/indian-express-tamil/media/media_files/d7MSfmJoOKYrQURB62AL.jpg)
ஜார்க்கண்ட் தன்பாத்தில் இருந்து இரவு 11.55 மணிக்குப் புறப்படும்.
special-trains | டிசம்பர் 18 முதல் பயணிகளின் கூடுதல் நெரிசலைக் குறைக்க எர்ணாகுளம்-தன்பாத் (ஜார்க்கண்ட்) பிரிவில் முன்பதிவு செய்யப்படாத வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
ரயில் எண் 06077 எர்ணாகுளத்தில் இருந்து டிசம்பர் 18 மற்றும் 25 (திங்கட்கிழமை) ஆகிய தேதிகளில் காலை 7.15 மணிக்கு புறப்பட்டு மூன்றாம் நாள் (புதன்கிழமை) காலை 7.30 மணிக்கு தன்பாத்தை சென்றடையும்.
திரும்பும் திசையில், ரயில் எண். 06078 தன்பாத்தில் இருந்து இரவு 11.55 மணிக்குப் புறப்படும். டிசம்பர் 21 மற்றும் 28 (வியாழன்) தேதிகளில் நான்காம் நாள் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2.30 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும்.
இந்த ரயிலில் 22 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் இரண்டு லக்கேஜ் கம் பிரேக் வேன்களாக இருக்கும்.
இந்த ரயில் அலுவா, திரிச்சூர், பாலக்கா, ஈரோடு, சேலம், ஜோலார்பேட், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, குடிவாடா, பீமாவரம் டவுண், தணுகு, ராஜமுந்திரி, சமல்கோட், துனி உள்ளிட்ட பகுதிகளில் நின்று செல்லும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.