Union Budget to give push to auto sales | Indian Express Tamil

Budget 2023: ஆட்டோ மொபைல் நிறுவனங்களுக்கு என்ன சலுகை ?   

மத்திய அரசின் பழைய வாகனங்கள் மாற்றப்படும் என்று நிர்மலா சீதாராமன் பட்ஜெட் கூட்டத் தொடரில் தெரிவித்தார்.

Budget 2023: ஆட்டோ மொபைல் நிறுவனங்களுக்கு என்ன சலுகை ?   

மத்திய அரசின் பழைய வாகனங்கள் மாற்றப்படும் என்று நிர்மலா சீதாராமன் பட்ஜெட் கூட்டத் தொடரில் தெரிவித்தார்.

ஆட்டோ மொபையில் நிறுவனங்கள் இந்த ஆண்டு பட்ஜெட்டில், தங்கள் வளர்ச்சிக்கான பல அறிவிப்புகளை எதிர்பார்த்தனர். ஆனால் இந்த முறை மத்திய அரசின் பழைய வாகனங்கள் புதிதாக மாற்றப்படும் என்று கூறப்பட்டது. மேலும் மாநில அரசின் பழைய வாகனங்கள் மாற்ற நிதியுதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. மேலும் பசுமை எரிவாயு என்ற கொள்கை கடைபிடிக்கப்படும் என்றும் 2047-க்குள் புகையை வெளிப்படுத்தாத சூழலை எட்ட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதனால் ஆட்டோ மொபையில் நிறுவனங்கள் பெரிதாக பாதிக்கப்படும். டாட்டா மோட்டார்ஸ், டொயோட்டா கிர்லோஸ்கர்  ஆகிய நிறுவனங்கள் எல்லா வாகனங்களிலும்  எலெக்டிரிக் மாடல் வைத்துள்ளது. இதனால் இந்த நிறுவனங்கள் மட்டுமே வளர்ச்சியடையும்.

2022ம் ஆண்டில் ஆட்டோ மொபையில் நிறுவனங்களில் விற்பனை சரிந்து வரும் நிலையில் இந்த அறிவிப்புகள் ஏமாற்றத்தை தந்துள்ளது.   

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Union budget to give push to auto sales