மேற்கு வங்கம் மாநிலத்தில் தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பின் நடந்த வன்முறைகள் பற்றி விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் 4 உறுப்பினர்கள் குழுவை அமைத்துள்ளது.
மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய பிவன்முறைக்கான காரணங்களை கண்டறிவதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் 4 உறுப்பினர்களைக் கொண்ட உண்மை அறியும் குழுவை அமைத்துள்ளது. மேலும், மாநிலத்தின் கள நிலைமையை மதிப்பிடுவதாகவும் அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகள் பற்றி விசாரிப்பதற்காக மத்திய உள்த்றை அமைச்சகம் 4 உறுப்பினர்களைக் கொண்ட உண்மை அறியும் குழுவை அமைத்தது. இதையடுத்து, உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் தலைமையிலான குழு அம்மாநிலத்திற்கு புறப்பட்டது.
தேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கவும், இதுபோன்ற சம்பவங்களை கால தாமதமின்றி தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் மேற்கு வங்க அரசாங்கத்திற்கு அமைச்சகம் கடுமையான அறிவுத்தலை புதன்கிழமை அனுப்பியது.