scorecardresearch

டெல்லி ரகசியம்: மத்திய அமைச்சர் அறையில் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்

தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் தொழிலாளர் அமைச்சகத்தின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம் ஆகிய இரு அலுவலகங்களிலும் உள்ள அவரது அறைகளில் வைத்துள்ளார்

தேர்தல்களின் போது அறிவிக்கப்பட்ட முக்கியமான திட்டங்கள், வாக்குறுதிகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் செயல்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளும்போது அதிகாரிகளுக்கு அரசியல் தலைமையிடமிருந்து அதிக அழுத்தம் கொடுக்கப்படும்.

ஆனால், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது அமைச்சகத்தில் உள்ள அதிகாரிகளை திறம்பட செயல்பட வைக்க புதுமையான வழியை பின்பற்றுகிறார். இந்த அரசாங்கள் சொன்ன இலக்குகளை எத்தனை நாள்களுக்கு முடிக்க வேண்டும் என்பதை அதிகாரிகளுக்கு நினைவூட்ட, டிஜிட்டல் டைமரை பொருத்தியுள்ளார்.

இந்த டிஜிட்டல் கவுன்டவுன் டைமரை, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Meity) மற்றும் தொழிலாளர் அமைச்சகத்தின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம் ஆகிய இரு அலுவலகங்களிலும் உள்ள அவரது அறைகளில் வைத்துள்ளார். அவை, இந்த அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடையும் நாளை குறிக்கிறது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசிய சந்திரசேகர், தனது இலக்கை அடையவும், அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நிறைவேற்றவும் குறைந்த நாட்களே உள்ளது. எனவே, அதற்கேற்ப, திறம்பட செயல்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஞாயிற்றுக்கிழமை, அவரது டிஜிட்டர் டைமரில் 717 நாட்கள் மீதமுள்ளது என காட்டியது.

அறிக்கையில் முக்கிய லைன்

குவாட் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் கூட்டு அறிக்கையில் குறிப்பிட்ட ஒரு லைனில், நம்முடைய அந்தந்த மூலோபாய சிந்தனையாளர்களுக்கு இடையே ஒரு பாதை 1.5 உரையாடலை ஆராய்ந்து வருகிறோம் என்று இந்தியாவின் மூலோபாயப் படைகள்,சிந்தனைக் குழுக்கள் மூலம் அட்ரினலின் பாடத்தை சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு, இது வெளியுறவுக் கொள்கை ஸ்தாபனத்தில் முதலிடத்தை அணுகுவது, நிதியுதவிக்கான கதவுகளைத் திறப்பது, குவாட் உறுப்பினர்களின் தொலைதூரத் தலைநகரங்களுக்குச் செல்வது போன்றவற்றை குறிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைப்பட ஆதாரம்

பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (PMGSY) திட்டத்தின் அடிக்கல் நாட்டுதல் மற்றும் திறப்பு விழா நிகழ்ச்சிகளுக்கு எம்.பி.க்களை அழைக்காதது மகிழ்ச்சியற்றது என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது. இச்சம்பவம் திரும்ப நடக்கமால் இருக்க புதிய யோசனை ஒன்றை கூறியுள்ளது.

அதாவது, தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாக்களில் திட்டத்தின் விளக்க போர்டு அருகே எம்.பிக்கள் இருக்கும் வகையிலான புகைப்படங்களை, அந்தந்த திட்டத்தின் போர்ட்டலில் பதிவேற்றுமாறு அமைச்சகம் மாநிலங்களை கேட்டுக் கொண்டுள்ளது.இது தொடர்பாக எம்.பி.க்களிடம் இருந்து இதுபோன்ற புகார்கள் வராமல் இருப்பதை உறுதி செய்யுமாறு மாநிலங்களை கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Union minister rajeev chandrasekar room digital countdown display