கதுவா மற்றும் உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து பிரதமர் மோடி மவுனம் கலைத்து ஆவேசமாக பேசியுள்ளார்.
நேற்றைய தினம், இரண்டு பெண் குழந்தைகளுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமை நாட்டையே உலுக்கியது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி கோயில் கருவறையில் வைத்து 8 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது, உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் பங்கர்மாவ் தொகுதி பா.ஜனதா எம்எல்ஏ குல்தீப்சிங் மற்றும் அவரது இரண்டு சகோதரர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட 17 வயது இளம் பெண் புகார் கொடுத்ததற்காக அவரது தந்தை அடித்துக் கொல்லப்பட்டது இந்த இரண்டு சம்பவங்கள் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் அநீதிகளை கோடுயிட்டு காட்டுகிறது.
நாடு முழுவதும் இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று போர்க்குரல்கள் ஒலித்தன. மத்திய - மாநில அரசுகள் உரிய முறையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடு முழுவதும் போராட்டங்களும் வெடித்தது. இந்நிலையில், தான் நாட்டின் பிரதமர் மோடி இச்சம்பவம் குறித்து எதுவும் பேசாமால் மவுனம் சாதித்து வந்தார்.
குறிப்பாக இந்த இரு சம்பவத்திலும், பிஜேபினர் சம்மந்தப்பட்டுள்ளதால் மோடியின் மவுனமே அத ற்கு சாட்சி என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்தனர். இதனையடுத்து, நேற்று இரவு மோடி இதுக் குறித்து பேசினார்.
டெல்லியில் நேற்று (13.4.18) மாலை நடைபெற்ற அம்பேத்கர் நினைவு இல்லம் திறப்புவிழாவில் பங்கேற்று உரையாற்றியபோது உணர்ச்சிவசப்பட்ட மோடி ஆவேசத்துடன் பேசினார். மோடி பேசியதாவது, “ கடந்த இரண்டு நாட்களாக பேசப்படும் சம்பவங்கள், நாகரீக சமுதாயத்தின் அங்கமாக இருக்க முடியாது. இச்சம்பவங்களுக்கு நம் அனைவருக்கும் வெட்கப்படுகிறோம்.
பலாத்கார குற்றங்களில் ஈடுபட்டவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என நான் நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். இந்த சம்பவத்தில் முழு நீதி கிடைக்கும். நமது மகள்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும். பலாத்காரம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை ஆகியவை நம் சமுதாயத்தில் இருந்து விலக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். குழந்தைகளுக்கு ஒழுக்கத்தையும், சமூக மதிப்புகளையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.
மகள் தாமதமாக வீட்டுக்கு வந்தால், எங்ககே சென்றிருந்தாய் என கேட்கும் நாம், அதே கேள்வியை, இரவு நேரத்தில் தாமதமாக வரும் மகனிடம் நாம் கேட்க வேண்டும். குடும்ப அமைப்பையும், சமூக மதிப்புகளையும், சட்டம் ஒழுங்கையும் நாம் வலுப்படுத்த வேண்டும்’’ என்று தெரிவித்தார்.மோடியின் இந்த பேச்சு பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.