'மத்திய பட்ஜெட்டின் நிதி கணிதம் தவறாக இருக்குமோ என்பதே என் கவலை' - மன்மோகன் சிங்

விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக வழிவகை செய்யப்படும் என அறிவித்துள்ளார்கள். அது எப்படி?

2018-19-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார்.

இதுகுறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அளித்துள்ள பேட்டியில், “தேர்தலுக்காக மத்திய அரசின் பட்ஜெட்டை நான் குறை கூற விரும்பவில்லை. ஆனால், பட்ஜெட் நிதி கணிதம் தவறாக உள்ளது என நினைக்கிறேன். பிரகாசமான புகைப்படம் ஒன்றை நன்றாக புரஜெக்ட் செய்வது போல் உள்ளது இந்த மத்திய பட்ஜெட். ஆனால், அது எவ்வாறு நிலைத்திருக்கும் என்பதற்கான பதில் இல்லை.

விவசாயம் சார்ந்த பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அதனை தீர்ப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்து எந்த விளக்கமும் இல்லை.

விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக வழிவகை செய்யப்படும் என அறிவித்துள்ளார்கள். இந்த உறுதியை எப்படி நிறைவேற்றப் போகிறார்கள் என்பது குறித்தும் விளக்கமில்லை.

மத்திய அரசின் இந்த பட்ஜெட் சீர்திருத்தம் சார்ந்ததா? என்ற கேள்விக்கு மன்மோகன் சிங், ‘இதற்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. ஆனால், சீர்திருத்தம் என்ற சொல்ல பலமுறை தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.

×Close
×Close