Budget 2022 Updates, Budget 2022 Latest News in Tamil: ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற இருக்கின்ற நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் திங்கள் கிழமை அன்று (31/01/2022) குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் உரையுடன் துவங்கியது. காலை 11 மணிக்கு துவங்கிய அவரது உரையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் அறிமுகம் செய்யப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினார். மேலும் கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் வருங்காலத்தில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்தும் தன்னுடைய உரையில் பதிவு செய்தார்.
மத்திய அரசின் தடுப்பூசி, உணவு விநியோகம் உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு, ஜனாதிபதி உரையில் பாராட்டு
31ம் தேதி துவங்கியுள்ள இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வருகின்ற ஏப்ரல் மாதம் 8ம் தேதி வரை நடைபெறும். முதல் கட்ட அமர்வு 31ம் தேதி துவங்கி பிப்ரவரி 11ம் தேதி வரை நடைபெறும். பிறகு பிப்ரவரி 12ம் தேதி துவங்கி மார்ச் மாதம் 13ம் தேதி வரை நாடாளுமன்ற நிலைக்குழு இந்த பட்ஜெ தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டு பிறகு இரண்டாம் கட்ட அமர்வு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியினரின் ஒற்றுமையை நிரூபிக்க மேலும் ஒரு சோதனை
பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து குரல் எழுப்ப எதிர்க்கட்சியினர் முடிவு செய்ள்ளனர். ஆனாலும் ஐந்து மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெற இருக்கின்ற சூழலில் ஒவ்வொரு கட்சியினரும் மற்றொரு கட்சியை எதிர்த்து போட்டியிடுகிறது. எனவே கடந்த ஆண்டு வேற்றுமைகளை கலைந்து விவசாய போராட்டங்கள் குறித்து எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பியது போன்று இந்த முறை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் குரல் ஓங்கி ஒலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக மேலும் படிக்க
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 16:19 (IST) 01 Feb 2022எரிவாயு மீது வரி விதிக்கப்பட்டது ஏன்? நிதியமைச்சர் விளக்கம்
எத்தனால் கலக்கப்பட்ட எரிவாயுவை ஊக்குவிப்பதால் எரிவாயு மீது வரி விதிக்கப்பட்டுள்ளது. வரி விதிப்பு அரசின் நோக்கமல்ல, எத்தனால் கலக்கப்பட வேண்டும் என்பதே முக்கியம் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்
- 16:16 (IST) 01 Feb 2022நடப்பாண்டில் ஒரு ரூபாய் கூட வரி உயர்த்தப்படவில்லை - நிர்மலா சீதாராமன்
கொரோனா காலத்தில் அதிக சவால்களை எதிர்கொண்ட போதும் நடப்பாண்டில் ஒரு ரூபாய் கூட வரி உயர்த்தப்படவில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
- 16:02 (IST) 01 Feb 2022ஏர் இந்தியாவின் கடனை அடைக்க அரசாங்கம் கூடுதலாக 51,971 கோடி ரூபாய் ஒதுக்கீடு
ஏர் இந்தியாவின் மிக உயர்ந்த முதலீட்டுச் செயல்முறையை மூடிவிட்டு, சிறப்பு நோக்க வாகனத்திற்கு (SPV) மாற்றிய விமான நிறுவனத்தின் கடனைத் திரும்பப் பெற அரசாங்கம் முடிவு செய்தது. 2022-23 யூனியன் பட்ஜெட்டில், ஏர் இந்தியாவின் நிலுவையிலுள்ள உத்தரவாதக் கடன்கள் மற்றும் அதன் பிற பல்வேறு பொறுப்புகளைத் தீர்ப்பதற்காக அரசாங்கம் கூடுதலாக ரூ.51,971 கோடியை ஒதுக்கியது. இந்தத் தொகை 2021-22ல் மொத்த செலவினங்களின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் கணக்கிடப்பட்டுள்ளது.
- 15:58 (IST) 01 Feb 2022இந்த பட்ஜெட் விவசாயிகளின் நலனுக்கான முக்கிய நடவடிக்கை - பிரதமர் மோடி
இந்த பட்ஜெட்டில் கங்கை நதியை சுத்தப்படுத்தும் முயற்சியை தவிர, விவசாயிகளின் நலனுக்காக ஒரு முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கங்கைக் கரையில் இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும். இது நதியை ரசாயனமற்ற நதியாக மாற்ற உதவும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- 15:28 (IST) 01 Feb 2022முன்னேற்றகரமான பட்ஜெட்டுக்கு நிதியமைச்சருக்கு வாழ்த்துகள் - பிரதமர் மோடி
இந்த மக்கள் நல மற்றும் முற்போக்கான பட்ஜெட்டுக்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வாழ்த்துகிறேன். நாளை காலை 11 மணிக்கு பட்ஜெட் குறித்து விரிவாக பேசுவேன்.
இந்த பட்ஜெட் மக்களுக்கு புதிய நம்பிக்கைகளையும் வாய்ப்புகளையும் கொண்டு வருகிறது. இது பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறது மற்றும் உள்கட்டமைப்பு துறைக்கு ஒரு சிறந்த படியாகும். இது அதிக முதலீடு, அதிக வளர்ச்சி மற்றும் அதிக வேலை வாய்ப்புகளைத் தூண்டுகிறது. புதிய பசுமை வேலை வாய்ப்புகளும் உள்ளது மற்றும் இளைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
- 15:13 (IST) 01 Feb 2022ஜிடிபி கணிப்பு இந்தியா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை காட்டுகிறது: ப சிதம்பரம்
காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்து பேசுகையில், ஜிடிபி வளர்ச்சி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா இருந்ததை காட்டுகிறது என்றார். "எளிமையான மொழியில், 31.3.2022 அன்று GDP 31-3-2020 அன்று இருந்த அதே அளவில் இருக்கும் என்று அர்த்தம்" என்று அவர் ட்விட்டரில் எழுதினார்.
In plain language, it means that on 31.3.2022 the GDP will be at the same level as it was on 31-3-3020
— P. Chidambaram (@PChidambaram_IN) January 31, 2022
It means that it has taken two years to go back to where we were on 31-3-2020 - 15:04 (IST) 01 Feb 2022ஜிடிபி கணிப்பு இந்தியா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை காட்டுகிறது: ப சிதம்பரம்
காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்து பேசுகையில், ஜிடிபி வளர்ச்சி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா இருந்ததை காட்டுகிறது என்றார். "எளிமையான மொழியில், 31.3.2022 அன்று GDP 31-3-2020 அன்று இருந்த அதே அளவில் இருக்கும் என்று அர்த்தம்" என்று அவர் ட்விட்டரில் எழுதினார்.
In plain language, it means that on 31.3.2022 the GDP will be at the same level as it was on 31-3-3020
— P. Chidambaram (@PChidambaram_IN) January 31, 2022
It means that it has taken two years to go back to where we were on 31-3-2020 - 14:00 (IST) 01 Feb 2022'ஜீரோ கணக்கு பட்ஜெட்': ராகுல் காந்தி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த பட்ஜெட்டில் சம்பளம் வாங்குபவர்கள், நடுத்தர மக்கள், ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் MSME களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை என்று கடுமையாக சாடியுள்ளார்
M0di G0vernment’s Zer0 Sum Budget!
— Rahul Gandhi (@RahulGandhi) February 1, 2022
Nothing for
- Salaried class
- Middle class
- The poor & deprived
- Youth
- Farmers
- MSMEs - 13:58 (IST) 01 Feb 2022'ஜீரோ கணக்கு பட்ஜெட்': ராகுல் காந்தி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த பட்ஜெட்டில் சம்பளம் வாங்குபவர்கள், நடுத்தர மக்கள், ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் MSME களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை என்று கடுமையாக சாடியுள்ளார்
M0di G0vernment’s Zer0 Sum Budget!
— Rahul Gandhi (@RahulGandhi) February 1, 2022
Nothing for
- Salaried class
- Middle class
- The poor & deprived
- Youth
- Farmers
- MSMEs - 13:35 (IST) 01 Feb 2022பட்ஜெட் நீண்டகால வளர்ச்சி ஆதரவில் கவனம் செலுத்துகிறது; நிபுணர் கருத்து
கோடக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸின் மூத்த பொருளாதார நிபுணர் சுவோதீப் ரக்ஷித், பட்ஜெட் குறித்து கூறுகையில் “யூனியன் பட்ஜெட் நீண்டகால வளர்ச்சி ஆதரவில் அரசாங்கத்தின் கவனத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மூலதனச் செலவை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதோடு, சுத்தமான எரிசக்தி போன்ற எதிர்கால வளர்ச்சி இயக்கிகள் மீதும் கவனம் செலுத்துவது பட்ஜெட்டின் முக்கிய நேர்மையான அம்சங்களாகும். நிதிப்பற்றாக்குறை இலக்குகள் மற்றும் வரவு செலவுத் திட்ட வரவுகள் மற்றும் செலவினங்கள் எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப உள்ளன.
- 13:29 (IST) 01 Feb 2022பெரும் நிறுவனங்களுக்கான கூடுதல் வரி 12-ல் இருந்து 7% ஆக குறைப்பு – நிதியமைச்சர்
பெரும் நிறுவனங்களுக்கான கூடுதல் வரி 12-ல் இருந்து 7% ஆக குறைக்கப்படுதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்
- 13:20 (IST) 01 Feb 2022பட்டியலிடப்படாத பங்குகள் மீதான கூடுதல் கட்டணம் 28.5% லிருந்து 23% ஆக குறைப்பு
ஸ்டார்ட்அப்கள் மற்றும் யூனிகார்ன் நிறுவனங்களில் இருந்து வெளியேறுவதை எளிதாக்கும் நடவடிக்கையில், பட்டியலிடப்படாத பங்குகள் மீதான கூடுதல் கட்டணத்தை 28.5 சதவீதத்தில் இருந்து 23 சதவீதமாகக் குறைப்பதாக நிதி அமைச்சர் அறிவித்தார்.
- 13:09 (IST) 01 Feb 2022மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு இறக்குமதி வரியை 7.5% குறைக்க முடிவு – நிதியமைச்சர்
மொபைல் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு இறக்குமதி வரியை 7.5 சதவீதமாக குறைக்க முடிவு செய்திருப்பதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்
- 13:06 (IST) 01 Feb 2022கிரிப்டோ கரன்சி சொத்துக்களிலிருந்து கிடைக்கும் லாபங்களுக்கு 30% வரி
பிளாக்செயின் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் புதிய டிஜிட்டல் ரூபாய் 2022-23 முதல் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் என்று மத்திய பட்ஜெட் 2022 இன் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதை அறிவித்தார். மேலும், கிரிப்டோ கரன்சி சொத்துக்களிலிருந்து கிடைக்கும் லாபங்களுக்கு 30% வரி விதிக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
- 12:59 (IST) 01 Feb 2022கிரிப்டோ கரன்சி மசோதா கூட இல்லாமல் எப்படி கிரிப்டோ கரன்சிக்கு வரி விதிக்க இயலும்?
கிரிப்டோ கரன்சி மசோதா கூட இல்லாமல் எப்படி கிரிப்டோ கரன்சிக்கு வரி விதிக்க இயலும்? நிதி அமைச்சர் இந்தியாவிற்கு ஒரு விசயத்தை தெளிவுப்படுத்த வேண்டும். கிரிப்டோ கரன்சி தற்போது இந்தியாவில் சட்டப்பூர்வமானதா? கிரிப்டோ கரன்சி மசோதா கூட இல்லாமல் கிரிப்டோ கரன்சிக்கு எப்படி வரி விதிக்க முடியும். ஒழுங்குமுறைகள் என்ன? ஒழுங்குமுறை அமைப்பு என்ன? முதலீட்டாளர்களின் பாதுகாப்பு குறித்து என்ன அறிவிப்பு இருக்கிறது என்று ரந்தீப் சிங் சர்ஜேவாலா ட்வீட்டில் கேள்வி.
And Ms. Finance Minister, pl do tell the Nation -
Is Crypto Currency now legal, without bringing the Crypto Currency Bill, as you tax the crypto currency?
• What about its regulator?
• What about regulation of Crypto Exchanges?
• What about investor protection?budget2022
— Randeep Singh Surjewala (@rssurjewala) February 1, 2022 - 12:53 (IST) 01 Feb 2022பட்ஜெட் தாக்கல் நிறைவுற்றது; நாளை வரை மக்களவை ஒத்திவைப்பு
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில் நாளை வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- 12:48 (IST) 01 Feb 2022குடைகளுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கும்
குடைகளுக்கான இறக்குமதி 20% அதிகரிக்கும் என்று நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
- 12:35 (IST) 01 Feb 2022வருமான வரி விகித மாற்றம் குறித்து அறிவிப்பு இடம் பெறவில்லை
பொதுமக்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2022-23 ஆண்டுக்கான தனிநபர் வருமான வரி விகித மாற்றம் குறித்து எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- 12:33 (IST) 01 Feb 2022இறக்குமதி வரி 5% ஆக குறையும்
வைரங்கள் மற்றும் ஆபரண கற்களுக்கான இறக்குமதி வரி 5% ஆக குறையும் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
- 12:32 (IST) 01 Feb 2022நிதி பற்றாக்குறை 6.4% ஆக குறையும்
வரும் ஆண்டில் செலவு 39.5 லட்சம் கோடியாகவும் வருமானம் 22.8 லட்சம் கோடியாகவும் இருக்கும் என்று அமைச்சர் அறிவிப்பு
- 12:25 (IST) 01 Feb 2022கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் ஜி.எஸ்.டி. வசூல் அதிகரித்துள்ளது
கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் ஜி.எஸ்.டி. வசூல் அதிகரித்துள்ளது என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
- 12:15 (IST) 01 Feb 2022கூட்டுறவு சங்கங்களுக்கு மாற்றுவரி குறைப்பு
கூட்டுறவு சங்கங்களுக்கான மாற்றுவரி 15% ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- 12:11 (IST) 01 Feb 2022நேரடி வரி
வரி செலுத்தும் மக்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என்று கூறி மகாபாரதத்தில் உள்ள வரிகளை கூறியுள்ளார் நிர்மலா சீதாராமன். வரி செலுத்தும் போது ஏற்படும் தவறுகளை சரி செய்து கொள்ளும் வகையில், வரி செலுத்துபவர்களுக்கு வாய்ப்புகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இரண்டு ஆண்டுகளில் திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய புதிய வசதி வழி வகை செய்யும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ள்ளார்.
- 12:10 (IST) 01 Feb 2022நேரடி வரி
வரி செலுத்தும் மக்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என்று கூறி மகாபாரதத்தில் உள்ள வரிகளை கூறியுள்ளார் நிர்மலா சீதாராமன். வரி செலுத்தும் போது ஏற்படும் தவறுகளை சரி செய்து கொள்ளும் வகையில், வரி செலுத்துபவர்களுக்கு வாய்ப்புகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இரண்டு ஆண்டுகளில் திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய புதிய வசதி வழி வகை செய்யும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ள்ளார்.
