Nirmala Sitharaman Press Conference Latest Updates: நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த, பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி நிவாரணம் அறிவித்ததையடுத்து, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் இதன் திட்டங்களை வெளியிட்டார்.
அதில், 2019-20 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குத்தாக்கல் செய்ய ஜூலை மாதம் 31 தேதி இறுதி நாளாக இருந்தது. ஆனால் தற்போது அந்த காலக்கெடு மேலும் நான்கு மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளை முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை டிடிஎஸ் வரி விதிப்பு 25% குறைக்கப்படுகிறது. இதன் மூலம் மக்கள் கைகளில் சுமார் ரூ.50,000 கோடி அளவிற்கு பணப்புழக்கம் இருக்கும் என்று கூறியுள்ளார்.
அதுபோல, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கட்டுமான திட்டங்களின் பதிவுக்காலம் 6 மாதங்கள் நீட்டிக்கப்படுகிறது. புதிதாக பதிவு செய்யும் திட்டங்களுக்கும் பதிவுக்கால நீட்டிப்பு பொருந்தும். வங்கி சேவை இல்லாத நிதி நிறுவனங்களுக்கு சுமார் 30,000 கோடி ரூபாய் நிதி. தேசிய நிதி மேம்பாடு கழகத்திற்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்படும்.
’சிறு, குறு தொழில்துறைக்கு ரூ.3 லட்சம் கோடி கடனுதவி அளிக்கப்படும் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Finance minister Nirmala Sitharaman press conference today updates: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரலை உரை
ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மேலும் மூன்று மாதங்களுக்கும் பிஎஃப் தொகையை மத்திய அரசே செலுத்தும். பிஎஃப் தொகையை அரசே செலுத்துவதால் நிறுவனம், ஊழியர்களுக்கு ரூ.6,500 கோடி மிச்சமாகும். ஏற்கனவே மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான பிஎஃப் தொகையை மத்திய அரசே செலுத்தியது. - நிதி அமைச்சர்
ஏற்கனவே கடன் பெற்று செலுத்த முடியாமல் உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்கள் இதற்கு தகுதியானவர்கள்.
சிறு குறு தொழில் நிறுவனங்கள் என்பதற்கான வரையறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது
வரையறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதன் மூலம் சிறு குறு தொழில் நிறுவனங்கள் பயன்பெறுவார்கள்
குறு நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது
சிறு தொழில்களுக்கு முதலீட்டு வரம்பு ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நடுத்தர நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.10 கோடியில் இருந்து ரூ.20 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது
- நிதி அமைச்சர்.
அடுத்த சில நாட்களுக்கு தொடர்ச்சியாக சிறப்பு பொருளாதாரம் தொடர்பாக அறிவிப்புகளை வெளியிடுவோம். 52,606 கோடி ரூபாய் 41 கோடி ஜன் தன் கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
69 கோடி குடும்பங்களுக்கு ரேஷன் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
18 ஆயிரம் கோடி ரூபாய் வருமான வரி, மக்களுக்கு திரும்ப தரப்பட்டுள்ளது
வருமான வரி பிடித்தம் திரும்ப செலுத்தபட்டதன் காரணமாக 14 லட்சம் வரி செலுத்துபவர்கள் பயனடைந்துள்ளனர்.
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு அடமானம் இல்லாமல் கடன் வழங்கப்படும்
- நிர்மலா சீதாராமன்
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு எந்தவித பிணையுமின்றி 3 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்படும். மத்திய அரசின் நடவடிக்கையால் 46 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பயன்பெறும். கடன் உதவி பெற சொத்துப் பத்திரம் போன்ற எதுவும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. கடனை நான்கு ஆண்டுகளில் திருப்பி அளிக்கலாம். முதல் ஓராண்டுக்கு கடன் தவணை வசூலிக்கப்படாது - நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்வீட்டர் பதிவில், இந்த சிறப்பு திட்டமானது நிதி தொகுப்பு மட்டுமல்ல, அது "சீர்திருத்தத்தை ஏற்படுத்தும் விதமாகவும், மனநிலையை மாற்றியமைக்கும் விதமாகவும் இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.
'ஆத்மநிர்பர் பாரத் அபியான்' திட்டம் என்பது வணிகர்கள், தெருக்கடைக்காரர்கள், சிறு மற்றும் குறு தொழிலாளர்கள், நேர்மையாக வரி செலுத்துபவர்கள், உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்குமானது. இது வெறும் நிதி தொகுப்பு மட்டுமல்ல, சீர்திருத்தத்தை ஏற்படுத்துதல், மனநிலையை மாற்றியமைத்தல் மற்றும் ஆட்சியின் மீது நம்பிக்கை ஏற்படுத்துதல் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, பொது முடக்கம் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நேற்றிரவு உரையாற்றினார். அதில் அவர் கூறும்போது,
கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் இழப்பை சரி செய்ய பொருளாதார சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளது. 'ஆத்மநிர்பர் பாரத் அபியான்' திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் ரிசர்வ் வங்கி மூலம் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் ஆகும். பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும். இது குறித்து நிதியமைச்சர் விரிவான தகவல்களை வெளியிடுவார் என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights