மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேரம் மற்றும் சுத்தத்தை கடைபிடிப்பதில் அதிக கவனம் செலுத்துபவர்.அவர் அமைச்சராக பொறுப்பேற்றதும், காலை 9.30 மணிக்கு பணிக்கு வந்துவிடுவேன் என துறை அதிகாரிகளிடம் கூறினார். அதே போல, நீங்கள் பணிக்கு சரியான நேரத்தில் வந்துவிட வேண்டுமென உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
திங்கட்கிழமை, பல்வேறு தளங்களில் உள்ள அதிகாரிகள் அறையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பலர் சில அதிகாரிகள் இல்லாததைக் கவனித்தார்.
மேலும், வளாகம் சுத்தமாக உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார். கடந்த மாதம், உபயோகமில்லாத டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் பர்னிச்சர்களை துறை வளாகத்திலிருந்து அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.
பிரதிநிதிகளை அரவனைக்கும் என்எஸ்ஏ
ஆப்கானிஸ்தான் தொடர்பான பாதுகாப்பு மாநாடு டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் நடைபெறுகிறது. இதில், ஏழு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.
கூட்டம் முடிந்தபிறகு, சில பிரதிநிதிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். கஜகஸ்தான் பிரதிநிதிகள் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்குச் செல்லவும், உஸ்பெகிஸ்தான் பிரதிநிதிகள் தாஜ்மஹாலைப் பார்க்க ஆக்ராவுக்குச் செல்லவும், தஜிகிஸ்தானிலிருந்து வரும் பிரதிநிதிகள் டெல்லியில் சில பகுதிகளை பார்வையிட விருப்பும் தெரிவித்துள்ளனர்.
அவர்களுடன் பயணித்து தேவையான பாதுகாப்பை வழங்கிட NSA அலுவலகமும், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் உள்ள குழுவும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வேகமெடுக்கும் மத்திய வித்ஸா பணிகள்
மத்திய விஸ்தா கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 7,500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தளத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதே போல், 1,795 பேர் ஆஃப்-சைட் பணியில் உள்ளனர். மத்திய விஸ்தா அவென்யூ பணிகளை, 2022 குடியரசு தினத்திற்கு முடித்திட இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக, போர்கால் அடிப்படையில் பணியின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், . குடியரசு தின அணிவகுப்புக்காக ராஜ்பாத்தின் புதுப்பிக்கப்பட்ட வழிதடத்தை பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பணியில் ஈடுபடுவோர்களில் 8,259 தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.