Advertisment

Budget 2024 Tamil News Updates: மத்திய பட்ஜெட்டை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று போராட்டம்

Budget 2024 Tamil News Updates : பட்ஜெட் தொடர்பான உடனடி அப்டேட்டுகளுக்கு இந்த லிங்கில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nirmala

Budget 2024 Tamil News Updates: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக ஏழாவது முறையாக பட்ஜெட்டை  செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். முன்னதாக, திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தார். இந்திய வரலாற்றில் முதல் முறையாக 7 முறை தொடர்ந்து பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.

Advertisment

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை மிகவும் அதிகமாக இருக்கும் வேளையிலும், பிற முக்கிய பிரச்சனைகளுக்கும் தீர்வு  காணும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

பிரதான் மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பி.எம் கிசான்-யின் தவணைத் தொகையை தற்போதைய ரூ.6,000-லிருந்து ரூ.8,000 ஆக உயர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், வேலை நாட்களை அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

காலை 11 மணிக்கு  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் தொடர்பான உடனடி அப்டேட்டுகளுக்கு இந்த லிங்கில் இணைந்திருங்கள். 

Read in English:   Budget 2024 Live Updates: Govt will provide higher education loan of 10 lakh to students for domestic institutions, says Sitharaman

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

 

 

  • Jul 23, 2024 23:06 IST
    நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கணிக்கிறோம்- காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள் அறிவிப்பு

    மத்திய பட்ஜெட்டை கண்டிக்கும் வகையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்களான சித்தராமையா, ரேவந்த் ரெட்டி, சுக்விந்தர் சுகு ஆகியோரும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.



  • Jul 23, 2024 23:02 IST
    ஸ்டாலின் மக்கள் நலனைப் புறக்கணிக்கிறார் - தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்

    பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்: “நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதன் மூலம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழக மக்களின் நலனைப் புறக்கணிக்கிறார். அரசியல் ஆதாயத்திற்காக நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் புறக்கணிப்பது மக்கள் நலனைப் புறக்கணிப்பதாகும். தேவையானதை நேரில் சந்தித்து விவாதித்து முதல்வர் பெற வேண்டும்” என்று கூறியுள்ளார்.



  • Jul 23, 2024 22:57 IST
    நிதி ஆயோக் கூட்டத்தை காங்கிரஸ் முதல்வர்கள் புறக்கணிப்பார்கள் - காங். தலைவர் கே.சி. வேணுகோபால்

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜூலை 27-ம் தேதி நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தை காங்கிரஸ் முதலமைச்சர்கள் புறக்கணிப்பார்கள் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.



  • Jul 23, 2024 20:18 IST
    'திட்டங்கள் எதுவும் இல்லாமல் நிதிநிலை அறிக்கை' - வேல்முருகன் கண்டனம் 

    “தமிழ்நாட்டுக்கான சிறப்பு திட்டங்களோ, நிதி ஒதுக்கீடோ இல்லாத மத்திய அரசின் 2024-25 ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை. தமிழ்நாட்டில் இருந்து அதிகளவில் வரியை வாங்கிச் செல்லும் மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கு தேவையான உட்கட்டமைப்புத் திட்டங்கள், பாசனத் திட்டங்கள் எதுவும் இல்லாமல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருப்பது கண்டனத்துக்குரியது” என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ கூறியுள்ளார். 



  • Jul 23, 2024 20:16 IST
    நிதிநிலை அறிக்கை ஒட்டுமொத்த இந்தியாவிற்கானதா? - சீமான் கேள்வி 

    "2024ம் ஆண்டிற்கான பாஜக அரசின் நிதிநிலை அறிக்கை ஒட்டுமொத்த இந்தியாவிற்கானதா?, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மட்டுமானதா. பாஜக அரசின் 2024ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி புரிந்தும் நடைமுறைப்படுத்த முடியாத கவர்ச்சிகர அறிவிப்புகளைக் கொண்ட கற்பனை அறிக்கையாகும். 

    மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை கூட்டணிக் கட்சிகளை சமாதானப்படுத்தும் சலுகை அறிவிப்புகளாக மட்டுமே அமைந்துள்ளது. விவசாயம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத்தேவைகளுக்கு போதிய நிதியை ஒதுக்காததது இந்திய மக்களின் நலன்மீதான பாஜக அரசின் அக்கறையின்மையை மீண்டும் வெளிப்படுத்துகிறது. 

    தமிழ்நாடு உள்ளிட்ட இதர மாநிலங்களை முற்று முழுதாக புறக்கணித்து, கூட்டணி ஆட்சியைத் தக்க வைப்பதையே குறிக்கோளாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள, இந்நிதிநிலை அறிக்கையிலிருந்து இந்தியா முழுமைக்குமான பாஜகவின் வீழ்ச்சி உறுதியாய் தொடங்கும்”

    இந்நிதிநிலை அறிக்கை மூலம், பாஜக அரசின் முதன்மை கூட்டணிக் கட்சிகள் ஆளும் பீகார் மற்றுப் ஆந்திராவிற்கு நிதிகளை ஒதுக்கி, இந்தியாவின் இதர மாநில மக்களைத் தெருக்கோடியில் நிறுத்தியுள்ளார். அதிகம் வரிச்செலுத்துவதில் முதன்மையான இடத்தில் உள்ள தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு எவ்வித சிறப்புத் திட்டத்தையும் கடந்த 11 ஆண்டுகால நிதிநிலை அறிக்கையில் ஒருமுறைகூட பாஜக அரசு அறிவிக்காதது ஏன்?. 

    தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க-விற்கு வாக்களிக்கவில்லை என்பதால் தொடர்ச்சியாகப் பழிவாங்குவதைப்போலவே ஒவ்வொரு பாஜக ஆட்சியின் நிதிநிலை அறிக்கையும் அமைந்துள்ளது. " என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 



  • Jul 23, 2024 20:11 IST
    'ஒன்றிய அரசை தற்காத்துக் கொள்ளும் அரசியல் பட்ஜெட்' - ம.ஜ.க தலைவர் தமிமுன் அன்சாரி

    "இது வளர்ச்சிக்கான பட்ஜெட் இல்லை. ஒன்றிய அரசை தற்காத்துக் கொள்ளும் அரசியல் பட்ஜெட். பீகார் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அசாம், இமாச்சலப் பிரதேசம் உத்தரகாண்ட் போன்ற மாநிலங்கள் வெள்ள தடுப்பு பணிகளுக்காக 11,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றை குறை கூறவில்லை.

    ஆனால் கடந்த டிசம்பர் மாதத்தில் தமிழ்நாடு வெள்ளத்தால் இதே அளவிற்கு கடுமையாக பாதிக்கப்பட்டது. அதற்கு ஏன் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை? என்ற கேள்வி எழுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அடுத்த சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு பல சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டுக்கென சிறப்பு திட்டங்கள் ஏதுமில்லை. ஏற்கனவே கடந்த கால  பட்ஜெட்டுகளில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் நிறைவேற்றப்படாத நிலையில், இந்த புதிய பட்ஜெட் எதை சாதிக்கப் போகிறது? என்கிற கேள்வி எழுகிறது." என்று ம.ஜ.க தலைவர் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார். 



  • Jul 23, 2024 19:54 IST
    'என்.டி.ஏ பட்ஜெட்டுக்கு வாழ்த்துகள், விரைவில் இந்தியா பட்ஜெட் வரும்' - கமல் 

    "என்.டி.ஏ பட்ஜெட்டுக்கு வாழ்த்துகள், விரைவில் இந்தியா பட்ஜெட் வரும் என நம்புகிறேன்" என்று ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 



  • Jul 23, 2024 19:37 IST
    "மின் கட்டண உயர்வு - அதிமுக தான் காரணம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு

