மேற்குவங்கத்தில் மத்திய அமைச்சரை சிறைப்பிடித்து தாக்கிய மாணவர்கள்: ஆளுனரே நேரடியாக சென்று மீட்டார்

Union Minister Babul Supriyo thrashed at Jadavpur University:  மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்துக்கு மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரிரோ வருகைக்கு எதிர்ப்பு...

Union Minister Babul Supriyo thrashed at Jadavpur University:  மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்துக்கு மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரிரோ வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த பல்கலைக்கழக மாணவர்கள் அவரை தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்றம் துறையின் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மாணவர் கூட்டமைப்பு மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் பல்கலைக்கழக மாணவர்கள்பல்கலைக்கழகத்துக்கு அமைச்சர் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அமைச்சர் பாபுல் சுப்ரியோ பலகலைக்கழக வளாகத்தைவிட்டு வெளியேற மறுத்து அந்த மாணவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  இது தொடர்பாக மாணவர்கள்,
பாஜக பல்கலைக்கழக வளாகத்தில் வரவேற்கப்படுவதில்லை என்றும் மத்திய அமைச்சர் எங்குவேண்டுமானாலும் செல்ல உரிமை இருக்கிறது என்றும் கூறினர்.

அப்போது பல்கலைக்கழக சுரஞ்ஜன் தாஸ் தலையிட்டு அமைச்சர் பாபுல் சுப்ரியோவை இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். ஆனா, மாணவர்கள் தனது கால்களை இழுத்து தாக்கப்பட்டதாகக் கூறினார். இதனால், அங்கே ஒரு மணிநேரம் பரபரப்பாக இருந்தது.

இறுதியாக, சுப்ரியோ ஆடிட்டோரியத்திற்குள் நுழைந்தார், அங்கு ஏபிவிபி ‘சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் ஆளுகை’ என்ற கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. இருப்பினும், அவர் வளாகத்தை விட்டு வெளியேற முயன்றபோது மற்றொரு சுற்று எதிர்ப்பை எதிர்கொண்டார். பாபுல் சுப்ரியோ மீண்டும் மூர்க்கமாக தடுக்கப்பட்டார். அவரது கண்ணாடி கீழே விழுந்தது. அவருடைய முடியைப் பிடித்து இழுத்து மூர்க்கமாக நடந்துகொண்டதால் பல்கலைக்கழக வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ செய்தியாளர்களிடம் கூறுகையில், “நான் கடுமையாக தாக்கப்பட்டேன். என் தலைமுடியை பிடித்து இழுத்து என்னை குத்தி உதைத்தனர். ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து நான் முற்றிலும் இதை எதிர்பார்க்கவில்லை. நான் இங்கு வருவதில் அவர்களுக்கு ஏதேனும் சிக்கல் இருந்தால் அவர்கள் இந்த விஷயத்தை விவாதித்திருக்க வேண்டும். அவர்கள் என்னைத் தாக்கியிருக்கக்கூடாது. அவர்கள் என்னை எங்கும் செல்வதைத் தடுக்க முடியாது. நான் இதை எதிர்பார்க்கவில்லை. மேற்கு வங்காளத்தின் கல்வி முறையின் நிலை இதுதான் ” என்று கூறினார்.

சம்பவத்தின்போது, மத்திய அமைச்சரைப் பாதுகாக்கும் சிஆர்பிஎஃப் பணியாளர்களில் ஒருவரின் பத்திரிகை ஆடிட்டோரியத்திற்கு வெளியே விழுந்தது. இந்த பத்திரிகை பின்னர் சிஆர்பிஎஃப் பணியாளர்களால் எடுக்கப்பட்டது.

பின்னர் மாலை, மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தன்கர் மத்திய அமைச்சரை மீட்பதற்காக பல்கலைக்கழக வளாகத்துக்கு சென்றார். இந்த விவகாரம் குறித்து ஆளுநர் கவலை தெரிவித்ததோடு இதில் உடனடியாக தலையிடுமாறு மாநில தலைமை செயலாளரிடம் கேட்டுக் கொண்டார். இந்த விஷயத்தை ஆராயுமாறு முதலமைச்சர் மம்தா பானர்ஜியையும் தன்கர் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தன்கர் பல்கலைக்கழக துணைவேந்தருடன் பேசினார். இந்த விவகாரத்தில் அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்காதது முறையற்றது என்று சுட்டிக்காட்டினார். இது ஆரோக்கியமற்ற முடிவுகளுக்கு வழிவகுக்கும்.

துணைவேந்தருடன் பேசிய பிறகே தலைமைச் செயலாளர் பேசினார். இந்த சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்ட ஆளுநர் “இது ஒரு மத்திய அமைச்சரை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருப்பது சம்பந்தப்பட்டதாகும். இது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மற்றும் சட்டத்தை அமல்படுத்தும் நிறுவனங்களின் நடத்தை பற்றிய மிக தீவிரமான விஷயமாகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close