பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள 2021-22-ம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டில், அரசுக்கு செலுத்தும் வருமான வரியில் சில சலுகைகள் தரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள 2021-22-ம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டில், அரசுக்கு செலுத்தும் வருமான வரியில் சில சலுகைகள் தரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2021-22-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 15-ம் தேதி வரை நடக்கிறது. அதன்பிறகு இரண்டாம் அமர்வு மார்ச் 8-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
Advertisment
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மழைக்கால கூட்டத்தொடர் தாமதமாக தொடங்கி, முன் கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்பட வில்லை. இதைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இது இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். அவரது உரையை புறக்கணிக்க காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள 2021-22-ம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டில், அரசுக்கு செலுத்தும் வருமான வரியில் சில சலுகைகள் தரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. வரிகளை குறைப்பதன் மூலம் அதிக தேவை இருக்கும், இதன் மூலம் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும். மற்றும் வைப்பு நிதியிலும் வரிச்சலுகைகள் அளிக்கப்பட உள்ளதாக படஜெட் கூட்டத்தொடரோடு தொடர்புடைய சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வரி செலுத்தும் அனைவருக்கும் மருத்துவ செலவினங்களுக்கான வரி சலுகைகளை விரிவுபடுத்தப்படுவது, வீட்டுக் கடன்களுக்கான வட்டி வீத வரம்புகளை உயர்த்துவது, கடந்த பட்ஜெட் தொடரில் அறிவித்தது போல புதியதாக வீடு வாங்குபவர்களுக்கு வரி செல்லுவதில் சலுகை வழங்குவது, பயண சீட்டுகளுக்கான சலுகை வழங்குவது என நிறைய எதிர்பார்ப்புகள், இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு இருந்தன.
Advertisment
Advertisements
ஆனால் இது போன்ற எந்த சலுகைகளும் புதியதாக தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் சேர்க்கப்படவில்லை என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதோடு இந்த புதிய பட்ஜெட் முற்றிலும் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு தயார் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஈபிஎஃப் பங்களிப்பு, கல்விக் கட்டணம் செலுத்துவதில் சலுகை, , வீட்டுக் கடன்களுக்கான வரிச்சலுகை, மருத்துவ காப்பீட்டு பிரீமியம் போன்றவற்றிற்கு கடந்த நிதி ஆண்டில் சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. அவைகள் இந்த நிதி ஆண்டில் அறிவிக்கப்பட உள்ள திட்டங்களோடு விருப்ப தெரிவாக அறிவிக்கப்பட உள்ளன. அதோடு இந்த நிதி ஆண்டில் 5 லட்சம் முதல் 12.5 லட்சம் வருமானமாக பெறுவோருக்கு 10% முதல் 30% வரை வருமான வரியாக விதிக்கப்பட வாய்ப்புள்ளதா கூறப்படுகின்றது.
ஜி.எஸ்.டி.வரி விதிப்பில் ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில், அரசாங்கத்தின் நேரடி வரி வருவாய் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 12 சதவீதம் குறைந்து சுமார் 6.12 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஒட்டுமொத்த அடிப்படையில், ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாதங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்குகள் உட்பட மொத்த ஜிஎஸ்டி வசூல் ஆண்டுக்கு 14.1 சதவீதத்தை கொண்டதாக இருந்தது. கொரானா தொற்றுக்கு தளர்வு அளிக்கப்பட்ட பின்பு வரி வசூலில் அரசு முன்னேற்றம் பெற்று இருந்தது.
இந்த ஆண்டில் நேரடி வரிகளில் பெரிய மாற்றங்களை கொண்டு வருவதை விட குறைந்த மற்றும் மறைமுக வரிகளில் மத்திய அரசு கவனம் செலுத்த போவதாக கூறப்படுகின்றது. உற்பத்தி துறையில் அறிமுமாகியுள்ளவர்களுக்கு இறக்குமதி வரி குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதோடு மற்ற சில துறைகளுக்கும் ஜி.எஸ்.டி.வரி விதிப்பில் வரிச்சலுகை அளிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil