scorecardresearch

மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் உடல்நலக் குறைவால் இன்று காலை மரணம்…

மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் மரணம் : பாஜக உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சருமான ஆனந்த் குமார் இன்று அதிகாலை 2 மணி அளவில் உயிரிழந்தார்.  பெங்களூருவில் தன்னுடைய மனைவி தேஜஸ்வினி மற்றும் இரண்டு மகள்கள் அவருடன் இன்று அதிகாலை பெங்களூருவில் இருக்கும் சங்கரா மருத்துவமனையில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனந்த குமாரின் உடல் நேசனல் காலேஜ் மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது என பாஜக கூறியுள்ளது. 59 வயதான ஆனந்த குமார், மோடியின் அமைச்சரவையில் […]

மத்திய அமைச்சர் ஆனந்த் குமார்
மத்திய அமைச்சர் ஆனந்த் குமார்
மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் மரணம் : பாஜக உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சருமான ஆனந்த் குமார் இன்று அதிகாலை 2 மணி அளவில் உயிரிழந்தார்.  பெங்களூருவில் தன்னுடைய மனைவி தேஜஸ்வினி மற்றும் இரண்டு மகள்கள் அவருடன் இன்று அதிகாலை பெங்களூருவில் இருக்கும் சங்கரா மருத்துவமனையில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனந்த குமாரின் உடல் நேசனல் காலேஜ் மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது என பாஜக கூறியுள்ளது.

59 வயதான ஆனந்த குமார், மோடியின் அமைச்சரவையில் 2014ம் ஆண்டு முதல், மத்திய ரசாயனம் மற்றும் உரம், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக பதவியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தெற்கு பெங்களூரு தொகுதியின் அமைச்சர் இவர்.

வெகுநாட்களாக புற்றுநோயால் அவதியுற்று வந்த ஆனந்த் குமார் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் சிகிச்சைப் பெற்றுவிட்டு மிக சமீபத்தில் தான் பெங்களூரு திரும்பினார் ஆனந்த குமார். பெங்களூரில் இருக்கும் சங்கரா மருத்துவமனையில் இவருக்கு தொடர் சிகிச்சைகள் நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. விரிவான செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் மரணம் : தலைவர்கள் இரங்கல்கள்

“ஆனந்த் குமார் நல்ல நிர்வாகி. பல்வேறு பதவிகளை அமைச்சரவையிலும், பாஜகவிலும் நேர்த்தியுடன் வகித்து வந்தவர். பாஜகவிற்காக கர்நாடகாவில் அதிகம் உழைத்தவர், மிக முக்கியமாக பெங்களூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாஜக வலுப்பெற காரணமாக இருந்தவர் அவர். அவருடைய தொகுதி மக்கள் எப்போது வேண்டுமானாலும் அவரை அணுக இயலும்” என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருக்கிறார் மோடி.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தன்னுடைய இரங்கல் செய்தியை பதிவு செய்திருக்கிறார். அதில் “ஆனந்த் குமாரின் மரணம் மிகவும் வருத்தப்பட வைக்கிறது. இவரின் மரணம் கர்நாடக மக்களுக்கு ஈடு செய்ய இயலாத ஒன்றாகும். அவருடைய குடும்பத்தார், உறவினர், மற்றும் உடன் பணிபுரிவோர் அனைவருக்கும் ஆழ்ந்த வருத்தங்களை கூறிக் கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

கர்நாடக முதல்வர் குமாரசாமியின் இரங்கல் செய்தி

”ஆனந்த் குமாரின் மறைவு செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தப்படுகின்றேன். நல்ல தலைவர், இந்த நாட்டிற்கு அவர் அமைச்சராக இருந்து ஆற்றிய பணிகள் பல. நான் என்னுடைய உற்ற நண்பனை இழந்துவிட்டேன். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்” என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்

பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய இரங்கல் செய்தியில் “பெங்களூரு மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் இதயத்தில் என்றுமே நிலைத்திருந்த ஒன்றாகும். BJP4India மற்றும் BJP4Karnataka என்று பாஜக வலுப்பெற உதவியவர்களில் மிகவும் முக்கியமானவர் ஆனந்த் குமார். அவருடைய இழப்பினை தாங்கும் தைரியத்தினை அவரின் குடும்பத்தாருக்கு கடவுள் தரட்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ராகுல் காந்தியின் இரங்கல் செய்தி

“மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் இன்று காலை பெங்களூருவில் உயிரிழந்த செய்தி கேட்டு நான் மிகவும் வருத்தம் அடைகிறேன். அவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு என்னுடைய இரங்கல்கள்” என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் செய்தியை பதிவு செய்திருக்கிறார்.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Union minister ananth kumar passes away