ஷாலினி நாயர்
Union government schemes for Dalit villages: அடுத்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு அரசு திட்டங்களை கவனமாக செயல்படுத்த 26,968 தலித் பெரும்பான்மை கிராமங்களை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது. சமூக-பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு தேவைகளில் முக்கியமான இடைவெளிகளை பூர்த்தி செய்வதற்கும், ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கும் தேவையான அனைத்து மத்திய மற்றும் மாநில நலத்திட்டங்களும் இதில் அடங்கும்.
இந்த கிராமங்கள் - மொத்த மக்கள்தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் தலித்துகள் மற்றும் ஒட்டுமொத்த மக்கள்தொகை கொண்டவர்கள் - பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம யோஜனாவின் கீழ் “ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக” இலக்காக்கப்பட்டுள்ளனர்.
“தரவுகளின்படி, அனைத்து 46,859 வருவாய் கிராமங்களில் வசிப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இதில், 26,968 கிராமங்களில் 500 க்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ளது. இதில் அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு எங்கள் கவனம் இருக்கும் ” என்று இந்த திட்டத்தை செயல்படுத்தி வரும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இத்திட்டம் முக்கியமாக தற்போதுள்ள மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களை மையமாகக் கொண்டு செயல்படுத்துவதையும், ஒன்றிணைப்பதை உறுதி செய்வதையும் பற்றியது என்றாலும், அமைச்சகம் ஒரு கிராமத்திற்கு ரூ .21 லட்சத்தை இடைவெளி நிதியாக வழங்குகிறது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 16.6 சதவீத தலித்துகள் உள்ளனர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், மேற்கு வங்கம், மற்றும் டெல்லி யூனியன் பிரதேசம் போன்ற மாநிலங்கள் 20 சதவீதத்திற்கும் அதிகமான தலித் மக்களைப் பதிவு செய்திருக்கின்றன.
பிரதான தலித் கிராமங்களில் பகுதி அடிப்படையிலான மேம்பாட்டு அணுகுமுறைக்காக பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம யோஜனா 2009-10 ஆம் ஆண்டில் முதன்முதலில் பரிசோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது. கடந்த பத்தாண்டுகளில், வெறும் 2,500 தலித் பெரும்பான்மை கிராமங்கள் இத்திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ளன என்பது கண்டறியப்பட்டதை அடுத்து, இந்த கிராமங்களில் திட்டத்தை செயல்படுத்த விரைவுபடுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார். முந்தைய அணுகுமுறையில், வேகம் காரணமாக, மக்கள் படிப்படியாக ஆர்வத்தை இழந்தனர். இறுதியில் நடைமுறைப்படுத்துதல் இல்லாமல் தோல்வியடைந்தது. மேலும், தொடர்ச்சியான தடை காரணமாக, வருடாந்திர அடிப்படையில் இத்திட்டத்திற்கு வழக்கமான பட்ஜெட் ஒதுக்கீடு இல்லை. எனவே நாங்கள் எங்கள் புதிய அணுகுமுறையின்படி 7,000 கிராமங்களை கையகப்படுத்த முடிவு செய்துள்ளோம்”என்று அந்த அதிகாரி கூறினார்.
இந்த திட்டத்தின் முந்தைய அணுகுமுறை பட்டியல் சாதிகள் பெரும்பான்மையாக உள்ள கிராமங்களில் ஸ்தூலமான உள்கட்டமைப்பு வளர்ச்சியை உறுதி செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கிராமங்களில் தலித் மற்றும் பொது வீடுகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வைக் குறைக்க 50 சமூக-பொருளாதார நிலை குறிகாட்டிகளை மேம்படுத்துவதற்காக இப்போது இது மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த 50 கண்காணிக்கக்கூடிய குறிகாட்டிகளில் ஆரோக்கியம், கல்வி, குடிநீர் மற்றும் சுகாதாரம், சமூக பாதுகாப்பு, சாலைகள் மற்றும் வீட்டுவசதி, மின்சாரம், விவசாயம், வாழ்வாதாரங்கள், நிதி சேர்க்கை மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் போன்ற 10 முக்கிய அடிப்படை சேவை பகுதிகளுக்குள் அடங்கும்.
கிராமப்புற இந்தியாவில் அதன் சமூக நலத் திட்டங்களுக்கு ஏழ்மையான குடும்பங்களை குறிவைத்து சமூக-பொருளாதார குறிகாட்டிகளைப் பயன்படுத்துவதற்கு மோடி அரசாங்கத்தின் வாக்குறுதிகள் சமீபத்திய மக்களவைத் தேர்தலின்போது தேசிய ஜனநாயக கூட்டணி பலனை அடைந்தது. அதை இந்த கூட்டணி பெரும்பாண்மையாக வென்ற தொகுதிகளின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அவற்றில் அனைத்து அரசாங்க திட்டங்களையும் செயல்படுத்துவதை இலக்காகக் கொண்டு நிதி ஆயோக் 115 பின்தங்கிய மாவட்டங்களை அடையாளம் கண்டுள்ளது.தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் அதன் முதல் காலப்பகுதியில் சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பிலிருந்து பற்றாக்குறை குறிகாட்டிகளைப் பயன்படுத்தத் தொடங்கியது.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் அதன் முதல் பதவி காலத்தில் எஸ்.சி, எஸ்.டி மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்வதற்கு பற்றாக்குறை குறிகாட்டிகளைப் பயன்படுத்தத் தொடங்கியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.