இருக்கக்கூடும் என்று ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
முன்மொழியப்பட்ட பொது சிவில் சட்டத்தின் முன், சமமாக நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக தனிச் சட்டங்களை மறுவடிவமைக்கும் வாய்ப்புள்ளது. எடுத்துக்காட்டாக, மிகக் குறுகிய, குறிப்பிட்ட காரணங்களின் கீழ் வாரிசு உரிமைகள் மறுக்கப்படும் நபர்கள் இதில் அடங்கும்.
ஒரு சமூகம் மற்றவர்களை விட அனுபவிக்கும் நன்மைகள் பிரச்சினையில், சட்ட ஆணையம் அதை முற்றிலுமாக கைவிடுவதற்கு ஆதரவாக இல்லை.
எடுத்துக்காட்டாக, இந்து பிரிக்கப்படாத குடும்பம் மற்றும் அது வழங்கும் வரிச் சலுகைகள், அதை அகற்றுவதற்குப் பதிலாக மற்ற சமூகங்களுக்கு விரிவுபடுத்துவது ஒரு விருப்பமாக இருக்கலாம். இது 1917 இல் வரிவிதிப்புக்கான ஒரு தனித்துவமான வகையாக முன்மொழியப்பட்டது,
(இந்து பிரிக்கப்படாத குடும்பம் அல்லது HUF என்பது இந்தியாவில் உள்ள இந்து குடும்பங்களால் உருவாக்கப்பட்டது. புத்த, ஜெயின், சீக்கியர்களும் இந்து பிரிக்கப்படாத குடும்பத்தை உருவாக்கலாம். இந்தச் சட்டத்தில், இந்து இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து, நிறுவனத்தை உருவாக்குவதன் மூலம் நல்ல தொகையை வரியைச் சேமிக்க முடியும்.)
பிரதமர் நரேந்திர மோடி பொது சிவில் சட்டத்துக்கு வலுவான ஆடுகளத்தை உருவாக்கினாலும் கூட- ஜூன் 14 அன்று சட்ட ஆணையம் அதன் ஆலோசனைப் பயிற்சியைத் தொடங்கிய பிறகு, முன்மொழியப்பட்ட சட்டத்தின் வரையறைகள் குறித்து அதிக விவாதம் உள்ளது.
ஜூலை 4 அன்று, சட்டத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவரும், பாஜக எம்பியுமான சுஷில் குமார் மோடி, வடகிழக்கு உள்ளிட்ட பழங்குடியினப் பகுதிகளில் அவர்களின் பழக்கவழக்கங்கள், மரபுகள் மற்றும் சடங்குகள் வேறுபட்டவை மற்றும் அரசியலமைப்பு அவர்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறது என்பதால் பொது சிவில் சட்டம் அமைப்பது சாத்தியமா என்று கேள்வி எழுப்பியதாக அறியப்படுகிறது.
இருப்பினும், பொது சிவில் சட்டம் (UCC) மீதான விவாதத்திலிருந்து மத நடைமுறைகளை பரிந்துரைக்கும் குறிப்பிட்ட பழக்கவழக்கங்களை விட்டுவிட ஆணையம் யோசித்து வருவதாக அறியப்படுகிறது.
ஜூன் 14 அன்று, கர்நாடக உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி தலைமையிலான 22வது சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் குறித்த பொதுமக்களின் கருத்துக்களை அழைத்தது.
இதுவரை, கமிஷன் மின்னஞ்சல் மூலம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பதில்களைப் பெற்றுள்ளது, மேலும் இவை தொடர்ந்து குவிந்து வருகின்றன. அடுத்த சில மாதங்களில், ஆணையம் நாடு தழுவிய பொது ஆலோசனைகளைத் தொடங்கும் மற்றும் இதுதொடர்பாக குடிமக்களுடன் விரிவான கேள்வித்தாளைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“