    "மின் கட்டண உயர்வு - அதிமுக தான் காரணம். மின் கட்டண உயர்விற்கு அதிமுக தான் முழு பொறுப்பு'. 2011-12 திமுக ஆட்சியில், 18,954 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு விட்டு சென்றோம். 1 லட்சத்து 59 கோடிக்கு மேல் கடன் மட்டுமே உள்ளது, இதற்கு வட்டியும் கட்டி வருகிறோம். நிதி சுமையை சரிகட்டவே கட்டண உயர்வு செய்துள்ளோம்'' என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 



  • Jul 23, 2024 18:30 IST
    நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன்; மு.க. ஸ்டாலின்

    புதுடெல்லியில் நடைபறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க போவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



  • Jul 23, 2024 17:37 IST
    பட்ஜெட்டில், திருக்குறள் கூட இல்லை; சு. வெங்கடேசன்


    “2024 பட்ஜெட் குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள சு. வெங்கடெசன் எம்.பி., “தமிழ்நாட்டுக்கு அறிவிப்பில் ஏதும் இல்லையே! நிதியமைச்சரே வழக்கமாக மேற்கோள் காட்டும் திருக்குறளும் இல்லையே!” எனத் தெரிவித்துள்ளார்.



  • Jul 23, 2024 16:18 IST
    ஏழைகளின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் பட்ஜெட்; புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி

     

    புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 'மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நாடாளுமன்றத்தில் இன்று  தாக்கல் செய்த                      2024-25ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையானது, ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பிரினரின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதாகவும் நாட்டின் வளர்ச்சியை முன்னோக்கி எடுத்து செல்வதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. 
    நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் வகையிலான சிறப்பான பட்ஜெட்டினை சமர்ப்பிக்க வழிகாட்டுதலாக இருந்த பிரதமர்  நரேந்திர மோடிக்கும் சிறப்பான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த  மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீத்தாராமனுக்கும், எனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.



  • Jul 23, 2024 15:57 IST
    வரிவிதிப்பு முறையை எளிமையாக்க விரும்புகிறோம் - நிர்மலா சீதாராமன்

    2024 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "வரிவிதிப்புக்கான அணுகுமுறையை எளிமையாக்கும்" நோக்கத்துடன் நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கான 12.5% வரி அறிமுகப்படுத்தப்பட்டது என்றார். மேலும் "ஏதேனும் இருந்தால், சராசரி வரிவிதிப்பு உண்மையில் 12.5% என்று சொல்லும் போது குறைந்துவிட்டது. வெவ்வேறு சொத்து வகுப்புகள் ஒவ்வொன்றிற்கும் நாங்கள் வேலை செய்துள்ளோம்... நாங்கள் அதை சராசரிக்கும் கீழே இருந்து 12.5%க்குக் குறைத்திருப்பது சந்தைகளில் முதலீட்டை ஊக்குவிக்கிறது".

    முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024 பட்ஜெட்டைப் பாராட்டினார், இது உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தியில் கவனம் செலுத்துகிறது, மேலும் வளர்ச்சியை விரைவுபடுத்தும் என்று கூறினார். பட்ஜெட் புதிய நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிகாரம் அளிக்கும் என்றும், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மேம்படுத்தும் வகையில் செயல்படும் என்றும் மோடி கூறினார். இந்த பட்ஜெட் மூலம் இளைஞர்களுக்கு வரம்பற்ற வாய்ப்புகள் கிடைக்கும், மேலும் கல்வி மற்றும் திறன் புதிய அளவுகளை எட்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.



  • Jul 23, 2024 15:34 IST
    பட்ஜெட் எதிரொலி; அதிரடியாக குறைந்த தங்கம் விலை

    மக்களவையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. தங்கம் சவரனுக்கு ரூ2080 குறைந்து, சவரன் 54,400க்கு விற்பனையாகிறது



  • Jul 23, 2024 15:11 IST
    ஸ்டார்ட்அப்கள், விண்வெளி பொருளாதாரத்தை பட்ஜெட் மேம்படுத்துகிறது - மோடி

    அனைத்து வகை முதலீட்டாளர்களுக்கும் ஏஞ்சல் வரியை ரத்து செய்தல் உட்பட இந்தியாவைச் சார்ந்த ஸ்டார்ட்அப்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான ஊக்கத்தைப் பற்றி பேசும் பிரதமர் மோடி, ஸ்டார்ட்அப்களுக்கு பட்ஜெட்டில் உள்ள பிரத்தியேகங்களையும் விண்வெளி பொருளாதாரத்தையும் பாராட்டுகிறார்.

