/indian-express-tamil/media/media_files/LOZsL5udEkIRbj134ily.jpg)
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, கிழக்கு மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசும்போது மயங்கி விழுந்தார். (PTI Photo)
மகாராஷ்டிராவில் யவத்மாலில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அமைச்சர் சில நிமிடங்களில் உடல்நிலை சரியாகி தனது உரையை நிறைவு செய்தார்.
ஆங்கிலத்தில் படிக்க: Union minister Nitin Gadkari faints while speaking at campaign rally in Maharashtra’s Yavatmal
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, கிழக்கு மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசும்போது புதன்கிழமை மயங்கி விழுந்தார்.
மகாராஷ்டிர மாநிலம், யவத்மால் மாவட்டத்தில் உள்ள புசாத் என்ற இடத்தில் மத்திய அமைச்சரும், பா.ஜ.க வேட்பாளருமான நிதின் கட்கரி, மக்களவைத் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசியபோது மயங்கி விழுந்தார்.
யவத்மால்-வாஷிம் மக்களவைத் தொகுதியின் கீழ் வரும் புசாத் என்ற இடத்தில் பா.ஜ.க தலைவர் நிதின் கட்கரி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அவர் மயக்கம் அடைந்ததால், அவருடன் வந்த பாதுகாப்புப் பணியாளர்கள் அவரை மேடைக்கு வெளியே தூக்கிச் சென்றனர். எனினும் அமைச்சர் சில நிமிடங்களில் உடல்நிலை சரியாகி தனது உரையை நிறைவு செய்தார்.
“மகாராஷ்டிராவின் புசாத் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தின்போது வெயிலின் வெப்பம் காரணமாக சிரமமாக உணர்ந்தேன். ஆனால், இப்போது நான் முற்றிலும் நலமாக உள்ளேன், அடுத்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வருட் நகருக்குச் செல்கிறேன்” என்று 66 வயதான மத்திய அமைச்சரும் பா.ஜ.க தலைவருமான நிதின் கட்கரி தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.