/tamil-ie/media/media_files/uploads/2019/07/template-69.jpg)
Nirmala Sitharaman
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து மீண்டும் ஆட்சியமைத்தது பா.ஜ.க.
இதைத் தொடர்ந்து இன்று மக்களவையில் 2019-2020-ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதியமைச்சர் தாக்கல் செய்து உரையாற்றினார். பட்ஜெட் சம்பந்தமக பேசிக் கொண்டிருந்த அவர், திடீரென்று சங்கத் தமிழ் காலத்தையும் நினைவுக் கூர்ந்தார்.
Budget 2019 Explained Live: மின் வாகனம் தயாரிப்புக்கு 10,000 கோடியுடன் கூடுதல் சலுகைகள்
ஒரு நாட்டில் எப்படி வரி வசூல் செய்ய வேண்டும் என்பதை ‘யானை புகுந்த நிலம்’ என்ற பிசிராந்தையாரின் கூற்றை மேற்கோள் காட்டி பேசினார் நிர்மலா. மன்னன் பாண்டியன் அறிவுடை நம்பிக்கு பிசிராந்தையார் கூறிய அறிவுரையில் முதலில், நடுவில் மற்றும் கடைசியில் உள்ள சில வரிகளைக் கூறுவதாகக் கூறிய அவர்,
“காய் நெல்லறுத்துக் கவளம் கொளினே
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம் போல
தாணும் உண்ணான், உலகமும் கெடுமே”
என்ற புறநானூற்று செய்யுளை வரி வசூல் செய்வதற்கு மேற்கோள் காட்டினார். இந்த செய்யுளை வாசித்து விட்டு, பின்னர் ஆங்கிலத்தில் இதற்கான பொருளை விளக்கினார்.
அவையில் அமர்ந்திருந்த தமிழக எம்.பி-க்கள் ஆ.ராசாவும், தயாநிதி மாறனும் நிர்மலா சீதாராமன் புறநானூற்றுப் பாடலை வாசிக்கும் போது புன்னைகையுடன் அவர்களும், வாய்க்குள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.