    அதிக நிதி ஒதுக்கீட்டைக் கண்டறிந்த முக்கிய துறைகளில் பாதுகாப்புத் துறைக்கான செலவினங்களையும் மோடி எடுத்துரைத்தார்.



  • Jul 23, 2024 14:52 IST
    பட்ஜெட்டில் முக்கிய கவனம் விவசாயிகள் - பிரதமர் மோடி

    பட்ஜெட்டில் முக்கிய கவனம் விவசாயிகள் என்று பிரதமர் மோடி கூறினார். "இன்றைய பட்ஜெட் புதிய வாய்ப்புகளையும், புதிய நம்பிக்கையையும் கொண்டு வருகிறது. இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற இந்த பட்ஜெட் ஒரு ஊக்கியாக இருக்கும்" என்று பிரதமர் மோடி கூறுகிறார்.



  • Jul 23, 2024 14:50 IST
    இளைஞர்களுக்கான வாய்ப்புகளை திறக்கிறது பட்ஜெட் - மோடி பேச்சு

    நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் 2024 குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, சுமார் 500 முன்னணி நிறுவனங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் திட்டம் அவர்களுக்கு வாய்ப்புகளின் உலகத்தை திறக்கும் வகையில் உள்ளது.

    "இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவோம்," என்று அவர் பட்ஜெட்டில் எம்.எஸ்.எம்.இ களுக்கான ஊக்கத்தைப் பற்றி கூறினார்.



  • Jul 23, 2024 14:46 IST
    மத்திய அரசின் பட்ஜெட் தொலைநோக்கு பார்வையுடன் இல்லை - பீட்டர் அல்போன்ஸ்

    “ஒன்றிய அரசின் பட்ஜெட் தொலைநோக்கு பார்வையுடன் இல்லை. தங்களின் பதவியை காத்துக்கொள்ள பிரதமரும், நிதியமைச்சரும் இந்த பட்ஜெட்டை ஒரு காப்பீடாக பயன்படுத்தியுள்ளனர்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். 



  • Jul 23, 2024 14:43 IST
    ஏழைகளுக்கும், இளைஞர்களுக்கும் பெரும் பலத்தை அளிக்கும் பட்ஜெட்  - பிரதமர் மோடி மகிழ்ச்சி

    மத்திய பட்ஜெட் தாக்கலுக்குப் பின் பிரதமர் மோடி உரை: “ஏழைகளுக்கும், இளைஞர்களுக்கும் பெரும் பலத்தை இந்த பட்ஜெட் அளிக்கும். சமூகத்தின் அனைத்து தரப்பு, ஒவ்வொரு நபர், ஒவ்வொரு வீடும் வளர்ச்சி பெற வேண்டும் என பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சிறு குறு வியாபாரிகள், நடுத்தர வர்க்க வியாபாரிகள், அனைவரும் பட்ஜெட்டால் பலனடைவார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.



  • Jul 23, 2024 14:15 IST
    பட்ஜெட்டிற்கு பிறகு பிரதமர் மோடி உரை



  • Jul 23, 2024 14:07 IST
    Budget Rajya Sabha: மாநிலங்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

    லோக்சபாவில் 2024 பட்ஜெட்டை தாக்கல் செய்த பிறகு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜம்மு-காஷ்மீருக்கான பட்ஜெட்டுடன் ராஜ்யசபாவில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    முன்னதாக மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



  • Jul 23, 2024 13:51 IST
    Budget News live: பங்குச் சந்தைகள் கடும் சரிவு

    நாட்டில் விண்வெளி சார்ந்த திட்டங்களுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கப்படும் - நிதியமைச்சர்

    இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பங்குச் சந்தைகளில் கடும் சரிவு

    சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேலும், நிஃப்டி 300 புள்ளிகளுக்கு மேலும் வீழ்ச்சி. 

     



  • Jul 23, 2024 13:50 IST
    ஊழியர்கள் ரூ.17,500 சேமிக்க முடியும்

    புதிய வருமான வரி முறையின் கீழ்,  ஊழியர்கள் வரி குறைப்பு மூலமாக ஆண்டுக்கு ரூ.17,500 சேமிக்க முடியும் - நிதியமைச்சர்



  • Jul 23, 2024 13:48 IST
    பட்ஜெட் 2024-25: துறை வாரியாக நிதி ஒதுக்கீடுகள்

    பாதுகாப்பு - ₹4.54 லட்சம் கோடி
     ஊரக வளர்ச்சி - ₹2.65 லட்சம் கோடி
     வேளாண் - ₹1.51 லட்சம் கோடி
     உள்துறை - ₹1.50 லட்சம் கோடி
    கல்வி - ₹1.25 லட்சம் கோடி
    ஐ.டி., டெலிகாம் - ₹1.16 லட்சம் கோடி
     சுகாதாரம் - ₹89,287 கோடி
    எரிசக்தி - ₹ 68,769 கோடி
    சமூக நலன் - ₹56,501 கோடி
    வணிகம், தொழில் - ₹47,559 கோடி



  • Jul 23, 2024 13:33 IST
    பட்ஜெட் உரையில் `தமிழ்', `தமிழ்நாடு' என்ற வார்த்தைகளே இல்லை

    நிதியயமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்த மத்திய பட்ஜெட் உரையில் 'தமிழ்', 'தமிழ்நாடு' என்ற வார்த்தைகள் ஒரு முறை கூட இடம் பெறவில்லை.  வழக்கமாக திருக்குறள் போன்ற தமிழ் இலக்கியங்கள் உடன் பட்ஜெட் உரை தொடங்கப்படும், இம்முறை அதுவும் இடம்பெறவில்லை



  • Jul 23, 2024 13:08 IST
    புதிய வருமான வரி திட்டத்தில் நிலைக்கழிவு ரூ.75,000 ஆக உயர்வு

    புதிய வருமான வரி திட்டத்தில் நிலைக்கழிவு ரூ.50,000-ல் இருந்து ரூ.75,000 ஆக உயர்வு

    புதிய திட்டத்தின் கீழ், மாத ஊதியதாரர் ஒருவரின் மொத்த ஆண்டு வருமானம் எவ்வளவோ அதில் ரூ.75 ஆயிரத்தை கழித்து மீதம் உள்ள தொகைக்கு வரி கட்டினால் போதும். 



  • Jul 23, 2024 13:03 IST
    பழைய வருமான வரித் திட்டத்தில் மாற்றம் இல்லை

    பழைய வருமான வரித் திட்டத்தின் கீழ் தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை,

    ஆண்டு வருமானம் ரூ 2.5 லட்சத்துக்கு மேல் பெறுவோர் வரி செலுத்தியாக வேண்டும் 



  • Jul 23, 2024 12:56 IST
    மக்களவை கூட்டத் தொடர் ஒத்திவைப்பு

    மக்களவை கூட்டத்தொடரின் முதல் அமர்வை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா



  • Jul 23, 2024 12:56 IST
    தமிழக எம்.பிக்கள் அமளி

    பீகார் வெள்ள தடுப்பு பணிக்காக ரூ.11,500 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் அறிவிப்பு.

     கடந்த டிச., மாதம் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிதி ஒதுக்கவில்லை, தமிழக எம்.பிக்கள் அமளி



  • Jul 23, 2024 12:46 IST
    வருமான வரி முறையில் மாற்றம்

    புதிய வரி விதிப்பு; ஆண்டு வருமானம் 

    3 லட்சம் வரை -  வரி இல்லை
    3-7 லட்சம் - 5%
    7-10 லட்சம் -10% 
    10-12- 15%
    12-15 -  20%
    15 லட்சத்திற்கு மேல் -  30%



  • Jul 23, 2024 12:35 IST
    பட்ஜெட் உரை நிறைவு

    பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் நிர்மலா சீதாராமன்

    பட்ஜெட் மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது



  • Jul 23, 2024 12:33 IST
    வருமான வரி தாமதமாக தாக்கல் இனி கிரிமினல் குற்றம் இல்லை

    மூன்றில் இரு பங்கினர் புதிய வருமான வரி முறையை ஏற்றுக் கொண்டுள்ளனர்

    வருமான வரிக்கணக்கை தாமதமாக தாக்கல் செய்வது இனி கிரிமினல் குற்றம் இல்லை - நிர்மலா சீதாராமன்



  • Jul 23, 2024 12:32 IST
    ஏஞ்சல் வரி ரத்து

    ஸ்டார்ட் அப்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஏஞ்சல் வரி ரத்து செய்யப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்



  • Jul 23, 2024 12:21 IST
    தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி குறைப்பு

    புற்றுநோய் தொடர்பான 3 மருந்துகளுக்கு சுங்க வரி முற்றிலும் ரத்து 

    செல்போன், சார்ஜ்ர்களுக்கான சுங்கவரி 15% குறைப்பு 

     தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 6% ஆக குறைப்பு. 



  • Jul 23, 2024 12:20 IST
    அரசின் நிதிப் பற்றாக்குறை 4.9% ஆக குறையும்

    2024-25 நிதியாண்டில் அரசின் நிதிப்பற்றாக்குறை 4.9% ஆக குறையும். 4.5% ஆக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது - நிர்மலா சீதாராமன் 



  • Jul 23, 2024 11:57 IST
    பட்ஜெட் 2024: இளைஞர்களுக்கு மாதம் ரூ.5000 ஊக்கத் தொகை

    மாதம் ரூ.5000 ஊக்கத் தொகையுடன் 1 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி மாதம். ரூ.5000 ஊக்கத் தொகையுடன் இந்தியாவில் உள்ள 500 டாப் நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு  வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கப்படும்- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு



  • Jul 23, 2024 11:48 IST
    பொலாவரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு நிதி

    சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டமான பொலாவரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு உறுதியாக உள்ளதாக பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு



  • Jul 23, 2024 11:46 IST
    Budget News in Tamil : உயர் கல்வி பயில ரூ.10 லட்சம் வரை கல்விக்கடன்

    உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயில ரூ.10 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம்  இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு வழங்கும் வகையில் திட்டம்-  நிர்மலா சீதாராமன்



  • Jul 23, 2024 11:33 IST
    ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ. 15,000 கோடி ஒதுக்கீடு

    பட்ஜெட் 2024: பீகாரில் விமான நிலையம், மருத்துவக் கல்லூரிகள், விரைவுச் சாலைகள் அமைக்க பட்ஜெட்டில் நிதியுதவி அறிவிப்பு. ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ. 15,000 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிப்பு.



  • Jul 23, 2024 11:31 IST
    20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி வழங்கும் திட்டம்

    Budget 2024 Tamil News Live,: 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி வழங்கும் திட்டம். பீகாரில் புதிய விமான நிலையம், சாலைகள் அமைக்கப்படும். நாடு முழுவதும் பணிபுரியும் பெண்களுக்காக ஹாஸ்டல் மற்றும் தங்குமிடங்கள் அமைக்கப்படும். ஆந்திராவில் பிரிக்கும் போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்-நிர்மலா சீதாராமன்

     



  • Jul 23, 2024 11:29 IST
    கிசான் கிரெடிட் கார்டு 5 மாநிலங்களில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும்

    Budget News in Tamil: கிசான் கிரெடிட் கார்டு 5 மாநிலங்களில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும். காய்கறி உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊக்குவிக்கப்படும். உள்நாட்டு கல்வி நிலையங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்பட உள்ளது- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்



  • Jul 23, 2024 11:26 IST
    உயர்கல்வி பெற ரூ.10 லட்சம் வரையிலான கடனுக்கு அரசு

    Budget 2024 Tamil News Live: உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பெற ரூ.10 லட்சம் வரையிலான கடனுக்கு அரசு நிதியுதவி அளிக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

     



  • Jul 23, 2024 11:22 IST
    வேளாண்மைத் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு

    பட்ஜெட் 2024: விவசாயத் துறைகளில் டிஜிட்டல் புரட்சி செய்ய அனைத்து கட்டமைப்புகளும் தயாராக உள்ளது. 32 தோட்டக்கலைகளில் 109 வகையான அதிக மகசூல் தரும் பயிர்கள் அறிமுகம். வேளாண்மைத் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு. - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்



  • Jul 23, 2024 11:20 IST
    கல்வித்திறன் மேம்பாட்டிற்கு ரூ. 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு

    Budget Tamil News: நாட்டின் பணவீக்கம் குறைவாகவே உள்ளது. வேலைவாய்ப்பு, கல்வித்திறன் மேம்பாட்டிற்கு ரூ. 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு. 80 கோடி மக்களுக்கு உணவு தானியம் வழங்கும் திட்டம், அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு. - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்



  • Jul 23, 2024 11:16 IST
    4.1 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு: 5 திட்டங்களுக்கு அறிவிக்கப்பட உள்ளது

    4.1 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்கான 5 திட்டங்களுக்கு இரண்டு லட்சம் கோடி தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு, திறன், எஸ்.எம்.இ-க்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மீது கவனம் செலுத்தப்படும் : நிர்மலா சீதாராமன்



  • Jul 23, 2024 11:14 IST
    பட்ஜெட்: கவனம் பெறும் 4 முக்கிய புள்ளிகள்

    சீதாராமன் அரசாங்கத்தின் 4 முக்கிய கவனம் புள்ளிகளை வலியுறுத்தினார். 'கரீப்' (ஏழை), 'யுவா' (இளைஞர்), 'அன்னதாதா' (விவசாயி) மற்றும் 'நாரி' (பெண்கள்) உள்ளிட்டவை இதில் அடங்கும். 



  • Jul 23, 2024 11:11 IST
    இந்தியாவின் பணவீக்கம் தொடர்ந்து குறைவாகவே உள்ளது: நிர்மலா சீதாராமன்

    "இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பிரகாசிக்கும் விதிவிலக்காக உள்ளது, அது தொடரும். இந்தியாவின் பணவீக்கம் தொடர்ந்து குறைவாகவே உள்ளது" என்று பட்ஜெட் உரையின் போது நிர்மலா சீதாராமன் கூறினார்.



  • Jul 23, 2024 11:10 IST
    சர்வதேச பொருளாதாரம் மந்தமான நிலை: இந்திய பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது: நிர்மலா சீதாராமன்

    சர்வதேச பொருளாதாரம் மந்தமான நிலையிலும், இந்திய பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது” - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்



  • Jul 23, 2024 11:07 IST
    நாட்டில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது

    நாட்டில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது.- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்



  • Jul 23, 2024 11:04 IST
    பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

    2024-25ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 



  • Jul 23, 2024 11:01 IST
    நாடாளுமன்றத்திற்கு வந்த ராகுல் காந்தி

    மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்னதாக, மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.யும், லோபி கட்சியுமான ராகுல் காந்தி நாடாளுமன்றத்தை சென்றடைந்தார். 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு முந்தைய பொருளாதார ஆய்வறிக்கை திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, நாடு மிகவும் ஆபத்தான மற்றும் கடினமான சூழ்நிலையில் சென்று கொண்டிருக்கும் போது, ​​இது "மோடி அரசின் தோல்விகளை எடுத்துக்காட்டும் பளபளப்பான வெற்று உறை" என காங்கிரஸ் கட்சி கூறியது.



Union Budget Nirmala Sitharaman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment