Advertisment

இந்திரா காந்திக்கு ‘பாரத மாதா’ என புகழாரம்- மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை ‘பாரத மாதா’ (இந்தியாவின் தாய்) என்றும், மறைந்த காங்கிரஸ் முதல்வர் கே. கருணாகரனை ‘தைரியமான நிர்வாகி’ என்றும் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி கூறியிருப்பது பா.ஜ.க-வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Suresh Gopi

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை ‘பாரத மாதா’ (இந்தியாவின் தாய்) என்றும், மறைந்த காங்கிரஸ் முதல்வர் கே. கருணாகரனை  ‘தைரியமான நிர்வாகி’ என்றும் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி வர்ணித்துள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை ‘பாரத மாதா’ (இந்தியாவின் தாய்) என்றும், மறைந்த காங்கிரஸ் முதல்வர் கே. கருணாகரனை  ‘தைரியமான நிர்வாகி’ என்றும் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி கூறியிருப்பது பா.ஜ.க-வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Union Minister Suresh Gopi calls Indira Gandhi ‘mother of India’

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை ‘பாரத மாதா’ (இந்தியாவின் தாய்) என்றும், மறைந்த காங்கிரஸ் முதல்வர் கே. கருணாகரனை  ‘தைரியமான நிர்வாகி’ என்றும் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி புதன்கிழமை வர்ணித்துள்ளார்.

மேலும், பா.ஜ.க தலைவர் கருணாகரன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஈ.கே. நாயனார் ஆகியோரை தனது அரசியல் குருக்கள் என்றும் கூறியுள்ளார்.

புங்குன்னத்தில் அமைந்துள்ள முரளி மந்திரம் கருணாகரனின் நினைவிடத்துக்குச் சென்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய சுரேஷ் கோபி இவ்வாறு கூறினார்.

இதில் சுவாரஸ்யமாக, ஏப்ரல் 26 தேர்தலில் மும்முனைப் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்த கருணாகரனின் மகனும் காங்கிரஸ் தலைவருமான கே. முரளிதரனின் நம்பிக்கையைத் தகர்த்து சுரேஷ் கோபி திருச்சூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

கருணாகரன் நினைவிடத்திற்கு வருகைக்கு அரசியல் பொருள் கூற வேண்டாம் என்று ஊடகவியலாளர்களை வலியுறுத்திய பா.ஜ.க தலைவர், தனது குருவுக்கு மரியாதை செலுத்துவதற்காக இங்கு வந்ததாக கூறினார்.

ஈ.கே. நாயனார் மற்றும் அவரது மனைவி சாரதா டீச்சரைப் போலவே, கருணாகரன் மற்றும் அவரது மனைவி கல்யாணிக்குட்டி அம்மா அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என்று சுரேஷ் கோபி கூறினார்.

கண்ணூரில் உள்ள நாயனாரின் வீட்டிற்குச் சென்ற அவர், ஜூன் 12-ம் தேதி தனது குடும்ப உறுப்பினர்களுடன் தனது உறவைப் புதுப்பித்துக் கொண்டார்.

இந்திரா காந்தியை ‘பாரத மாதா’ எனக் கருதியதால், கருணாகரன் தனக்கு மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தந்தை என்று சுரேஷ் கோபி கூறினார்.

கருணாகரனை கேரளாவில் காங்கிரஸின் தந்தை என்று வர்ணிப்பது தென் மாநிலத்தில் பழம்பெரும் காங்கிரஸ் கட்சியின் நிறுவனர்கள் அல்லது இணை நிறுவனர்களுக்கு அவமரியாதை அல்ல என்று அவர் விளக்கினார்.

நடிகர், அரசியல்வாதி சுரேஷ் கோபி, காங்கிரஸ் மூத்த தலைவரின் நிர்வாகத் திறன்களைப் பாராட்டினார், மேலும், அவரை அவரது தலைமுறையின் தைரியமான நிர்வாகி என்று அழைத்தார்.

மேலும், 2019-ம் ஆண்டு முரளி மந்திரத்துக்குச் செல்ல விருப்பம் தெரிவித்திருந்த போதிலும், சமீபத்தில் பா.ஜ.க0வுக்குத் தாவிய மூத்த தலைவரின் மகள் பத்மஜா வேணுகோபால், அரசியல் காரணங்களால் தன்னை ஊக்கப்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.

பின்னர், சுரேஷ் கோபி நகரில் உள்ள பிரசித்தி பெற்ற லூர்து மாதா தேவாலயத்திற்கும் சென்று பிரார்த்தனை செய்தார்.

அவரது மகளின் திருமணத்தின் போது புனித மரியாளின் சிலைக்கு அவரும் அவரது குடும்பத்தினரும் தங்கக் கிரீடம் அணிவித்ததை அவரது அரசியல் எதிரிகள் அவரை குறிவைத்து, அது தங்கத்தால் செய்தது அல்ல, செம்பில் செய்தது என்று குற்றம் சாட்டினர்.

திருச்சூர் மக்களவைத் தொகுதியில் சுரேஷ் கோபி வெற்றி பெற்று, கேரளாவில் பா.ஜ.க-வின் கணக்கைத் தொடங்கினார்.

லோக்சபா தேர்தலில் திருச்சூரில் மும்முனைப் போட்டி நிலவியது காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் சி.பி.ஐ முக்கிய வேட்பாளர்கள் கடுமையாக போட்டியிட்டனர். இதில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட சுரேஷ் கோபி வெற்றி பெற்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Suresh Gopi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment