Advertisment

“தலித்களுடன் உணவு உண்ணுங்கள்; நமக்கு வாக்களிக்க சொல்லுங்கள்” - தொண்டர்களிடம் உ.பி. பாஜக தலைவர்

அங்கே நீங்கள் ஒரு ஆயிரம் முறையாவது சென்று வாருங்கள். உங்களின் வருகை கட்சியை பலப்படுத்தும். மேலும் நீங்கள் ஒரு உயர்ந்த தலைவராகவும் மாறுவீர்கள் என்று சிங் கூறியுள்ளார்.

author-image
WebDesk
Nov 15, 2021 09:41 IST
New Update
UP elections,

Lalmani Verma

Advertisment

UP BJP chief to workers : உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் ஞாயிறு அன்று இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் உயர் சாதி பாஜக தலைவர்கள் தலித்களுடன் தேநீர் பருகி, மதிய உணவு உட்கொண்டு, பாஜகவிற்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும் படி கூறுமாறு வலியுறுத்தியுள்ளார்.

கட்சியின் OBC சமாஜிக் பிரதிநிதி சம்மேளனத்திலும் மற்றும் வைஷ்ய வியாபாரி சம்மேளனிலும் சிங் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இரண்டாவது கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக தலைவர், கூட்டத்தில் பங்கேற்ற இதர கட்சித் தலைவர்களிடம், தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் கிராமங்களில் 10 முதல் 100 தலித் குடும்பங்களுடன் தேநீர் அருந்துமாறு கேட்டுக் கொண்டார். சாதி, பிராந்தியம் மற்றும் பணத்தின் பெயரால் வாக்களிக்க வேண்டாம். ஆனால், வாக்களிப்பது ராஷ்டிரவாதத்தின் (தேசியம்) பெயரால் வாக்களியுங்கள் என்று கூறுமாறும் கேட்டுக் கொண்டார்.

பாஜகவின் ஓ.பி.சி. மோர்ச்சா நடத்திய சமஜிக் பிரதிநிதி சம்மேளனத்தில், நீங்கள் உங்கள் சமூகங்களுக்கு மத்தியில் செல்கிறீர்கள். ஆனால் தலித்துகள், சுரண்டப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட குடும்பங்களின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் ஒருமுறையாவது தேநீர் அருந்தவும். அங்கு உங்களுக்கு தேநீர் வழங்கப்பட்டால் நீங்கள் சரியாக உள்ளீர்கள் என்று அர்த்தம். தேநீருடன் முந்திரி கொடுத்தால் உங்கள் நிலை அவர்கள் மத்தியில் வளர்ந்துவிட்டது என்று அர்த்தம். தேநீருடன் மதிய உணவு வழங்கினால் அந்த குடும்பம் பாஜகவுடன் இணைந்துவிட்டது என்று அர்த்தம். நீங்கள் 10 நாட்களுக்கு ஒரு வீட்டிற்கு சென்று, 10 நாளும் நீங்கள் திருப்பி அனுப்பப்பட்டால் குறைந்தபட்சம் ஒரு தேநீரையாவது அவர்கள் வீட்டில் இருந்து குடிக்க முயற்சி செய்யுங்கள். அங்கே நீங்கள் ஒரு ஆயிரம் முறையாவது சென்று வாருங்கள். உங்களின் வருகை கட்சியை பலப்படுத்தும். மேலும் நீங்கள் ஒரு உயர்ந்த தலைவராகவும் மாறுவீர்கள் என்று சிங் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Uttarpradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment