/tamil-ie/media/media_files/uploads/2022/02/Sitharaman.jpg)
Union Budget 2022-23 highlights: 2022-23-ஆம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை இன்று காலை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். காலை 11 மணிக்கு துவங்கிய பட்ஜெட் தாக்கல் நிகழ்வில் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியானது.
நேற்றைய பொருளாதார அறிக்கையிலும் இன்றைய பட்ஜெட்டிலும், கொரோனா ஊரடங்கு காலத்திலும் இந்திய பொருளாதாரம் சீராக பயணிக்க விவசாயத்துறையின் பங்கீடு மிக முக்கியமாக இருந்தது என்பது தெரிவிக்கப்பட்டது.
குறைந்தபட்ச ஆதரவு விலையில் கோதுமை மற்றும் நெல் கொள்முதல் செய்ய ரூ.2.37 லட்சம் கோடியை மத்திய அரசு செலுத்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்படும் கோதுமை மற்றும் நெல்லி அளவானது 1208 லட்சம் மெட்ரிக் டன்கள் என்றும் இதனால் 163 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை, ஜீரோ பட்ஜெட் மற்றும் இயற்கை விவசாயம், நவீன விவசாயம் ஆகியவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்ய விவசாயப் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்களைத் திருத்துவதற்கு மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும் என்று அறிவித்தார் நிர்மலா சீதாராமன். கூட்டு முதலீட்டு திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மூலதன கலவை நிதியை வைத்து, விவசாய துறையில் புதிய தொழில்களை துவங்கும் நபர்களுக்கு, நபார்டு மூலம் கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.