Advertisment

மூத்த குடிமக்களின் நலனுக்காக யோசிக்கிறது மத்திய அரசு - நிர்மலா சீதாராமன்

இனிமேல் இது போன்ற நிலை எந்த நிறுவனங்களுக்கும் ஏற்படாது. நாங்கள் கவனிக்கும் முன்பே இது காலம் கடந்த நிகழ்வாக மாறிவிட்டது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Union finance minister Nirmala Sitharaman hints sops

Union finance minister Nirmala Sitharaman hints sops

Union finance minister Nirmala Sitharaman hints sops : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய் கிழமையன்று, மத்திய அமைச்சரவை மூத்த குடிமக்களுக்காகவும், வீடுகள் வாங்குபவர்களுக்கும் சிறப்பு திட்டங்களை அமல்படுத்த முயற்சி செய்து கொண்டிருப்பதாக அறிவித்தார். ரியல் எஸ்டேட் துறையில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும், வீடுகள் வாங்குபவர்களுக்கு சில சிறப்பு சலுகைகளை வழங்க இருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

Advertisment

பஞ்சாப் மற்றும் மகாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கிகள் தொடர்பான பிரச்சனைகளை தொடர்ந்து நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருக்கும் மிக முக்கியமான அறிவிப்பு இதுவாகும். வருகின்ற காலத்தில் கூட்டுறவு வங்கிகளில் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்படும் என்றும், பேங்கிங் ரெகுலேசன் ஆக்ட் 1949-ன் கீழ் அனைத்து வங்கிகளும் கொண்டுவரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழின் எக்ஸ்க்யூட்டிவ் எடிட்டர் பி. வைத்யநாதன் ஐயர் மற்றும் நேசனல் ஒபினியன் எடிட்டர் வந்திதா மிஷ்ராவும் எக்ஸ்பிரஸ் அட்டா நிகழ்வில் நிர்மலா சீதாரமனுடன் பேசினர்.

Union finance minister Nirmala Sitharaman hints sops

வீட்டு வங்கிக் கடன் வாங்குவோர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ள இதே நேரத்தில் மூத்த குடிமக்களுக்கு கிடைக்கும் வங்கி டெபாசிட் வட்டி விகிதத்திலும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது என்பதை மேற்கோள் காட்டி பேசினார். மேலும் ஐ.எல். & எஃப்.எஸ், ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்கள் மூடப்பட்டது குறித்து கேள்வி எழுப்பிய போது “இனிமேல் இது போன்ற நிலை எந்த நிறுவனங்களுக்கும் ஏற்படாது. நாங்கள் கவனிக்கும் முன்பே இது காலம் கடந்த நிகழ்வாக மாறிவிட்டது” என்றும் அவர் கூறினார்.

To read this article in English

வங்கிகள் உருவாக்கத்திலும் கார்பரேட் நிறுவனங்கள் கால் பதித்தால் நன்றாக இருக்கும் என்றும் சூசகமாக அறிவித்தார் நிர்மலா சீதாராமன். பஞ்சாப் - மகாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கியில் ஏற்பட்ட பிரச்சனை உடனுக்குடன் கண்டறியப்பட்டதால் வாடிக்கையாளர்களுக்கு கடனளித்தல் மற்றும் வங்கிகளில் இருந்து பணம் பரிவர்த்தனை செய்தல் உள்ளிட்ட அனைத்திற்கும் தற்காலிகமாக தடை விதித்து அறிவித்தது ஆர்.பி.ஐ. ஆர்.பி.ஐ மற்றும் மாநில நிர்வாகம் கூட்டுறவு வங்கிகளின் விதிமுறைகளை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். வாடிக்கையாளர்களின் பணத்திற்கும் வட்டிக்கும் உரிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் எனில் ரெகுலேட்டர்களுக்கு அதிக அங்கீகாரம் அளிக்கும் வகையில் சட்டம் திருத்தப்படவேண்டும் என துணை கவர்னர் ஆர். காந்தி அறிவித்தார்.

உங்கள் நிறுவனம் ஒன்றை நீங்கள் வங்கி என்று அறிவித்தால் அது நிச்சயம் வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் என்று அவர் அறிவித்தார்.

16 நாடுகள் அடங்கிய ஆர்.சி.ஈ.பி (Regional Comprehensive Economic Partnership) அமைப்பில் இந்தியா ஏன் கையெழுத்திடவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, நம் நாட்டின் முக்கிய தேவைகள் குறித்த எந்த சிறப்பம்சமும் அதில் இடம் பெறவில்லை என்றும். இதில் கையெழுத்திடாமல் இருப்பது தான் சரியான தீர்வாக இருக்கும் என்றும் அவர் அறிவித்தார்.

இந்த உடன்படிக்கைகளை தாண்டியும் நம்முடைய பிரச்சனைகள் எடுத்து உரைக்கப்படும். இதனை நமக்காக நம்முடைய நட்பு நாடுகள் மேற்கொள்வார்கள். நம் வர்த்தகத்தை வளர்க்கும் எந்த ஒரு கதவுகளையும் நாம் மூடி வைக்கவில்லை. மாறாக உலக பொருளாதாரத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம் என்று கூறினார். வருகின்ற காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடர்ந்து எந்தவிதமான பிரச்சனையும் இன்றி வர்த்தகத்தில் ஈடுபட முடிந்த முயற்சிகளை மேற்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Nirmala Sitharaman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment