Advertisment

'அநாவசிய கருத்துக்கள் வேண்டாம், கடின உழைப்பை மறைக்கிறது'; பிரதமர் நரேந்திர மோடி

தலைப்புச் செய்திகளைப் பிடிக்கும் வகையில் அறிக்கை வெளியிடுதல் உள்ளிட்ட செயல்களை தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

author-image
WebDesk
Jan 19, 2023 00:36 IST
New Update
Unnecessary comments including those on films overshadow our hard work PM Modi

டெல்லியில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி

திரைப்படங்கள் மற்றும் பிரமுகர்களுக்கு எதிராக தேவையில்லாத கருத்துகளை வெளியிட்டு தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்க வேண்டாம் என்று பாஜக தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (ஜன.17) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில், “நாங்கள் செய்யும் கடின உழைப்பை மறைக்கும் வகையில் தேவையற்ற கருத்துக்களை யாரும் கூற வேண்டாம்” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Advertisment

இது குறித்து செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக அலுவலக பிரமுகர் ஒருவர் கூறுகையில், “நேற்று தனது உரையில், தலைப்புச் செய்திகளைப் பிடிக்கும் வகையில் அறிக்கை வெளியிடுபவர்களை பிரதமர் எச்சரித்தார். அவ்வாறு செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறினார்” என்றார்.

ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனின் வரவிருக்கும் படமான பதான் படத்திற்கு எதிராக மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோதம் மிஸ்ரா மற்றும் போபால் எம்பி பிரக்யா தாக்கூர் உட்பட சில மூத்த பாஜக தலைவர்கள் சில கருத்துகளை தெரிவித்திருந்தனர்.

மேலும் அந்தப் படத்தை புறக்கணிப்பு அழைப்பு விடுத்தனர். இதற்கு மத்தியில் பிரதமரின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.

முன்னதாக, பெஷாரம் ரங் என்ற திரைப்படப் பாடலில் தீபிகா படுகோன் உடையின் நிறத்தை "திருத்தம்" செய்ய வேண்டும் என்று மிஸ்ரா எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

சண்டிகரை தளமாகக் கொண்ட ஒரு வலதுசாரி அமைப்பும் உள்ளூர் நிர்வாகத்தை பதானின் திரையிடலைத் தடை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது. மேலும், அதன் தயாரிப்பாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையை நாடியுள்ளது.

இதற்கிடையில், மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் (CBFC) தலைவர் பிரசூன் ஜோஷி, சமீபத்தில் ஒரு அறிக்கையில், பதான் தயாரிப்பாளர்கள் "பாடல்கள் உட்பட… அறிவுறுத்தப்பட்ட மாற்றங்களைச் செயல்படுத்தவும், திருத்தப்பட்ட பதிப்பைச் சமர்ப்பிக்கவும்" கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு, ஒரு இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் அமீர்கான் நடித்த லால் சிங் சத்தாவுக்கு எதிராக, உத்தரப் பிரதேசத்தில் போராட்டம் நடத்தினர்.

அப்போது. நடிகர் அமீர் கான், இந்து தெய்வங்களை கேலி செய்வதாகக் குற்றஞ்சாட்டினர் என்பது நினைவு கூரத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

#Bjp #Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment