அரசியல்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் கட்சிக்கான பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBCs) வாக்குகள் குறைந்து வருகிறது என்ற அச்சத்தில், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்த மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (EBCs), பாஸ்மாண்டா (பிற்படுத்தப்பட்ட) முஸ்லிம்கள் மற்றும் ஜாதவ் அல்லாத தலித்துகள் அடங்கிய ஒரு புதிய ஆதரவு தளத்தை உருவாக்குவதற்கான ஒரு உத்தியை பா.ஜ.க இப்போது வகுத்துள்ளது.
பா.ஜ.க ஏற்கனவே உ.பி மற்றும் பீகாரில் உள்ள பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களை கவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், புதிய சமூகக் கூட்டணியை உருவாக்கி அதன் தற்போதைய அடித்தளத்தில் உள்ள வாக்குகள் இழப்பை ஈடுசெய்யும் முயற்சியால், புதிய கூட்டணியின் 10 சதவீத வாக்குகள் கூட வரும் பொதுத் தேர்தலில் இந்த முக்கியமான மாநிலங்களில் "வசதியாக" இருக்கும் என்று கட்சித் தலைவர்கள் கூறுகிறார்கள். உ.பி.யில் உள்ள மொத்த முஸ்லிம் மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் பின்தங்கிய முஸ்லிம்கள் என்று பா.ஜ.க கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.
இதையும் படியுங்கள்: ஜனாதிபதி குறித்த அமைச்சர் கருத்து; பழங்குடியின வாக்குகளை குறி வைக்கும் பா.ஜ.க… திணறும் திரிணாமுல் காங்கிரஸ்
உ.பி.யில் உள்ள ராம்பூர், லக்னோ மற்றும் பரேலியில் பாஸ்மாண்டா முஸ்லிம்களுக்காக பா.ஜ.க ஏற்கனவே சபா நடத்தியது. நவம்பர் 26 அன்று அரசியலமைப்பு தினத்தன்று பாட்னாவில் ஒரு நிகழ்வை நடத்த பா.ஜ.க திட்டமிட்டுள்ளது, அதில் ஈ.பி.சி.,க்கள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பாஸ்மாண்டா முஸ்லீம்கள் பங்கேற்பாளர்கள் "தங்கள் கோரிக்கையைக் கோருவதற்கு" ஒரு குழுவாக பணியாற்றுவார்கள்.
உ.பி.யில், பா.ஜ.க துணை முதல்வர் பிரஜேஷ் பதக் மற்றும் சிறுபான்மை நலன், வக்ஃப் மற்றும் ஹஜ் அமைச்சர் டேனிஷ் ஆசாத் அன்சாரி ஆகியோரை அதன் முன்மொழியப்பட்ட புதிய சமூக ஆதரவு தளத்தை உருவாக்குவதற்காக நியமித்துள்ளது, பாஸ்மாண்டா முஸ்லிம்களை அணுகுவதற்கான பொறுப்பை ஆசாத் அன்சாரிக்கு அளித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், பீகார் சட்டப் பேரவை உறுப்பினருமான சஞ்சய் பாஸ்வான் பாட்னாவில் கட்சியின் முயற்சிக்கு தலைமை தாங்குகிறார்.
2000 களின் முற்பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி (BSP) உடன் பணிபுரிந்த போது, தலித்துகளுக்கு அப்பால் தனது ஆதரவு தளத்தை விரிவுபடுத்த மாயாவதி முயற்சித்த போது, ஒரு சமூக ஆதரவு தளத்தை உருவாக்கும் நடவடிக்கையில் பணியாற்றிய அனுபவத்தைப் பிரஜேஷ் பதக் பெற்றுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் உ.பி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, பல யாதவ் அல்லாத OBC தலைவர்கள் பா.ஜ.க.,வில் இருந்து சமாஜ்வாடி கட்சிக்கு மாறினர், இது பா.ஜ.க கட்சியின் OBC தளத்தை சிதைத்ததாக நம்பப்பட்டது. இந்த தலைவர்களில் சிலரை மீண்டும் தனது கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளும் அதே வேளையில், மற்றொரு சமூகக் கூட்டணியை அமைப்பதற்கான இணையான முயற்சியானது OBC இழப்பை ஈடுசெய்யும் என்று பா.ஜ.க நம்புகிறது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சமூகக் கூட்டணிப் பணியானது, தேர்தல் வெற்றியை உறுதி செய்வதோடு, “சி.எம். யோகி ஆதித்யநாத் சிறுபான்மை-பாஷர் (சிறுபான்மையினருக்கு எதிரானவர்) என்ற பிம்பத்தைக் குறைக்க உதவும்” என்று உ.பி கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.
ஆசாத் அன்சாரி கலந்துகொண்ட ஈரானிய தூதுக்குழுவை உ.பி முதல்வர் சமீபத்தில் சந்தித்ததும் இந்த "காட்சி மாற்றத்தின்" ஒரு பகுதியாகும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. ஈரானுடன் வலுவான பொருளாதார ஒத்துழைப்பை நாடும் அதேவேளையில், இந்தியா அறக்கட்டளை மற்றும் ஈரானின் அரசியல் மற்றும் சர்வதேச ஆய்வுகள் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்தியா வந்திருந்த ஒன்பது பேர் கொண்ட ஈரானிய பிரதிநிதிகள் குழு, பிப்ரவரி 2023 இல் நடைபெறவுள்ள உ.பி.யின் உலகளாவிய முதலீட்டு மாநாட்டிற்கு ஈரானியர்களை அழைத்த யோகி ஆதித்யநாத்துடன் விரிவான சந்திப்பை நடத்தியது.
ஐதராபாத்தில் பா.ஜ.க.,வின் தேசிய செயற்குழு மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்துக்கள் அல்லாத பிற சமூகங்களில் உள்ள "தாழ்த்தப்பட்ட மற்றும் பின் தங்கிய" பிரிவினரை அணுகுமாறு கட்சியை வலியுறுத்திய சில மாதங்களுக்குப் பிறகு பா.ஜ.க.,வின் புதிய சமூகக் கூட்டணி முயற்சி வந்துள்ளது.
“பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், ஏழைகளுக்கான எங்கள் நலத்திட்டங்களை ஒவ்வொரு பிரிவினருக்கும் சென்றடைய முயற்சித்து வருகிறோம். இதன் ஒரு பகுதியாக, பாஸ்மாண்டா முஸ்லிம்கள், வளையல் விற்பவர்கள், தரைவிரிப்பு செய்பவர்கள், காய்கறி வியாபாரிகள் போன்ற முஸ்லீம் சமூகங்களில் சுரண்டப்படுபவர்களை ஒருங்கிணைக்க நாங்கள் முயற்சி செய்கிறோம். அதனால் அவர்கள் சிறந்த கல்வி, வீடு, குடிநீர் போன்ற அரசின் திட்டங்களின் பலன்களைப் பெற முடியும்,” என்று இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பிரஜேஷ் பதக் கூறினார்.
ஓரங்கட்டப்பட்ட முஸ்லிம்களை அணிதிரட்டுவதற்காக உ.பி.யின் அனைத்து மாவட்டங்களிலும் கட்சி சபாக்களை ஏற்பாடு செய்யும் என்று பிரஜேஷ் பதக் கூறினார். "இதுபோன்ற கூட்டங்களில் 5,000 க்கும் மேற்பட்ட பாஸ்மாண்டா முஸ்லிம்கள் கலந்துகொண்டுள்ளனர்," என்று அவர் கூறினார். மாநிலத்தில் உள்ள விளிம்புநிலை முஸ்லிம்களுக்கு மட்டும், ரோஸ்கர் மேளா (வேலைவாய்ப்பு முகாம்) முறையில் நியமனக் கடிதங்களை விநியோகிக்கும் நிகழ்ச்சியையும் கட்சி ஏற்பாடு செய்யும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தக் கூட்டங்களில், பா.ஜ.க தலைவர்கள் சிறுபான்மை சமூகத்திற்கான தேர்தல் மற்றும் சமூக இடங்களில் எப்போதுமே "மேல் அடுக்கு" ஆதிக்கம் செலுத்துவது பற்றியும், பெரிய சமூகத்தை ஒதுக்கி வைத்துவிட்டு அதன் "மேல் அடுக்கு" அனுபவிக்கும் பலன்கள் பற்றியும் பேசுகிறார்கள். "நாங்கள் அவர்களுக்குச் சொல்கிறோம், அவர்களை உயர்த்தி, முக்கிய நீரோட்டத்திற்குக் கொண்டுவருவது மோடிஜியின் எண்ணம். முந்தைய ஆட்சியின் கீழ் சிறுபான்மையினருக்கான அனைத்து சலுகைகளையும் அவர்களின் பணக்காரர்களும் உயரடுக்குகளும் இதுவரை அனுபவித்து வந்த நிலையில், அவர்களைப் பற்றி பேசுவதில் பா.ஜ.க அக்கறை கொண்டுள்ளது,” என்று உ.பி பா.ஜ.க ஆர்வலர் சத்யேந்திர திரிபாதி கூறினார்.
சஞ்சய் பாஸ்மான் கூறுகையில், “பாஸ்மாண்டா முஸ்லிம்கள், ஈ.பி.சி.,க்கள் மற்றும் ஆதிவாசிகள் போன்றோர் பிரதமர் மோடி அவர்களைப் பற்றி பேசியதால் பா.ஜ.க கூட்டணியில் சேர ஆர்வமாக உள்ளனர்” என்று கூறினார்.
"கபீர் கே லாக்" என்ற அமைப்பு பீகாரில் இந்தப் பிரிவுகள் அனைத்தையும் ஒன்றாகக் கொண்டுவர முயற்சித்து வருவதைச் சுட்டிக் காட்டிய பாஸ்வான் மேலும் கூறினார்: "ஒரு பா.ஜ.க உறுப்பினராக நான் இந்தக் குழுக்களை பா.ஜ.க.,வுடன் சேர்த்து வைத்திருக்க விரும்புகிறேன். இந்த சமூகங்களுக்குள் நாம் நுழைய வேண்டும், இவை அனைத்தும் சோதனைகள். அவர்களில் பெரும் பகுதியினர் நிதிஷ் குமாரை ஆதரித்தனர் ஆனால் அவர் ஆர்.ஜே.டி.,யுடன் கைகோர்த்தபோது ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தனர். பா.ஜ.க.,வின் சில முயற்சிகள் அவர்களில் ஒரு பகுதியை எங்களுடன் கொண்டு வர முடியும்.
ஒவ்வொரு மாநில சட்டமன்றத் தொகுதியிலும் 50,000 க்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பீகாரில் இந்த சமூகங்களில் 40 சதவீதத்தை கட்சி திரட்ட முடியும் என்று பா.ஜ.க வட்டாரங்கள் கூறுகின்றன. அவர்களில் சிலர் ஏற்கனவே பா.ஜ.க.,வில் உள்ளனர். இந்தப் பிரிவினரிடம் இருந்து 10 சதவீதம் கூடுதல் வாக்குகளைப் பெற முடிந்தால், அது பீகாரில் பா.ஜ.க.,வுக்கு மாற்றமாக இருக்கும். நிலையான முயற்சியால் இது சாத்தியமற்றது அல்ல” என்று பா.ஜ.க தலைவர் ஒருவர் கூறினார்.
நிதீஷ் குமார் தலைமையிலான JD (U) NDA விலிருந்து வெளியேறியதால், BJP யின் மிகப்பெரிய அச்சம் EBC வாக்குகளில் அதன் தாக்கம் ஆகும், இது 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2020 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் கட்சிக்காக நிதிஷ் பெற்றிருந்தது. RJD உடன் நிதிஷ் கைகோர்த்து வருவதால், அவர்களின் மஹாகத்பந்தன் முஸ்லிம்-யாதவ்-குர்மி ஆதரவு தளத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதுடன், வரவிருக்கும் தேர்தல்களில் EBC வாக்குகளில் கணிசமான பகுதியைக் குவிக்க வாய்ப்புள்ளது. 2019 பொதுத் தேர்தலில், மொத்தமுள்ள 40 இடங்களில் 39 இடங்களை NDA வென்றது, JD(U) வின் 16 இடங்கள், BJP யின் 17 இடங்கள் மற்றும் LJP இன் 6 இடங்கள் உட்பட.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.