மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதியானது. அவர் தனது ட்விட்டரில், லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தற்போது, வீட்டு தனிமையில் உள்ளேன். அண்மையில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டு, பரிசோதனை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டிருந்தார்.
முன்னதாக, மகேந்திர நாத் பாண்டே, பாரதி பவார், நித்யானந்த் ராய் மற்றும் ராஜீவ் சந்திரசேகர் ஆகிய மத்திய அமைச்சர்களும் கொரோனா தொற்று உறுதியாகி, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது பாஜக மேலிடத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும்,கொரோனா தாக்கம் விரைவில் குறைந்து, தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் நேரத்தில், பிரசாரத்தில் களமிறங்க தலைவர்கள் தயாராக இருப்பார்கள் என பாஜக வியூகவாதிகள் நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்தனர். இது அனைத்து அமைச்சர்களுக்கும் கடினமான சூழ்நிலை என்றாலும், கட்சிக்கு இருக்கும் ஒரே நல்ல செய்தி கொரோனா பாதிப்பு லேசாக இருப்பதால், வீட்டு தனிமையில் சமாளித்துவிடுவார்கள் என்பது தான்.
மீண்டும் தேர்தல் பணியில் ராகுல்
கிட்டத்தட்ட இரண்டு வார வெளிநாட்டு பயணத்திற்குப் பிறகு, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தியா திரும்பியுள்ளார். அவர் முதல் பணியாக , கோவாவிற்கான கட்சியின் மூத்த பார்வையாளர் பா சிதம்பரத்தையும், கே சி வேணுகோபால் சந்தித்து, தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்வது குறித்து விவாதித்தார். தேர்தல் கூட்டணி குறித்து டிஎம்சி, காங்கிரஸூடம் பேச்சுவார்த்தை நடத்த முயல்வதால், இந்த சந்திப்பு முக்கியத்தவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கோவா மூத்த தலைவர்கள் சிலருக்கு டிஎம்சி தேர்தல் வியூகவாதி பிரசாந்த் கிஷோரிடமிருந்து அழைப்பு வந்ததாக மத்திய தலைவர் ஒருவர் கூறினார். ஆனால், மத்திய காங்கிரஸ் தலைவர்கள், திரிணாமுல் கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கான சாத்தியக்கூறுகளை கடுமையாக நிராகரித்தனர்.அதன் தலைவர்கள் பலரை வேட்டையாடிய கட்சியுடன் கைகோர்ப்பது தற்கொலைக்கு வழிவகுக்கும் என்று வாதிட்டனர்.
காலிஃபிளவருக்கு வாக்களியுங்கள்
கோவா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பஞ்சாப் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சிரிஞ்ச்,பேனா நிப், தொப்பி,ஈட்டி எறியப்படுவது ஆகியவை பதிவுசெய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத எட்டு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் (EC) சார்பில் ஒதுக்கப்பட்ட சில சுவாரஸ்யமான பொதுவான சின்னங்கள் ஆகும்.
பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கின் புதிய கட்சியான பஞ்சாப் லோக் காங்கிரசுக்கு ‘ஹாக்கி மற்றும் பந்து’ சின்னமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒதுக்கப்பட்ட மற்ற சுவாரஸ்யமான சின்னங்களில் ஒரு டிவி செட், தொலைபேசி, கப்பல், ரோட்-ரோலர், நீரூற்று - மற்றும் ஒரு காலிஃபிளவர் ஆகியவையும் அடங்கும்.
தேர்தல் ஆணையம் சார்பில் மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் எழுதிய கடிதத்தில் இந்த பொதுவான சின்னங்களை ஒதுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.