- 12:06 (IST) 01 Feb 2022ஆர்.பி.ஐ. சார்பில் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும்
டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்யும் என்றும் அதற்காக ஆர்.பி.ஐ. விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு 2023ம் ஆண்டில் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
- 12:06 (IST) 01 Feb 2022மாநிலங்களுக்கு ரூ. 1 லட்சம் கோடி வட்டியில்லா கடன் அறிவிப்பு
மாநிலங்களுக்கு உதவும் வகையில் ரூ. 1 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்றும் மாநிலங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
- 12:03 (IST) 01 Feb 2022மின்சார வாகனங்களின் உற்பத்தி ஊக்குவிக்கப்படும்
மின்சார வாகனங்களின் உற்பத்தி ஊக்குவிக்கப்படும். மேலும் சார்ஜ் போடுவதற்கு பதிலாக பேட்டரி மாற்றும் வசதிகள் ஏற்படுத்துவதை உறுதி செய்ய கொள்கை ரீதியாக மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
- 12:00 (IST) 01 Feb 2022அனைத்து கிராமங்களிலும் இணைய வசதி
2025ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களிலும் ஃபைபர் ஆப்டிக் மூலம் இணைய வசதி ஏற்படுத்தப்படும் என்றும், அனைத்து கிராமங்களிலும் பொது மற்றும் தனியார் துறை பங்களிப்பில் இணைய வசதி ஏற்படுத்தப்படும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
- 11:54 (IST) 01 Feb 2022எல்.ஐ.சி. பங்குகள் விற்பனை விரைவில் துவங்கும்
எல்.ஐ.சி. காப்பீட்டு நிறுவனத்தில் இருக்கும் அரசின் பங்குகளின் விற்பனை விரைவில் துவங்கும் என்று மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
- 11:52 (IST) 01 Feb 2022பாதுகாப்பு தளவடாங்கள் உள்நாட்டிலேயே கொள்முதல் செய்யப்படும்
பாதுகாப்பு துறைக்கு தேவையான தளவாடங்களில் 68%-த்தை உள்நாட்டிலேயே கொள்முதல் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
- 11:51 (IST) 01 Feb 2022ஒரு நாடு ஒரு பதிவு
நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகிரது. நாட்டின் எந்த ஒரு பகுதியில் இருந்து பத்திரப்பதிவுகளை மேற்கொள்ள ஒரு நாடு ஒரு பதிவு திட்டம் கொண்டு வரப்படும் என்றும் அறிவிப்பு.
- 11:50 (IST) 01 Feb 2022சிப் பொருத்திய இ-பாஸ்பார்ட்
நவீன தொழில்நுட்பத்துடன் சிப் பொருத்திய இ-பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- 11:49 (IST) 01 Feb 2022விரைவில் 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்படும்
நடப்பாண்டில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நடைபெறும் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
- 11:37 (IST) 01 Feb 2022டிஜிட்டல் மயமாகும் தபால் நிலைய சேமிப்பு கணக்குகள்
இந்தியாவில் உள்ள 1.50 லட்சம் வங்கிகள் டிஜிட்டல் மயமாகிறது என்றும் பயனாளர்கள் தங்களின் சேமிப்பு கணக்கு தொடர்பான தகவல்களை இணையம் மூலம், செல்போன் மூலமும் பெற்றுக் கொள்ளவும் ஆன்லைனில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள வசதிகள் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
- 11:34 (IST) 01 Feb 2022. 75 டிஜிட்டல் பேங்கிங் யூனிட்டுகள்
டிஜிட்டல் பேங்கிங்க், இண்டெர்நெட் பேங்கிங் போன்றவை அதிகமாக வளர்ந்துள்ளது. இந்த வசதிகள் அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதை அரசு உறுதி செய்யும். 75 டிஜிட்டல் பேங்கிங் யூனிட்டுகள் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் 75 மாவட்டங்களில் அறிமுமம் செய்யப்படும் என்று நிதி அமைச்சர் அறிவிப்பு.
- 11:32 (IST) 01 Feb 2022மாநில மொழி கல்வி ஊக்குவிக்கப்படும்
கொரோனா தொற்று காலத்தில் கிராமப்புற பகுதிகளில், குறிப்பாக பட்டியல் இன, பட்டியல் பழங்குடி மாணவர்கள் அதிகப்படியாக பாதிக்கப்பட்டனர். அதனை கருத்தில் கொண்டு தொலைக்காட்சிகள், இணையம் வழியாக டிஜிட்டல் பாட திட்டங்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். 1-12ம் வகுப்புகளுக்கு மாநில மொழிகளில் பாடங்களை கற்றுத்தர 200 கல்வி சேனல்கள் உருவாக்கப்படும் என்றும் அறிவிப்பு.
- 11:31 (IST) 01 Feb 2022ஏழைகளுக்கு வீடுகள் கட்ட 48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
ஏழை மக்களுக்கு 18 லட்சம் வீடுகள் கட்ட ரூ. 48 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என்றும் குடிநீர் இணைப்பிற்காக ரூ. 60 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
- 11:29 (IST) 01 Feb 2022தேசிய மனநல சிகிச்சை திட்டம்
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு மன ரீதியாக சிகிச்சைகள் அளிக்க மையங்கள் உருவாக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
- 11:27 (IST) 01 Feb 2022மாநில மொழி கல்வி ஊக்குவிக்கப்படும்
கொரோனா தொற்று காலத்தில் கிராமப்புற பகுதிகளில், குறிப்பாக பட்டியல் இன, பட்டியல் பழங்குடி மாணவர்கள் அதிகப்படியாக பாதிக்கப்பட்டனர். அதனை கருத்தில் கொண்டு தொலைக்காட்சிகள், இணையம் வழியாக டிஜிட்டல் பாட திட்டங்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். 1-12ம் வகுப்புகளுக்கு மாநில மொழிகளில் பாடங்களை கற்றுத்தர 200 கல்வி சேனல்கள் உருவாக்கப்படும் என்றும் அறிவிப்பு.
- 11:23 (IST) 01 Feb 2022கிசான் ட்ரோன் திட்டம்
ட்ரோன் மூலம் நிலங்களை அளப்பது மற்றும் வேளாண் விளைச்சலை கணிப்பது போன்ற பணிகளுக்கு கிசான் ட்ரோன் திட்டம் பயனளிக்கும் என்றும் அமைச்சர் அறிவிப்பு.
- 11:21 (IST) 01 Feb 2022காவேரி - பெண்ணாறு நதி இணைப்பு திட்டத்திற்கு அனுமதி
கோதாவரி - காவேரி, காவேரி - பெண்ணாறு நதி இணைப்பு திட்டத்திற்கு அனுமதி. இந்தியாவில் 5 நதிகள் இணைப்பு திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ரூ. 44 ஆயிரம் கோடியில் நீர்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் அறிவிப்பு.
- 11:19 (IST) 01 Feb 2022இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும்
இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளார் நிதி அமைச்சர். எண்ணெய் வித்துகள், சிறு தானிய உற்பத்திக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார் அவர்.
- 11:17 (IST) 01 Feb 2022வந்தே பாரத் திட்டத்தின் மூலம் 400 ரயில்கள் அறிமுகம்
மூன்று ஆண்டுகளில் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் 400 ரயில்கள் அறிமுகம் செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 22, 000 கி.மீ தூரத்திற்கு ரயில்பாதைகள் மேம்படுத்தப்படும். உள்ளூர் வணிகங்களை மேம்படுத்த ஒரு ரயில் நிலையம் ஒரு உற்பத்தி பொருள் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.
- 11:11 (IST) 01 Feb 2022பட்ஜெட் தாக்கல் ஆரம்பமானது
கொரோனா பெருந்தொற்றில் உயிரிழந்த நபர்களுக்கு அஞ்சலி செலுத்தி தன்னுடைய பட்ஜெட்டை தாக்கல் செய்ய துவங்கினார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
- 10:56 (IST) 01 Feb 2022கேபினட் மீட்டிங்
மத்திய அமைச்சர்கள் கேபினட் மீட்டிங்கில் கலந்து கொண்டனர். அங்கே கேபினர் அமைச்சர்கள் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர்.
- 10:37 (IST) 01 Feb 2022நாடாளுமன்றம் வருகை புரிந்தார் மோடி
பிரதமர் மோடி தற்போது நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்துள்ளார்.
- 10:30 (IST) 01 Feb 2022நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று துவங்கிய நிலையில், நிதி நிலை அறிக்கை தாக்கல் இன்று நடைபெறுகிறது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்த்துறை அமைச்சர் அமித் ஷா, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ப்ரல்ஹாத் ஜோஷி மற்றும் ஏனைய அமைச்சர்கள் தற்போது நாடாளுமன்றத்திற்கு வருகை புரிய துவங்கியுள்ளனர்.
Delhi: Defence Minister Rajnath Singh, Union Home Minister Amit Shah, Railways, Communications and IT Minister Ashwini Vaishnaw, Parliamentary Affairs Minister Pralhad Joshi, and others arrive at the Parliament for the union cabinet meeting ahead of the presenting of the budget pic.twitter.com/GtUEvt7gmo
— ANI (@ANI) February 1, 2022 - 10:21 (IST) 01 Feb 2022நாடாளுமன்றம் வருகை புரிந்தார் நிர்மலா சீதாராமன்
டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் இன்று மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
watch | Delhi: Union Finance Minister Nirmala Sitharaman arrives at the Parliament. She will present the unionbudget2022 today. pic.twitter.com/MQoxC388TZ
— ANI (@ANI) February 1, 2022 - 10:14 (IST) 01 Feb 2022பட்ஜெட் தாக்கல்: பங்கு சந்தையில் முன்னேற்றம்
மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 582.85 புள்ளிகள் உயர்ந்து 58,597.02 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 156.20 புள்ளிகள் உயர்ந்து 17,496.05 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெறுகிறது.
- 10:05 (IST) 01 Feb 2022குடியரசுத் தலைவர் - நிதி அமைச்சர் சந்திப்பு
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவருடைய குழு உறுப்பினர்களுடன் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசி வருகிறார். இணை அமைச்சர்கள் டாக்டர் பகவத் கிஷன் ராவ், பங்கஜ் சௌத்ரி, மற்றும் மூத்த அதிகாரிகள் நிதி அமைச்சருடன் இருந்தனர்.
- 09:57 (IST) 01 Feb 2022அலுவலகத்தில் இருந்து கிளம்பினார் நிதி அமைச்சர்
Budget 2022 Live Update, Union Budget 2022 Latest News : இந்தியாவில் உருவாக்கப்பட்ட “டேப்”-ஐ பயன்படுத்தி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வந்த பஹி காட்டா இந்த முறை பட்ஜெட் தாக்கல் செய்யும் போது எடுத்துவரவில்லை.
- 09:39 (IST) 01 Feb 2022நிலையான அபிவிருத்தி இலக்குகளை நோக்கி பயணிக்கிறது இந்தியா - பொருளாதார அறிக்கை
நேற்று சமர்பிக்கப்பட்ட பொருளாதார அறிக்கையில் இந்தியாவில் காலநிலை மாற்றம் குறித்தும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் நன்கு அறிந்த இந்தியா தொடர்ந்து காலநிலை மாற்றத்தை குறைக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளது. ப்ளாஸ்டிக் பயன்பாடு, மாசுகளை அதிகமாக வெளியேற்றும் தொழிற்சாலைகளுக்கு கடுமையாக கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
- 09:29 (IST) 01 Feb 2022நிதித்துறை அலுவலகத்திற்கு வந்தார் நிர்மலா சீதாராமன்
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு இன்னும் சிறிது நேரமே இருக்கின்ற நிலையில் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் அமைந்திருக்கும் நிதித்துறை அலுவலகத்திற்கு வருகை புரிந்துள்ளார்.
- 09:26 (IST) 01 Feb 2022இந்த பட்ஜெட்டில் அனைத்து துறையினரும் பலன் அடைவார்கள் - நிதித்துறை இணை அமைச்சர்
அனைத்து தரப்பினரும், அனைத்து துறையினரும் பலன் அடையும் வகையில் இந்த முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
- 09:22 (IST) 01 Feb 2022கொரோனா பற்றி விளக்கம் ஏதும் தரப்படவில்லை
நேற்று தலைமை பொருளாதார ஆலோசகர் சமர்பித்த பொருளாதார அறிக்கையில் கொரோனா தொற்றின் தாக்கம் குறித்து எந்த விதமான மதிப்பீடுகளும் இடம் பெறவில்லை. மே மாதம் 2020ம் ஆண்டு கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தது என்றும் இரண்டாம் அலையின் போது மே மாதம் நாள் ஒன்றுக்கு 4400 நபர்கள் பலியானார்கள் என்பது குறித்து மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. இரண்டாம் தொற்றின் போது ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், இறந்தவர்கள் குறித்த முறையான எண்ணிக்கைகள் அறிவிக்கப்படாதது குறித்தும் எந்த விதமான தகவல்களும் இடம் பெறவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.