'ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம்' பக்கம் திரும்பிய அரசின் கவனம்... பட்ஜெட் தாக்கலில் குறிப்பிடப்பட்ட இயற்கை விவசாயி யார்?

1,63,034 விவசாயிகள் மட்டுமே பின்பற்றி வந்த இயற்கை விவசாயம் தற்போது சுபாஷ் பலேகரால் 50 லட்சம் பேரால் பின்பற்றப்படுகிறது. 

1,63,034 விவசாயிகள் மட்டுமே பின்பற்றி வந்த இயற்கை விவசாயம் தற்போது சுபாஷ் பலேகரால் 50 லட்சம் பேரால் பின்பற்றப்படுகிறது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Union Budget 2019 Zero Budget Natural Farming, Subhash palekar

Union Budget 2019 Zero Budget Natural Farming

Union Budget 2019 Zero Budget Natural Farming : 5ம் தேதி மத்திய முழு நிதிநிலை அறிக்கையை சமர்பித்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். 4ம் தேதி வெளியிடப்பட்ட பொருளாதார அறிக்கை மற்றும் 5ம் தேதி வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கை இரண்டும் மிகமுக்கியமான கருத்து ஒன்றினை முன்வைத்தது. இயற்கை விவசாயம். ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் செய்வதால் இரண்டு மடங்கிற்கும் மேலாக விவசாயிகளால் லாபம் பெற முடியும் என்று கூறிய கையோடும் சுபாஷ் பலேகர் என்ற விவசாயி குறித்தும் அவர் கூறினார்.

Advertisment

ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் செய்வதால், ரசாயன பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டினை முற்றிலுமாக தவிர்க்கலாம் என்று கூறினார்.  1,63,034 விவசாயிகள் மட்டுமே பின்பற்றி வந்த இயற்கை விவசாயம் தற்போது சுபாஷ் பலேகரால் 50 லட்சம் பேரால் பின்பற்றப்படுகிறது.

ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்றால் என்ன?

ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்பது நீங்கள் விவசாயத்திற்கு தேவையான எந்த ஒரு இடுபொருளுக்கும் பணம் செலவழிக்க வேண்டாம் என்பது தான். தாவரங்களுக்கு தேவையான 98% சத்துகள் கார்பன் டை ஆக்ஸைடு, நைட்ரஜன், தண்ணீர், சோலார் எனெர்ஜி போன்றவைகள் இயற்கையாகவே கிடைக்கிறது. மீதம் இருக்கும் 2% சத்துக்களை மண்ணில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். மண்ணில் இருக்கும் நுண்ணியிரிகளால் இது சாத்தியமாகிறது.

மேலும் படிக்க : எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பட்ஜெட் 2019…

பத்மஸ்ரீ விருது பெற்ற சுபாஷ் பலேகரின் கருத்து

Advertisment
Advertisements

1990களில் தன்னிடம் இருந்த 36 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார் சுபாஷ். மகாராஷ்ட்ராவின் வறண்ட நிலங்களாக கருதப்படும் விதர்பா பகுதியில் உள்ள அமராவதி மாவட்டத்தில் இருக்கும் பெலுராவில் இந்த திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்.

ஜீவாமிர்தம், பிஜாம்ரிதம், முல்சிங், மற்றும் வாபசா என்ற நான்கு முறைகளை பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்துவருகிறார். ஜீவாமிர்தம் என்பது நாட்டு மாடுகளின் சாணம், கோமியம், மற்றும் வெல்லம், பருப்பு மாவு, தண்ணீர், மண் ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படும் ஒன்றாகும். இது நிலத்திற்கு தேவையான அனைத்து சத்துகளையும் தரக்கூடியது.

பிஜமிர்தம் என்பது நாட்டு மாடுகளின் சாணம், கோமியம், தண்ணீர் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை மருந்தாக பயன்படுத்துவது. முல்சிங் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக புல் மற்றும் இழை தழைகளை நிலட்தில் பரப்புவது. இதனால் நிலத்தின் வெப்பநிலை 25 முதல் 32 டிகிரி செல்சியஸில் பாதுகாக்கப்படும்.  வாபசா என்பது நிலத்திற்கு தேவையான நீரை தேவை அறிந்து வழங்குவது ஆகும்.

வேம்பு, கொய்யா, பப்பாளி, மாதுளை ஆகிய தாவரங்களில் இருந்து எடுக்கப்படும் அக்னி அஸ்திரா, பிரம்ஹஸ்திரா, நீமாஸ்திரா ஆகியவற்றை பூச்சிக்கொல்லிகளாக பயன்படுத்துவோம் என்று கூறியுள்ளார்.

Union Budget 2019 Zero Budget Natural Farming

இவை மேற்கு நாடுகளில் நடைமுறையில் இருக்கும் ஆர்கானிக் ஃபார்மிங்க் இல்லை தானே என்று கேட்டபோது இல்லை என்று கூறிய அவர்கள் பயன்படுத்தும் மண்புழு உரமானது, எய்செனியா ஃபெடிடா என்ற கனடா மற்றும் ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மண்புழுக்களாகும். அவை மிகவும் கடினமான உலோகங்களையும் செரிக்கும் சக்தி கொண்டவை என்பதால், இது வயலில் ரசாயனத்தை அதிகரிக்குமே தவிர குறைக்காது என இரண்டு விவசாயத்திற்கும் இடையேயான வேறுபாட்டை கூறினார்.

ஆனால் அனைத்து விவசாயிகளாலும் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. பணமே இல்லை என்றாலும், எரு, உரம் ஆகியவை வாங்குவதற்கு பணம் வேண்டும். மிகவும் குறைவாகவே பால் கறக்கும் நாட்டுமாடுகளை வைத்திருக்க எத்தனை விவசாயிகள் விரும்புவார்கள் என்று கேள்வியும் எழுப்புகின்றனர்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: