மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், கொரோனா பரிசோதனையை அதிகரிக்க அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. பல மாநிலங்கள் பரிசோதனையை குறைத்திருப்பதை தரவுகள் காட்டுவதாக தெரிவித்துள்ளது.
கூடுதல் சுகாதாரச் செயலர் ஆர்த்தி அஹுஜா, மாநிலத்தின் பெயரை குறிப்பிடாமல், ஒமிக்ரான் அதிவேக பரவல் காரணமாக, மத்திய அரசு வெளியிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் அனைத்து மாநில சுகாதாரத் துறை செயலர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
புதிய வழிகாட்டு நெறிமுறையின்படி, அறிகுறியுடன் கூடிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், கண்டிப்பாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அறிகுறியற்றவர்கள் பரிசோதனை மேற்கொள்ள தேவையில்லை.
கடந்தாண்டு ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் இந்தியா செய்த சோதனையில் 60 சதவீதத்தையே தற்போது செய்து வருகிறது. அப்போதும், இதே அளவிலான கொரோனா பாதிப்பு எண்ணகிக்கை பதிவாகி கொண்டிருந்ததது. திங்களன்று, நாடு முழுவதும் 16.49 லட்சம் கொரோனா பரிசோதனைகளை மட்டுமே நடத்தப்பட்டுள்ளது.
அஹுஜா தனது கடிதத்தில், "நாடு முழுவதும் ஒமிக்ரான் கவைலக்குரிய மாறுபாடாக பரவி வருகிறது. தற்போது, பரிசோதனை மட்டுமே முக்கிய அங்கமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரிசோதனை எண்ணிக்ககை குறைந்துள்ளது தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
டெல்லி, மகாராஷ்டிரா, பீகார், ஹரியானா, ஆந்திரா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம் ஆகிய முக்கிய மாநிலங்களில் வார இறுதி நாட்களில் காணப்படும் வழக்கமான சரிவை விட, தற்போது நான்கு அல்லது ஐந்து நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.இந்த மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பும் குறைந்து வருகிறது.
இருப்பினும், தேசியளவில், சோதனை எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. எடுத்துக்காட்டாக, திங்கட்கிழமை, ஏழு நாள் சராசரி சோதனைகள் 17.5 லட்சத்தைத் தொட்டன, இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து மிக அதிகமாகும்.
தனிப்பட்ட நாட்களில், சோதனை எண்ணிக்கையும் 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இருப்பினும், இரண்டாவது அலையின் போது, மே இறுதி மற்றும் ஜூன் தொடக்கத்தில் சுமார் ஒரு வாரத்திற்கு இந்த எண்ணிக்கை 30 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தது.
தற்போதைய வாராந்திர நேர்மறை விகிதம் 14.22 சதவீதமாக உள்ளது, இது ஜூன் முதல் வாரத்தில் இருந்ததை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
தற்போதைய பாசிட்டிவ் விகிதம் மே முதல் வாரத்தில் இரண்டாவது அலையின் போது இருந்த உச்சத்தை விட தற்போது கீழே உள்ளது. அந்த நேரத்தில், நேர்மறை விகிதம் 22 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சில மாநிலங்களில் பாதிப்புகள் திடீரென குறைந்துள்ளது, சோதனை செய்யப்படும் மாதிரிகளின் எண்ணிக்கை குறைவதன் காரணமாக இருக்கலாம். இது தேசிய அளவில் பதிவாகும் எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
திங்களன்று கண்டறியப்பட்ட 2.38 லட்சம் பாதிப்பு எண்ணிக்கை, கடந்த ஆறு நாட்களில் மிகக் குறைவான எண்ணிக்கையாகும். இது தற்காலிக நிகழ்வாக மட்டுமே இருக்க முடியும். வரும் நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது.
சோதனை முறையில் மாநிலங்கள் ஒரே மாதிரியான முறையைப் பின்பற்றாததால், மூன்றாவது அலையின் போது தொற்று எவ்வாறு பரவுகிறது என்பதை துல்லியமாக கண்டறியமுடியவில்லை. இதன் காரணமாக, மூன்றாம் அலை உச்சமடைய இன்னும் சிறிது நாள்கள் ஆகலாம்" என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.