UP assembly Elections 2022 :
உ.பி. ஃபடேஹாபாத் தொகுதியின் சமாஜ்வாடி வேட்பாளர் ரூப்பாலி தீக்ஷித் தன்னுடைய பட்டமேற்படிப்பு மற்றும் மேலாண்மை படிப்புகளை இங்கிலாந்தில் முடித்தார். பிறகு துபாயில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய அவர் பின்னர் ஆக்ராவிற்கு திரும்பி வந்தார். அவருடைய தந்தை அசோக் தீக்ஷித் உட்பட ஐந்து குடும்ப நபர்கள் கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூப்பாலியின் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் ஜெயிலில் இருக்க அவர்களை வெளியேற்ற சட்ட ரீதியான போராட்டத்தில் ஈடுபட்டார். சட்ட சிக்கல்கள் அதிகமாக இருப்பதாலும் இது குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்ததாலும் ஆக்ரா பல்கலைக்கழகத்தில் சட்ட படிப்பு ஒன்றில் சேர்ந்து அதிலும் டிகிரி பெற்றார். அதே நேரத்தில் உள்ளூர் அரசியல் மற்றும் சமூக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.
அஷோக் தீக்ஷித், ரூபால்லியின் தந்தை, மற்றும் இதர குடும்ப நபர்கள் 2007ம் ஆண்டு ஃபிரோசாபாத்தில், பள்ளி ஆசிரியர் சுமன் யாதவை கொன்ற வழக்கில் 2015ம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றனர். 3 கொலை வழக்குகள் உட்பட 69 குற்ற வழக்குகள் அஷோக் மீது உள்ளது. ஃபிரோசாபாத்தை பூர்வீகமாக கொண்ட அவர் பிறகு தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுடன் ஆக்ராவிற்கு குடி பெயர்ந்தார். அங்கே அவர் உணாவு பதப்படுத்தப்படும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அஷோக், சுமன் யாதவ் கொலை வழக்கில் 2007ம் ஆண்டு கைது செய்யப்பட்டு தற்போது வரை ஜெயிலில் உள்ளார்.
இந்த சம்பவம் நடைபெறும் போது எனக்கு வயது 19. யாரும் என்னிடம் இது குறித்து கூறவில்லை. அப்பா தங்களோடு இல்லாமல் இருப்பதற்கு பல காரணங்களை கூறினார்கள். பிறகு நான் வெளிநாட்டிற்கு படிக்க அனுப்பப்பட்டேன் என்று கூறினார் ரூப்பாலி.
அவர் புனேவில் உள்ள சிம்பயோசிஸில் தனது பட்டப்படிப்பை முடித்த கையோடு 2009ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள கார்டிஃப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிக்க சென்றார். பிறகு லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு படித்தார். யார்க்ஷைரில் அமைந்திருக்கும் அந்த பல்கலைக்கழகத்தில் அவர் மார்க்கெட்டிங் அண்ட் அட்வெர்டைஸிங் படிப்பை படித்தார். பிறகு துபாயில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவிட்டு 2016ம் ஆண்டு இந்தியாவிற்கு திரும்பினார்.
எங்கள் குடும்பத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்று எனக்குத் தெரியும், ஆனால் யாரும் எனக்கு உண்மையான விவாரத்தைக் கூறவில்லை. காலப்போக்கில், 2007 வழக்கு பற்றி எனக்கு தெரியவந்தது. ஜூலை 2015 இல், உள்ளூர் ஃபிரோசாபாத் நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பை அறிவித்தது மற்றும் எனது தந்தை மற்றும் நான்கு மாமாக்கள் உட்பட 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது என்று ரூப்பாலி கூறினார்.
அதன் பிறகு என் தந்தையிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. உடனே வீட்டிற்கு திரும்பி வருமாறு அவர் கேட்டுக் கொண்டார். அப்போது நான் துபாயில் இருக்கும் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் சீனியர் எக்ஸ்க்யூட்டிவாக பணியாற்றிக் கொண்டிருந்தேன். உடனே என்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊர் திரும்பினேன் என்றார் அவர்.
நான் வீட்டிற்கு திரும்பி வரும் போது என்னுடைய குடும்பத்தில் இருந்த ஆண்கள் அனைவரும் ஜெயிலில் இருந்தனர். வழக்கை எதிர்த்து வாதாட ஒருவர் கூட இல்லை. சட்டம் குறித்து எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் இருந்த எனக்கும், குடும்பத்தினர் நம்பிக்கை இழந்த போது பிரச்சனைகள் ஏற்பட்டது. ஆக்ராவில் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றேன். என்னுடைய குடும்ப உறுப்பினர்களின் வழக்கை எதிர்கொள்ள இந்த படிப்பை மேற்கொண்டேன் என்றார் அவர்.
பைரேலி மத்திய சிறையில் இருக்கும் அஷோக் தவிர, அவருடைய தம்பி அஜய் தீக்ஷித் மற்றும் இதர குற்றவாளிகள் அனைவரும் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கை கையாளும் அதே சமயத்தில் ரூப்பாலி ஃபடேஹாபாத் அரசியலிலும் ஆர்வம் காட்டினார். 2017ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் ஜித்தேந்திர வர்மாவிற்காக அவர் வாக்கு சேகரித்தார். அந்த தேர்தலில் 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜித்தேந்திர வர்மா வெற்றி பெற்றார். ரூப்பாலி தனக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்ததை வர்மா ஒப்புக்கொண்டார்.
தற்போது இரண்டு வருடங்கள் கழித்து அவர் பாஜக கூட்டங்களில் கலந்து கொள்வதை நிறுத்தினார். கர்மா சங்கேதன் என்ற அமைப்பை உருவாக்கி நலிவடைந்த மக்களுக்காக அவர் பணியாற்றினர். கொரோனா காலத்தில் பலருக்கும் உணவு பொருட்களை வழங்கியது இந்த அமைப்பு.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil