டெல்லி ரகசியம்: ‘ரைஸ் ஆஃப் தி பிஜேபி’ மத்திய அமைச்சர் எழுதிய புத்தகம்

கட்சியின் பொதுச் செயலாளராகப் பல முக்கிய மாநிலங்களுக்குப் பொறுப்பாக இருந்த மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், பொருளாதார நிபுணர் ஐலா பட்நாயக்குடன் இணைந்து புத்தகத்தை எழுதியுள்ளார்.

பாஜகவின் தோற்றம், வளர்ச்சி குறித்து பல புத்தகங்கள் இருந்தாலும், இந்த புத்தகத்தின் சக ஆசிரியர் பாஜக கட்சியைச் சேர்ந்தவர் ஆவர். கட்சியின் பொதுச் செயலாளராகப் பல முக்கிய மாநிலங்களுக்குப் பொறுப்பாக இருந்த மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், பொருளாதார நிபுணர் ஐலா பட்நாயக்குடன் இணைந்து ‘தி ரைஸ் ஆஃப் தி பிஜேபி: தி மேக்கிங் ஆஃப் தி வேர்ல்டுஸ் லார்ஜஸ்ட் போலிடிக்கல் பார்ட்டி ( ‘The Rise of the BJP: The Making of the World’s Largest Political Party) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

இந்தப் புத்தகத்தில் பாஜக தோன்றிய விதம், கலாச்சார தேசியவாதத்தின் கருத்தை எப்படி பின்பற்றியது உள்ளிட்ட கதைகள் இடம்பெற்றுள்ளன. பாஜகவின் வெற்றிக் கதையை வரையறுக்கும் விஷயங்களை முன்னிலைப்படுத்தி புத்தகத்தை எழுதியுள்ளார். பாஜகவின் வளர்ச்சி குறித்த யாதவின் பார்வை இளம் அரசியல்வாதிகள் உட்பட பலரும் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும் என கட்சியை சேர்ந்த தலைவர்கள் கூறுகின்றனர்.

வங்கிக் கடன்

மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது, பாஜக எம்பி ஜிவிஎல் நரசிம்மராவ், அரசியல்வாதிகளுக்கு வங்கிகள் அடிக்கடி கடன் வழங்க மறுப்பதாகவும், இது அவமானகரமானது என்றும் கூறினார். இதை ஒப்புக்கொண்ட நிதியமைச்சர் பகவத் கிஷன்ராவ் காரட், வங்கிகள் “டிராக் ரெக்கார்டை” பார்க்கும்போது காவல்துறையினரும் கடன் பெறுவது கடினம் என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கராட் சொல்ல வருவதை புரிந்துகொள்ள முடிகிறது. அதே சமயம், இந்த இரண்டு வகை அரசு ஊழியர்களும் கடன் பெறுவதைத் தடுக்கும் எந்தக் கொள்கையும் இல்லை என்று தெளிவுபடுத்தினார்.

வாரந்தோறும்

மத்திய சுகாதார அமைச்சகம் வாராந்திர ஊடக சந்திப்புகள் மூலம் ஒமிக்ரான் மாறுபாடு மற்றும் வளர்ந்து வரும் சூழ்நிலை குறித்த அறிவியல் அடிப்படையிலான தகவல்களை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததன் காரணமாக வாரந்தோறும் நடத்தப்படும் ஊடக சந்திப்பைச் சுகாதாரத் துறையினர் அக்டோபர் 7 ஆம் தேதி நடத்தவில்லை. ஒமிக்ரான் அச்சுறுத்தலாம், வியாழக்கிழமை முதல் மீண்டும் ஊடக சந்திப்பை நடத்த முடிவு செய்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Union minister bhupender yadav co authored a book the rise of the bjp

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com