மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் பாரபட்சமாக உள்ளது என்று கூறி அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஜூலை 27-ம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை காங்கிரஸைச் சேர்ந்த 3 முதல்வர்கள் உள்பட 4 முதல்வர்கள் புறக்கணிப்பதாக கூறியுள்ளனர்.
இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்கிழமை மாலை செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று தனது , சமூக வலைதளப் பதிவில், “இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் மிகவும் பாரபட்சமானது, மேலும் கூட்டாட்சி மற்றும் நேர்மை கொள்கைகளுக்கு எதிராக உள்ளது என்றார். இதையொட்டி காங்கிரஸ் முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப்பார்கள் என்று கூறினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடகாவின் சித்தராமையா, இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு ஆகியோர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறியுள்ளனர்.
“பட்ஜெட்டில் கன்னடர்களுக்கு எந்த திட்டமும். எனவே நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை” என்று சித்தராமையா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ஜூலை 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை எதிர்ப்பின் அடையாளமாக புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
ஆங்கிலத்தில் படிக்க: 4 CMs to boycott NITI Aayog meeting over ‘discriminatory’ Budget
பிரதமர் தனது அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகாரைத் தாண்டி வேறு மாநிலங்களைப் பார்க்கவில்லை என்றார். பட்ஜெட்டில் தமிழகத்திற்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளதாக ஸ்டாலின் கூறினார். மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக கூறினார்.
மேலும் பேசிய அவர், பட்ஜெட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க எம்.பிக்கள் டெல்லியில் புதன்கிழமை போராட்டம் நடத்துவர். மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை மத்திய அரசு புறக்கணித்தது. ஒரு சில பிராந்தியக் கட்சிகளை திருப்திப்படுத்தவும், இறுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை நிலைநிறுத்தவும் பாஜக தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களை அறிவித்துள்ளது என்றார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் கேரளாவின் பினராயி விஜயன் ஆகியோர் மத்திய பட்ஜெட்டில் தங்கள் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக விமர்சித்தனர். ஆனால் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதை பற்றி எதுவும் கூறவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“