Nirmala Sitharaman Press Conference Latest Updates: நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த, பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி நிவாரணம் அறிவித்ததையடுத்து, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் இதன் திட்டங்களை வெளியிட்டார்.
அதில், 2019-20 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குத்தாக்கல் செய்ய ஜூலை மாதம் 31 தேதி இறுதி நாளாக இருந்தது. ஆனால் தற்போது அந்த காலக்கெடு மேலும் நான்கு மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளை முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை டிடிஎஸ் வரி விதிப்பு 25% குறைக்கப்படுகிறது. இதன் மூலம் மக்கள் கைகளில் சுமார் ரூ.50,000 கோடி அளவிற்கு பணப்புழக்கம் இருக்கும் என்று கூறியுள்ளார்.
அதுபோல, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கட்டுமான திட்டங்களின் பதிவுக்காலம் 6 மாதங்கள் நீட்டிக்கப்படுகிறது. புதிதாக பதிவு செய்யும் திட்டங்களுக்கும் பதிவுக்கால நீட்டிப்பு பொருந்தும். வங்கி சேவை இல்லாத நிதி நிறுவனங்களுக்கு சுமார் 30,000 கோடி ரூபாய் நிதி. தேசிய நிதி மேம்பாடு கழகத்திற்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்படும்.
’சிறு, குறு தொழில்துறைக்கு ரூ.3 லட்சம் கோடி கடனுதவி அளிக்கப்படும் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
சென்னையில் இன்று ஒரே நாளில் 380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,262 ஆக உயர்வு
– சுகாதாரத்துறை
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா
* கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9,227 ஆக உயர்வு
* சென்னையில் இன்று ஒரே நாளில் 380 பேருக்கு கொரோனா
* சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,262
‘நிதியமைச்சரின் அறிவிப்பில் ஏமாற்றமே மிஞ்சியது’
சிறு, குறு தொழில்துறையினருக்கு பெரிய அறிவிப்புகளை எதிர்பார்த்தோம்; ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது
– ப.சிதம்பரம்
2019-20ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நவம்பர் 30 வரை நீட்டிப்பு
* வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் மாதத்திலிருந்து நவம்பர் வரை நீட்டிப்பு
நாளை முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை டிடிஎஸ் வரி விதிப்பு 25% குறைப்பு
* இதன் மூலம் மக்கள் கைகளில் சுமார் ரூ.50000 கோடி அளவிற்கு பணப்புழக்கம் இருக்கும்
சில குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு வங்கி உத்தரவாத தொகையை அரசு நிறுவனங்கள் விடுவிக்கலாம். அரசு ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளை முடிக்க 6 மாத காலம் கூடுதல் அவகாசம்
ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கட்டுமான திட்டங்களின் பதிவுக்காலம் 6 மாதங்கள் நீட்டிப்பு. புதிதாக பதிவு செய்யும் திட்டங்களுக்கும் பதிவுக்கால நீட்டிப்பு பொருந்தும் – நிதி அமைச்சர்
வங்கி சேவை இல்லாத நிதி நிறுவனங்களுக்கு சுமார் 30,000 கோடி ரூபாய் நிதி.
தேசிய நிதி மேம்பாடு கழகத்திற்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்படும்
மின் உற்பத்தியில் தன்னிறைவு பெறச் செய்துள்ள மின்சார நிறுவனங்களுக்கு கைக்கொடுக்கிறது மத்திய அரசு. அதன்படி, மின்சார நிறுவனங்களுக்கு ரூ.90,000 கோடி நிதியுதவி அளிக்கப்படும் – நிதி அமைச்சர்
ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மேலும் மூன்று மாதங்களுக்கும் பிஎஃப் தொகையை மத்திய அரசே செலுத்தும். பிஎஃப் தொகையை அரசே செலுத்துவதால் நிறுவனம், ஊழியர்களுக்கு ரூ.6,500 கோடி மிச்சமாகும். ஏற்கனவே மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான பிஎஃப் தொகையை மத்திய அரசே செலுத்தியது. – நிதி அமைச்சர்
ஏற்கனவே கடன் பெற்று செலுத்த முடியாமல் உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்கள் இதற்கு தகுதியானவர்கள்.
சிறு குறு தொழில் நிறுவனங்கள் என்பதற்கான வரையறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது
வரையறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதன் மூலம் சிறு குறு தொழில் நிறுவனங்கள் பயன்பெறுவார்கள்
கடன் பெறும் சிறு குறு நிறுவனங்கள் முதல் 1 ஆண்டுக்கு கடனை திருப்பி செலுத்த தேவையில்லை
* RERA-வின் கீழ் பதிவு செய்த ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், கட்டுமானத்தை முடிக்க வேண்டியதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
15 திட்டங்களில், 6 திட்டங்கள் சிறு குறு தொழில் துறைக்கானது- நிர்மலா சீதாராமன்
* அக்டோபர் மாதம் வரை 3 லட்சம் கோடி மதிப்பிலான கடன் வழங்கப்படும்
ஏழைகளுக்கு உதவுவதற்காக ரூ.1.7 லட்சம் கோடி மதிப்புள்ள நிவாரண நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது
* ஒவ்வொரு சுகாதார ஊழியருக்கும் ரூ.50 லட்சம் காப்பீட்டுத் தொகையை பன்முகத்தன்மை கொண்ட யோஜனா வழங்கியுள்ளது
குறு நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது
சிறு தொழில்களுக்கு முதலீட்டு வரம்பு ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நடுத்தர நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.10 கோடியில் இருந்து ரூ.20 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது
– நிதி அமைச்சர்.
அடுத்த சில நாட்களுக்கு தொடர்ச்சியாக சிறப்பு பொருளாதாரம் தொடர்பாக அறிவிப்புகளை வெளியிடுவோம். 52,606 கோடி ரூபாய் 41 கோடி ஜன் தன் கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
69 கோடி குடும்பங்களுக்கு ரேஷன் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
18 ஆயிரம் கோடி ரூபாய் வருமான வரி, மக்களுக்கு திரும்ப தரப்பட்டுள்ளது
வருமான வரி பிடித்தம் திரும்ப செலுத்தபட்டதன் காரணமாக 14 லட்சம் வரி செலுத்துபவர்கள் பயனடைந்துள்ளனர்.
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு அடமானம் இல்லாமல் கடன் வழங்கப்படும்
– நிர்மலா சீதாராமன்
பொது முடக்க காலத்தில் நலிவடைந்துள்ள சிறுதொழில் துறைக்கு கடன் வழங்க ரூ.20,000 கோடி நிதி – நிதியமைச்சர்
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உடனேயே இந்த கொரோனா என்கிற பேரிடர் வந்திருக்கிறது
* 41 கோடி ஜன் தன் வங்கி கணக்குகளில் பிரதம மந்திரியின் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் நேரடியாக பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு எந்தவித பிணையுமின்றி 3 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்படும். மத்திய அரசின் நடவடிக்கையால் 46 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பயன்பெறும். கடன் உதவி பெற சொத்துப் பத்திரம் போன்ற எதுவும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. கடனை நான்கு ஆண்டுகளில் திருப்பி அளிக்கலாம். முதல் ஓராண்டுக்கு கடன் தவணை வசூலிக்கப்படாது – நிர்மலா சீதாராமன்
’சிறு, குறு தொழில்துறைக்கு ரூ.3 லட்சம் கோடி கடனுதவி’
சிறு, குறு தொழில்துறைக்கு இன்று 6 சலுகை அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன
வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கு ரூ.18,000 கோடி திருப்பி அளிக்கப்பட்டுள்ளது
– நிர்மலா சீதாராமன்
எரிசக்தி துறையில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறியுள்ளது- நிர்மலா சீதாராமன்
* உலகம் முழுவதற்கும் இன்று இந்தியா தான் மருந்துகளை கொடுத்து உதவுகிறது – நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர்
தொழிற்துறை வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பு, தொழிலாளர் வளம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தபடுகிறது; நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது
– மத்திய நிதியமைச்சர் அமைச்சர் நிர்மலா சீதாராமன்
ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்களை அடுத்த சில நாட்களுக்கு படிப்படியாக அறிவிப்போம். இன்று 15 திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் – நிர்மலா சீதாராமன்
தூய்மை இந்தியா, ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு, இலவச கேஸ் சிலிண்டர் போன்றவை இந்த காலத்தில் கைகொடுத்துள்ளன
* பிரதான் மந்திரி கிசான் திட்டம், நேரடியாக ஏழைகளுக்கு பணம் செலுத்துதல் போன்றவை முழு முடக்க காலத்தில் மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது
உள்ளூர் வர்த்தக சின்னங்களை சர்வதேச அளவில் கொண்டு சேர்க்க இத்திட்டம் பயன்படும். மக்கள் சொல்வதை கேட்டு, அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கும் அரசு – நிர்மலா சீதாராமன்
நேரடியாக பணம் செலுத்தும் அரசின் திட்டம் மூலம் ஏழைகள் பயன்பெற்று வருகிறார்கள்; மின்துறை சீர்த்திருத்தங்கள் நாட்டை மின்மிகை நாடாக உருவாக்கியுள்ளது – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
வளர்ச்சியை ஏற்படுத்தவும், தன்னிறவை உருவாக்கவும் இந்த சுயசார்ப்பு பாரத திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது
* திட்டத்தின் 5 முக்கிய தூண்கள் – பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழிநுட்பம், மக்கள் சக்தி, தேவைகள்
பல்வேறு தரப்பினரும் கலந்து ஆலோசித்து இந்த சிறப்பு பொருளாதார தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது
* தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம் – நிதியமைச்சர்
பிரதமர் அறிவித்த திட்டம் ‘சுயசார்பு பாரதம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்படும் – நிர்மலா சீதாராமன்
ரூ.20 லட்சம் கோடி பொருளாதார வளர்ச்சி திட்ட முதல்கட்ட அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்வீட்டர் பதிவில், இந்த சிறப்பு திட்டமானது நிதி தொகுப்பு மட்டுமல்ல, அது “சீர்திருத்தத்தை ஏற்படுத்தும் விதமாகவும், மனநிலையை மாற்றியமைக்கும் விதமாகவும் இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.
‘ஆத்மநிர்பர் பாரத் அபியான்’ திட்டம் என்பது வணிகர்கள், தெருக்கடைக்காரர்கள், சிறு மற்றும் குறு தொழிலாளர்கள், நேர்மையாக வரி செலுத்துபவர்கள், உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்குமானது. இது வெறும் நிதி தொகுப்பு மட்டுமல்ல, சீர்திருத்தத்தை ஏற்படுத்துதல், மனநிலையை மாற்றியமைத்தல் மற்றும் ஆட்சியின் மீது நம்பிக்கை ஏற்படுத்துதல் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, பொது முடக்கம் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நேற்றிரவு உரையாற்றினார். அதில் அவர் கூறும்போது,
கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் இழப்பை சரி செய்ய பொருளாதார சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளது. ‘ஆத்மநிர்பர் பாரத் அபியான்’ திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் ரிசர்வ் வங்கி மூலம் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் ஆகும். பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும். இது குறித்து நிதியமைச்சர் விரிவான தகவல்களை வெளியிடுவார் என்று கூறினார்.