இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் மீதான சுங்கவரி நீக்கம் - மத்திய அரசு அறிவிப்பு

சமையலுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய சமையல் எண்ணெய்களான பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் இறக்குமதி மீதான 2.5% சுங்கவரி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

சமையலுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய சமையல் எண்ணெய்களான பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் இறக்குமதி மீதான 2.5% சுங்கவரி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Union Government removed custom taxes for imported edible oil, edible oil price, edible oil, இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் மீதான சுங்கவரி நீக்கம், சமையல் எண்ணெய், மத்திய அரசு அறிவிப்பு, cooking oil, palm oil

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்க்கு விதிக்கப்படும் 2.5% சுங்கவரி முழுவதுமாக நீக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertisment

பெட்ரோல், டீசலை விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்ததை அடுத்து விமர்சனங்கள் எழுந்தது. இதையடுத்து, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மத்திய அரசு பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை லிட்டருக்கு பெட்ரோல் 5 ரூபாயும் டீசல் 10 ரூபாய் குறைத்து அறிவித்தது. அதே போல, இந்தியாவில் சமையல் எண்ணெய்களின் விலை உச்சத்தை தொட்டு விற்பனையானது.

கடந்த 2020ம் ஆண்டு தொடக்கத்தில் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சமையல் எண்ணெய் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ரூ.180-ஐத் தொட்டது.

இந்த நிலையில், சமையலுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய சமையல் எண்ணெய்களான பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் இறக்குமதி மீதான 2.5% சுங்கவரி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சமையல் எண்ணெய்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு நடவடிக்கையை மேற்க்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu India

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: