Rajiv Kumar | Election Commission | Lok Sabha Election 2024: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Centre accords Z-category VIP security cover to CEC Rajiv Kumar
தலைமை தேர்தல் ஆணையருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு
மக்களவை தேர்தலை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கண்காணித்து வரும் நிலையில், அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய பாதுகாப்பு ஏஜென்சிகள் அறிக்கை அளித்துள்ளன. அதனடிப்படையில். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் (Z-category VIP security) என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 40-45 வீரர்கள் ராஜீவ் குமாருக்கு பாதுகாப்பு வழங்குவார்கள்.
ராஜீவ் குமார் 1984 பேட்ச்சைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். அவர் கடந்த மே 15, 2022 அன்று 25-வது இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றார். அதற்கு முன் செப்டம்பர் 1, 2020 அன்று தேர்தல் ஆணையத்தில் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“