‘உன்னாவ் பெண்ணின் மரணம் மிகுந்த வேதனை அளிக்கிறது; விரைவில் நீதி’ – முதல்வர் ஆதித்யநாத்

உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் 23 வயது பெண் ஒருவர், கடந்த மார்ச் மாதம் பாலியல் புகார் ஒன்று அளித்தார். அதில், தனது கிராமத்தை சேர்ந்த 2 ஆண்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதனை வீடியோவாக எடுத்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த இரண்டு ஆண்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட இருவரில் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.  எனினும், சில நாட்களில் […]

Unnao rape victim’s death ‘extremely sad’, fast-track court to try accused Yogi Adityanath - 'உன்னாவ் பெண்ணின் மரணம் மிகுந்த வேதனை - முதல்வர் ஆதித்யநாத்
Unnao rape victim’s death ‘extremely sad’, fast-track court to try accused Yogi Adityanath – 'உன்னாவ் பெண்ணின் மரணம் மிகுந்த வேதனை – முதல்வர் ஆதித்யநாத்

உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் 23 வயது பெண் ஒருவர், கடந்த மார்ச் மாதம் பாலியல் புகார் ஒன்று அளித்தார். அதில், தனது கிராமத்தை சேர்ந்த 2 ஆண்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதனை வீடியோவாக எடுத்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த இரண்டு ஆண்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட இருவரில் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.


எனினும், சில நாட்களில் அந்த நபர் ஜாமீன் வாங்கி வெளியே வந்தார். தலைமறைவாக இருந்த மற்றொரு குற்றவாளிக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் வழங்கி போலீசார் தேடி வந்தனர்.

இந்த வழக்கு விசாரணை தொடர்பாக அந்த பெண் நீதிமன்றம் செல்லும் வழியில் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று அந்த பெண்ணை தீ வைத்து எரித்துக் கொலை செய்ய முயற்சி செய்தது. இதில், அந்த பெண் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமைனக்கு செல்லும் வழியில் தன் மீது தீ வைத்தவர்கள் குறித்து அந்த பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 5 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.

டெல்லி மருத்துவனமையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண்ணுக்கு நேற்று இரவு 11.10 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இரவு 11.40 மணிக்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என உத்தபிரதேசம் முழுவதும் கடும் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், “தீ வைத்து எரித்து கொல்லப்பட்ட உன்னாவ் பெண்ணின் வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். உன்னாவ் பெண்ணின் மரண செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்” என்றார்.

இது தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் தந்தை செய்தியாளர்களிடம் கூறும்போது, “நான் அரசு மற்றும் அதிகாரிகளிடம் எதிர்பார்ப்பது ஒன்றை மட்டும் தான், எனது மகள் உயிரிழக்க காரணமானவர்கள் ஐதரபாத்தில் நடந்த சம்பவம் போல் சுட்டுகொல்லப்பட வேண்டும். எனக்கு பணமோ வேறு எதுவும் தேவையில்லை” என்றார்.

இந்த சம்பவம் குறித்து பதிலளித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, அதே மாவட்டத்தில் முன்பு நடந்த இதேபோன்ற சம்பவத்தை மனதில் வைத்து பாதிக்கப்பட்டவருக்கு ஏன் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று உத்தரபிரதேச அரசிடம் கேள்வி எழுப்பினார்.

பிரியங்கா காந்தி வத்ராவும் இன்று உன்னாவோவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக அவர் பதிவிட்ட ட்வீட்டில், “உன்னாவ் கும்பல் வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு, அதே பகுதியில் இதற்கு முன் நிகழ்ந்த சம்பவத்தை மனதில் வைத்து ஏன் பாதுகாப்பு வழங்கப்படவில்லை? எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய மறுத்த காவல்துறை அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? தினசரி அடிப்படையில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அரசாங்கம் என்ன நடவடிக்கைகள் எடுத்து வருகிறது?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அகிலேஷ் யாதவ் உ.பி. சட்டசபைக்கு வெளியே தர்ணாவை நடத்தினார்.

கற்பழிப்பு வழக்கை எதிர்த்து உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் லக்னோ மாநில சட்டமன்றத்திற்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டார்.

“அப்பெண்ணின் கடைசி வார்த்தைகள், நான் உயிருடன் இருக்க விரும்புகிறேன் என்பதே. எல்லா முயற்சிகளும் இருந்தபோதிலும், டாக்டர்களால் அவளைக் காப்பாற்ற முடியவில்லை. இன்று நமக்கு ஒரு கருப்பு நாள். பாஜக அரசின் கீழ் இது முதல் வழக்கு அல்ல. இந்த அரசாங்கத்தால் ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இந்த அரசாங்கத்தின் கீழ் எந்த மகளும் பாதுகாப்பாக இல்லை” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

உன்னாவ் வழக்கு குற்றம் சாட்டப்பட்டவர்களை ஒரு மாதத்திற்குள் தூக்கிலிட வேண்டும்: சுவாதி மாலிவால்

உன்னாவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஒரு மாதத்திற்குள் தூக்கிலிட வேண்டும் என்று டெல்லி பெண்கள் ஆணையத்தின் (டி.சி.டபிள்யூ) தலைவர் சுவாதி மாலிவால் இன்று கோரினார். “இந்த வழக்கை விரைவாகக் கண்டுபிடித்து குற்றவாளிகள் ஒரு மாதத்திற்குள் தூக்கிலிடப்படுவதை உறுதி செய்யுமாறு நான் உ.பி. அரசாங்கத்திடமும் மையத்திடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என்று மாலிவால் கூறினார். டிசம்பர் 3 ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கிய மாலிவால், பாலியல் பலாத்காரர்களை ஆறு மாதங்களுக்குள் தூக்கிலிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். அவர்களின் நம்பிக்கை.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்க தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மாவும் டெல்லி மருத்துவமனைக்குச் சென்றார்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Unnao rape victims death extremely sad fast track court to try accused yogi adityanath

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com