Advertisment

கோவிட் -19 தடுப்பூசி புதிய வழிகாட்டுதல்கள்: மாநிலங்களுக்கு மக்கள்தொகைக்கு ஏற்ப ஒதுக்கீடு

திருத்தப்பட்ட தடுப்பூசி வழிகாட்டுதல்களின்படி, தடுப்பூசி தயாரிப்பாளர்களிடமிருந்து மாநில அரசின் ஒதுக்கீட்டில் 25 சதவீதம் உள்பட ஒன்றிய அரசு 75 சதவீத அளவும் தடுப்பூசியை வாங்கி மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கும்.

author-image
WebDesk
New Update
govt releases revised covid 19 vaccination guidelines, revised covid 19 vaccination guidelines, கொரோனா தடுப்பூசி, கோவிட் தடுப்பூசி, கோவிட் 19 தடுப்பூசி புதிய வழிகாட்டுதல்கள், new vaccine guidelines, covid 19 news, covid 19 vaccine news

பிரதமர் நரேந்திர மோடி ஒன்றிய அரசின் கோவிட் -19 தடுப்பூசி கொள்கையை மாற்றியமைத்து, 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்றும் மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூ வழங்கப்படும் என்றும் நேற்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து, தடுப்பூசிக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.

Advertisment

தடுப்பூசி கொள்முதல் செய்வதை ஒன்றிய அரசு ஏற்க வேண்டும் என்றும் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்று மாநில அரசுகள் ஒன்றாக குரல் எழுப்பிய நிலையில் ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

ஒன்றிய அரசின் மாற்றியமைக்கப்பட்ட புதிய வழிகாட்டுதல்களின்படி, மாநில ஒதுக்கீட்டில் 25 சதவீதம் உட்பட தடுப்பூசி தயாரிப்பாளர்களிடமிருந்து 75 சதவீத அளவை ஒன்றிய அரசு வாங்கி மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கும். பிரதமர் தனது திங்கள்கிழமை உரையில் கூறியது போல, எந்த மாநில அரசும் தடுப்பூசி கொள்முதல் செய்ய செலவு செய்ய வேண்டியதில்லை.

இருப்பினும், தடுப்பூசி அளவுகளை ஒதுக்கீடு செய்வது என்பது மாநிலங்களின் மக்கள் தொகை மற்றும் வீணாகும் தடுப்பூசிகள் உள்ளிட்ட காரணிகளைப் பொறுத்திருக்கும் என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. மக்கள்தொகை, நோய் தொற்றின் எண்ணிக்கை மற்றும் தடுப்பூசியின் வளர்ச்சி போன்ற அளவுகோல்களின் அடிப்படையில் இந்திய அரசு இலவசமாக வழங்குகிற தடுப்பூசி அளவுகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கப்படும். தடுப்பூசி வீணாவது ஒதுக்கீட்டை எதிர்மறையாக பாதிக்கும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக தடுப்பூசிகளை வழங்குவதற்கான அனுமதி வழங்கப்படும். மேலும், தனியார் மருத்துவமனைகளுக்கு சேவைக் கட்டணமாக அதிகபட்சமாக ரூ.150 வசூலிக்க அனுமதிக்கப்படும்.

மேலும், மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் தடுப்பூசி எத்தனை டோஸ் அளவு வழங்கப்படும் என்பதை முன்கூட்டியே அறிவிக்கப்படும். மாவட்டங்களுக்கும் தடுப்பூசி மையங்களுக்கும் மாநிலங்கள் இதேபோல் முன்கூட்டியே அளவுகளை ஒதுக்க வேண்டும் என்று அரசாங்கம் கூறியுள்ளது. “மாவட்டத்திலும் தடுப்பூசி மையங்கள் அளவிலும் தடுப்பூசி கிடைப்பது பற்றிய தகவல்களையும் பொதுவில் வைக்க வேண்டும். அதை உள்ளூர் மக்களிடையே பரவலாகப் பரப்ப வேண்டும். அதை குடிமக்களுக்கு தெரியபடுத்துவதற்கான வசதியையும் அதிகரிக்க வேண்டும்” என்று வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடுவதில், முதலில் முன்களப் பணியாளர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கும் 45 வயதிற்கு மேற்பட்ட குடிமக்களுக்கு இரண்டாவது டோஸ் செலுத்த வேண்டிய குடிமக்களுக்கும், பின்னர் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன.

புதிய விதிமுறைகளின்படி, அனைத்து குடிமக்களும், அவர்களின் வருமானத்தைக் கணக்கில் கொள்ளாமல் அனைவரும் இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள உரிமை உண்டு. பணம் செலுத்தும் திறன் உள்ளவர்கள் தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி மையங்களைப் பயன்படுத்திக்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டு மக்களிடம் திங்கள்கிழமை உரையாற்றிய பிரதமர் மோடி, இதுவரை கோடிக்கணக்கான மக்கள் கோவிட் தடுப்பூசிகளை இலவசமாகப் பெற்றுள்ளனர். இப்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் இந்த வகையில் சேர்க்கப்படுவார்கள் என்று கூறினார். இன்றுவரை, இந்தியா சுமார் 23 கோடி டோஸ் தடுப்பூசி வழங்கியுள்ளது. இந்திய அரசு நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவச தடுப்பூசியை வழங்கும் என்று கூறினார்.

மேலும் பிரதமர் மோடி தனது உரையில், 7 நிறுவனங்கள் வெவ்வேறு வகையான தடுப்பூசிகளை உற்பத்தி செய்கின்றன. மூன்று தடுப்பூசிகளின் சோதனைகள் மேம்பட்ட நிலையில் உள்ளன என்று கூறினார். குழந்தைகளுக்கான இரண்டு தடுப்பூசிகளுக்கான சோதனைகள் மற்றும் நாசல் தடுப்பூசி குறித்த ஆராய்ச்சி ஆகியவை நடைபெற்று வருகின்றன என்று கூறினார்.

தடுப்பூசி கொள்கையில் மாற்றம் உச்சநீதிமன்றம் இது குறித்து கேள்விகளை எழுப்பியதோடு பல மாநிலங்கள் தடுப்பூசிகளை மையமாக வாங்க முயன்றன. நாடு முழுவதும் மாநிலங்கள் வரவிருக்கும் நாட்களில் பூட்டுதல் கட்டுப்பாடுகளை கணிசமாகக் குறைக்க திட்டமிட்டுள்ள நேரத்தில் இது வருகிறது.

தடுப்பூசி கொள்கை குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியதோடு, மாநிலங்கள் தடுப்பூசிகளை மொத்தமாக மையப்படுத்தி வாங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததற்குப் பிறகு, தடுப்பூசி கொள்கையில் மாற்றம் வந்திருக்கிறது. நாடு முழுவதும் மாநிலங்கள் வரவிருக்கும் நாட்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கணிசமாகக் குறைக்க திட்டமிட்டுள்ள நேரத்தில் புதிய தடுப்பூசி கொள்கை வந்துள்ளது.

அதே நேரத்தில், தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசிக்கான விலையை ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது. கோவிஷீலுடு ரூ.780, கோவேக்ஸின் ரூ.1,410, ஸ்புட்னிக் V ரூ.1,145 ஆக விலை நிர்ணயம் செய்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Covid 19 In India Covid 19 Vaccine 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment