PM Narendra Modi on Budget 2024: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை பாராட்டினார். இந்த பட்ஜெட் உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தியில் கவனம் செலுத்துகிறது, வளர்ச்சியை துரிதப்படுத்தும் என்று கூறினார்.
பட்ஜெட் 2024 குறித்து ஆங்கிலத்தில் படிக்க: Budget 2024 Live Updates: Prime Minister Narendra Modi lauded the Budget 2024
மேலும், இந்த பட்ஜெட் புதிய நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிகாரம் அளிக்கும் என்றும், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மேம்படுத்தும் வகையில் செயல்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த பட்ஜெட் மூலம் இளைஞர்களுக்கு வரம்பற்ற வாய்ப்புகள் கிடைக்கும். கல்வி மற்றும் திறன் புதிய அளவுகளை எட்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.
நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் 2024 குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “இன்றைய பட்ஜெட் புதிய வாய்ப்புகளையும், புதிய நம்பிக்கையையும் கொண்டு வருகிறது. இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற இந்த பட்ஜெட் ஒரு ஊக்கியாக இருக்கும்” என்று கூறினார்.
“அனைத்து வகை முதலீட்டாளர்களுக்கும் ஏஞ்சல் வரியை ரத்து செய்தல் உட்பட இந்தியாவைச் சார்ந்த ஸ்டார்ட்அப்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான ஊக்கத்தைப் பற்றி பேசும் பிரதமர் மோடி, ஸ்டார்ட்அப்களுக்கான பட்ஜெட்டில் உள்ள பிரத்தியேகங்களையும் விண்வெளி பொருளாதாரத்தையும் பாராட்டினார்.
அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட முக்கிய துறைகளில் பாதுகாப்புத் துறைக்கான செலவினங்களையும் பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் 2024 குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, சுமார் 500 முன்னணி நிறுவனங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் திட்டம் அவர்களுக்கு வாய்ப்புகளின் உலகத்தை திறக்கும் வகையில் உள்ளது. இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவோம் என்று மோடி பட்ஜெட்டில் எம்.எஸ்.எம்.இ களுக்கான ஊக்கத்தைப் பற்றி கூறினார்.
மேலும், “ஏழைகளுக்கும், இளைஞர்களுக்கும் பெரும் பலத்தை இந்த பட்ஜெட் அளிக்கும். சமூகத்தின் அனைத்து தரப்பு, ஒவ்வொரு நபர், ஒவ்வொரு வீடும் வளர்ச்சி பெற வேண்டும் என பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சிறு குறு வியாபாரிகள், நடுத்தர வர்க்க வியாபாரிகள், அனைவரும் பட்ஜெட்டால் பலனடைவார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.