வட இந்தியாவில் சமாஜ்வாடி - ராஷ்டீரிய ஜனதா தளம் (SP-RJD) கூட்டணியின் முஸ்லிம்-யாதவ் ஆதரவு தளத்தை தனிமைப்படுத்தியது போல, தேர்தலை சந்திக்கும் கர்நாடகாவில் காங்கிரஸின் குருபா-முஸ்லிம் கூட்டணியை அஹிண்டா சமூக கூட்டணியில் இருந்து உடைக்க பா.ஜ.க முயற்சி செய்கிறது.
சமீப ஆண்டுகளில் உ.பி., பீகார் போன்ற மாநிலங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றதற்கு கூறப்படும் காரணங்களில் ஒன்று, முலாயம் சிங் தலைமையிலான எஸ்.பி போன்ற கட்சிகளுக்கு வெற்றியை அளித்து வந்த முஸ்லிம்-யாதவ் (எம்-ஒய்) கூட்டணியை தனிமைப்படுத்துவதில் கிடைத்த வெற்றியாகும். லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ஆர்.ஜே.டி - முற்பட்ட சாதியினர், யாதவ் அல்லாத ஓ.பி.சி.க்கள் மற்றும் தலித்துகள் அடங்கிய சமூக அடித்தளத்தை உருவாக்குவதன் மூலம் பா.ஜ.க வெற்றி பெற்றது.
கர்நாடகாவில், ஆளும் பா.ஜ.க தனது உபி-பீகார் ஃபார்முலாவை மீண்டும் செயல்படுத்த முயற்சி செய்கிறது. கர்நாடகாவில் காங்கிரஸின் கட்சியின் சிறுபான்மையினர் குருபா (ஓ.பி.சி)-முஸ்லிம் ஆதரவு தளத்தை ஓ.பி.சி.க்கள் மற்றும் தலித்துகள் (அஹிண்டா) சமூகக் கூட்டணியில் இருந்து உடைக்கப் பார்க்கிறது.
குருபா-முஸ்லிம் ஆதரவு தளமானது மிகப்பழமையான் பெரிய காட்சியான காங்கிரஸின் சமூகக் கணக்குகளில் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. இந்த ஆதரவு தளம் மே 10-ம் தேதி நடைபெற உள்ள கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் முக்கிய பங்கு வகிக்கக் கூடும்.
4% பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீட்டை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் முஸ்லிம் சமூகத்தை குறிவைப்பது மட்டுமல்லாமல், குருபா பிரமுகரும், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவருமான சித்தராமையாவுக்கு எதிராக பா.ஜ.க தாக்குதல் நடத்தி வருவதால் பா.ஜ.க-வின் இந்த சக்ர வியூகம் பெரிய அளவில் தெளிவாகிறது.
பா.ஜ.க-வின் முயற்சிகள் காங்கிரஸின் அஹிண்டா ஆதரவு அமைப்பைத் தகர்த்து, ஓ.பி.சி.க்கள், தலித்துகள் மற்றும் லிங்காயத்துகள் (மாநிலத்தின் மக்கள்தொகையில் 17 சதவீதம்) மற்றும் வொக்கலிகாக்கள் (மக்கள்தொகையில் 15 சதவீதம்) போன்ற ஆதிக்க சாதியினருடன் இந்துத்துவா மற்றும் வளர்ச்சிப் பாதையில், வெற்றிக்கான சூத்திரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
லிங்காயத்துகளை மையமாகக் கொண்ட சாதி உத்தியின் அடிப்படையில் - முன்னாள் முதலமைச்சரும் லிங்காயத் பிரமுகருமான பி.எஸ். எடியூரப்பாவை முகமாகக் கொண்டு அமைக்கப்பட்ட கூட்டணியின் அடிப்படையில் இதுவரை மாநிலத்தில் அறுதிப் பெரும்பான்மை பெறத் தவறியதால், பா.ஜ.க இந்தப் புதிய உத்தியை வகுத்துள்ளது. இதில், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்ட பிற சமூகங்கள் இந்துத்துவா மூலம் பா.ஜ.க பக்கம் சாய்ந்தன.
ஓ.பி.சி குரு மக்கள் (33 சதவீத ஓ.பி.சி மக்கள்தொகையில் 7% பேர் உள்ளனர்), முஸ்லிம்கள் (சுமார் 12 சதவீத மக்கள்தொகை கொண்டவர்கள்) ஆகிய சமூகத்தினர் லிங்காயத்துகளைப் போலல்லாமல், மாநிலத்தின் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் பரவியுள்ள சமூகங்கள் ஆகும். வடக்கு கர்நாடகாவில் 80 சட்டமன்றத் தொகுதிகளும், மாநிலத்தின் தெற்குப் பகுதியில் 75 தொகுதிகளில் முக்கியமாக வொக்கலிகர் சமூகத்தினர் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
வட இந்தியாவில் உள்ள முஸ்லிம் - யாதவர் வாக்கு வங்கிகளின் வரிசையில் - கர்நாடகாவில் குருபா-முஸ்லிம் வாக்கு வங்கி பெரும்பான்மையான இடங்களில் வேட்பாளர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் திறன் உள்ளது. ஏனெனில், இது மற்ற வாக்கு வங்கி கூட்டணியைவிட எண்ணிக்கையில் பெரியது. இதனால்தான், சித்தராமையாவை குறிவைத்து பா.ஜ.க இந்த இரண்டு சமூகங்களையும் ஒன்றிணைத்து, கூட்டணியால் ஆதரிக்கப்படாத அனைத்து வேட்பாளர்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது” என்று சித்தராமையாவுடன் தொடர்புடைய காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார்.
கடந்த காலங்களில் சித்தராமையாவை முஸ்லீம்களுக்கு ஆதரவானவர் என்று சித்தராமுல்லா என்று சொல்லி பா.ஜ.க பின்தொடர்ந்த நிலையில், தற்போது அவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவது காவி கட்சியின் தேர்தல் திட்டத்தை வெளிப்படுத்துகிறது.
பா.ஜ.க தனது சமீபத்திய பொதுக் கூட்டங்களில் சித்தராமையா 2013-2018-ம் ஆண்டில் காங்கிரஸ் முதல்வராக இருந்தபோது, குருபாக்களின் நலனுக்காக மட்டுமே பாடுபட்டதாகவும், எஸ்சி மக்கள் மத்தியில் உள்ள தலித் இடது துணைக்குழு போன்ற சமூகங்களுக்கு எதிராகவும் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
“சித்தராமையா முதலமைச்சராக இருந்த காலத்தில் ஒரு சமூகம் மட்டுமே முன்னேறியது. அது என்ன மாதிரியான கொள்கை? எஸ்சி, எஸ்டி மக்களை ஆதரிப்பதாகக் கூறினாலும் அவர்கள் உள் இட ஒதுக்கீடு வழங்க உறுதியளிக்கவில்லை. காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது. அவர்கள் பேசுவதற்கும் நடந்துகொள்வதற்கும் வித்தியாசம் உள்ளது” என்று முதல்வர் பசவராஜ் பொம்மை ஏப்ரல் 6-ம் தேதி தலித்துகளுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதற்காக பா.ஜ.க-வால் பாராட்டப்பட்ட நிகழ்வில் குற்றம் சாட்டினார்.
“கே.எச்.முனியப்பா, ஜி.பரமேஸ்வரா போன்ற தலித் தலைவர்களின் அழிவுக்கு காங்கிரஸ் காரணமாகிவிட்டது. அகண்ட ஸ்ரீனிவாஸ் மூர்த்தி தாக்கப்பட்ட பிறகு அமைதியாக இருந்த அவர்கள் மல்லிகார்ஜுன கார்கேவை முதல்வராக அனுமதிக்கவில்லை. காங்கிரஸ் கட்சி இடஒதுக்கீட்டை நீக்கிவிடும். ஆனால், பாஜக அதை முன்னெடுத்துச் செல்லும் என்று உங்கள் சமூகத்தினர் அனைவருக்கும் சொல்லுங்கள்,” என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடந்த வாரம் ஒரு கூட்டத்தில் கூறினார்.
காங்கிரஸ் உள்ளே இருப்பவர்களின் கருத்துப்படி, “பல தொகுதிகளில் வேட்பாளர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் ஆற்றல் சித்தராமையாவிடம் உள்ளது.” 2013-ம் ஆண்டு எஸ்சி வலதுசாரி தலைவர் பரமேஸ்வரா, மாநில காங்கிரஸ் தலைவராகவும், முதல்வர் போட்டியில் முன்னணியில் இருந்தபோதும் அவர் தோல்வியடைந்ததற்கு, அப்போது முதல்வராக இருந்த சித்தராமையா காரணமாக இருந்தார். பரமேஸ்வரா தோற்கடிக்கப்பட்ட கொரடகெரே தொகுதியில் கணிசமான குருபா வாக்குகள் உள்ளன.” என்று கூறினார்.
2019 லோக்சபா தேர்தலில் கோலார் தொகுதியில் முனியப்பாவின் தோல்விக்கு சித்தராமையாவின் ஆதரவு இல்லாததும் அடிக்கடி தொடர்புபடுத்தப்படுகிறது.
தலித்துகள், ஓபிசிக்கள் மற்றும் எஸ்டிகள் கடந்த காலங்களில் காங்கிரஸின் ஆதரவுத் தளத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட்ட நிலையில், பா.ஜ.க 2008-ல் இருந்து அதை ஓரளவிற்கு பிளவுபடுத்த முடிந்தது. எஸ்சி மக்களில் ஓரளவிற்கு (17 சதவீத எஸ்.சி மக்கள்தொகையில் 6 சதவீதம்) பா.ஜ.க உடன் கூட்டணி வைத்துள்ளனர். எஸ்டி மக்கள் (7 சதவீத மக்கள்தொகை) பா.ஜ.க-வுக்கு ஆதரவாக உள்ளனர்.
