Finance Minister Nirmala Sitharaaman Speech : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கடந்த 1-ந் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த கூட்டத்தொடரின் முதல் அமர்வு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டத்தில், மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்து பேசினார்.
இந்த ஆண்டு பட்ஜெட் குறித்து விவாதிக்க ஆர்வம் காட்டிய அனைவருக்கும் நன்றி என்று கூறி தனது உரையை தொடங்கிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியா தற்சார்பு பாதையை நோக்கி செல்ல இந்த பட்ஜெட் வழிவகுக்கும் என்று கூறினார். மேலும் இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சீர்திருத்தங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கான சிகிச்சை மையத்தை சீரமைக்கவும், தொற்று நோய் பாதிப்பு காரணமாக சீர்தித்தங்களை கொண்டு வர பிரதமர் மோடி தயக்கம் காட்டிவில்லை என்றும், கொரோனா தொற்றுக்கு பின் இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட் உதவும் என்றும் தெரிவித்தார்.
இந்த பட்ஜெட் தேவையான மறுவளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் என்று கூறியுள்ள அவர், உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா மிக வேகமாக கொரோனா தொற்றை கட்டுப்படுத்தியுள்ளது. இந்த தொற்று நோயினால் சரிவடைந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்த பட்ஜெட் பெரிதும் உதவும்.இந்தியாவை உலகின் சிறந்த பொருளாதாரமிக்க நாடுகளின் ஒன்றாக மாற்றும் கொள்கையுடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதற்காக அரசாங்கத்தின் அணுகுமுறை தைரியமானவர்கள் என்ற அடையாளத்தைகுறிக்கும் வகையில் உள்ளது. இந்த சீர்திருத்தங்களுக்கு தலைமைதாங்கும் பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து பாஜக சீர்திருத்தம் கொண்டு வரவில்லை, அவர்களுக்கு பொருளாதாரம் தெரியாது என்று குற்றம் சாட்டிய காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய நிர்மலா சீதாராமன், 1948-ம் ஆண்டு முதல் இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் காங்கிரஸ் கட்சிதான். மேலும் வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காக காங்கரஸ் கட்சி விவசாய கடன்களை ரத்து செய்ததாகவும் தெரிவித்தார். மேலும் நாடு முழுவதும் 10 கோடி விவசாயிகளுக்கு 1.15 லட்சம் கோடி ரூபாய் சலுகைகள் பிரதமர் எஸ்.வி.நிதி யோஜனா மூலம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து பேசிய அவர், நாட்டின் பிற பகுதிகளில் உள்ள விவசாயிகள் அனுபவிக்கும் சலுகைகளை மேற்கு வங்க விவசாயிகள் அனுபவிக்க கூடாது என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி செயல்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் பாஜக அரசு முதலாளிகளுக்காக பணியாற்றுககிறது என்று கூறிய ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள நிர்மலா சீதாராமன், ராகுல்காந்தி தவறான தகவல்களை பரப்புவதை வழக்கமாக வைத்துள்ளார். நாங்கள் மக்களுக்காக பணியாற்றுகிறோம். முதலாளிகளுக்காக அல்ல என்று தெரிவித்துள்ளார்.