கிராம அளவில், எஸ்சி மற்றும் எஸ்டி குழுக்கள், குருபாக்கள் போன்ற இடைநிலை சாதியினருடன் வளங்களுக்காக ஒரு விரோதமான உறவைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. அவர்கள் வொக்கலிகர்களுடன் ஒத்த சமன்பாடுகளைக் கொண்டவர்களாகவும், குறைந்த அளவிற்கு லிங்காயத்துகளுடன் இருப்பதாகவும் கருதப்படுகிறார்கள்.
குறிப்பிடத்தக்க வகையில், எடியூரப்பா எப்போதும் சித்தராமையாவைத் தாக்குவதைத் தவிர்த்து, ஒருவருக்கொருவர் சாதி பலத்தைப் பயன்படுத்திக்கொள்வதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
சித்தராமையா தலைமையில் 2018 தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததற்கு பலரிடையே உணரப்பட்ட வெறுப்புதான் காரணம் என்று பரவலாக நம்பப்படுகிறது.
அவர் முதலமைச்சராக இருந்த காலத்தில் அவரது குருபா சமூகத்தின் உயர்வுக்கு சமூகங்கள் எதிரக இருந்தன. 2018 தேர்தலில் பா.ஜ.க 104 இடங்களிலும் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களில் வெற்றி பெற்றதுடன் ஒப்பிடுகையில் காங்கிரஸ் 80 இடங்களில் வென்றது.
சமீபத்தில் சித்தராமையா தலைமையில் ஹாசன் மற்றும் தும்கூர் மாவட்டங்களில் இருந்து இரண்டு மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸில் நுழைந்தது குருபா-முஸ்லிம் சமூகக் கணக்கைக் காட்டுகிறது.
அரசிகெரே தொகுதி மற்றும் தும்கூரின் குப்பி தொகுதியில் எஸ்.ஆர் ஸ்ரீனிவாஸ் காங்கிரசுக்கு தாவினார். அரசிகெரேவில் குருபா-முஸ்லிம் வாக்கு வங்கி மொத்தம் 35 சதவீதம் (20 பிளஸ் 15) மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. இது வேட்பாளரின் வொக்கலிகர் சாதியுடன் (15 சதவீதம், பொதுவாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி உடன் இணைந்தது) இணைந்து லிங்காயத்துகள் (வழக்கமாக பா.ஜ.க-வை ஆதரிக்கும்) வாக்கு ஆதரவு தளமான 24 சதவீதத்தை வெல்லும் திறன் கொண்டது.
குப்பியில், 26 சதவீத குருபா-முஸ்லிம் (18 பிளஸ் 8) கூட்டணியும், 26 சதவீத வொக்கலிகர் வாக்குகளும் (ஜேடி(எஸ்) மற்றும் காங்கிரஸுக்கு இடையே பிளவுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது) 33 சதவீத லிங்காயத் வாக்குகளும் உள்ளன. இது வெளித்தோற்றத்தில் மதச்சார்பற்றா ஜனதளத்தில் இருந்து புதிய காங்கிரஸை தேர்தல் கணக்கில் வலுவான நிலைப்பாட்டில் வைக்கிறது.
மற்ற மாநிலங்களைப் போலவே கர்நாடகாவிலும் அக்கட்சியின் தேர்தல் வியூகம், மத்தியில் நரேந்திர மோடி அரசாங்கத்தின் வளர்ச்சி திட்டங்களை முன்வைப்பதை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதில் சாதி மட்டுமே புறநிலைப் பாத்திரத்தை வகிக்கிறது என்றும் பா.ஜ.க கூறியுள்ளது.
“ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும், கிட்டத்தட்ட 70 முதல் 80 சதவிகித மக்கள் மாநில மற்றும் மத்திய அரசுகளின் ஏதாவது ஒரு திட்டத்தின் பயனாளிகளாக இருக்கிறார்கள். நாங்கள் அவர்களை பா.ஜ.க-வின் வாக்காளர்களாக மாற்ற விரும்புகிறோம். அதற்காக நாங்கள் ஒரு பெரிய திட்டத்தை வகுத்துள்ளோம்” என்று அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சி.டி. ரவி சமீபத்தில் அதன் மையக் குழு கூட்டத்தைத் தொடர்ந்து கூறியிருந்தார். “இந்தத் திட்டம் குஜராத் மற்றும் உ.பி.யில் எங்களுக்கு வெற்றியைத் தந்தது. இது கர்நாடகாவிலும் பயன்படுத்தப்படும். இதை கோர் கமிட்டி முடிவு செய்துள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.
கர்நாடகாவில் உள்ள முக்கிய சமூகங்களின் மக்கள் தொகை
லிங்காயத்துகள் - 17%
வொக்கலிகர்கள் - 12-15%
முஸ்லிம்கள் - 12%
பட்டியல் இனத்தவர் இடது - 17% (SC இடது 6%, எஸ்சி வலது 5.5%, எஸ்சி தீண்டமை இல்லாதவர்கள் 4.5%)
பழங்குடியினர் - 7%
ஓ.பி.சி-க்கள் - 33% (குருபாஸ் - 6%, இதிகாக்கள் - 5%, மேலும் 100 சிறிய ஓ.பி.சி சமூகங்கள்.)
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.