நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்தை ட்விட்டரில் பதிவிட்ட கான்பூரை சேர்ந்த பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
கான்பூர் நகரின் யுவ மோர்ச்சாவின் முன்னாள் மாவட்டச் செயலாளரான ஹர்ஷித் ஸ்ரீவஸ்தவா லாலா மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய கான்பூர் பாஜக மாவட்டத் தலைவர் சுனில் பஜாஜ், ஹர்ஷித் தற்போது கட்சியில் எந்தப் பதவியையும் வகிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை, பாஜகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நுபுர் ஷர்மாவின் ஆட்சேபகரமான கருத்துக்களால் கான்பூரில் மோதல் வெடித்தது. அப்போது இவர் நபிகள் நாயகத்தை அவதூறாக விமர்சித்து ட்வீட் செய்துள்ளார். தற்போது, காவல் துறையினர் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்கிடையில், கான்பூர் போலீஸ் கமிஷனர் விஜய் சிங் மீனா, மக்களை அமைதி காக்குமாறு வலியுறுத்தினார்.
அவர் கூறியதாவது, சமூக வலைதளத்தில் உலாவும் கான்பூர் ஷஹர் காசி, ஹபீஸ் அப்துல் குத்தூஸ் ஆகியோர் வீடியோக்களில், அவர் அவதூறு கருத்துகளை கூறியதாக மக்களிடம் வன்முறையை தூண்டும் வாசகம் இடம்பெற்றுள்ளது.
வெள்ளிக்கிழமை மோதல் தொடர்பாக கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது, மொத்த கைது எண்ணிக்கை 50 ஆக உள்ளது. ஜூன் 3 அன்று மோதல்களில் ஈடுபட்டவர்கள் சிசிடிவி காட்சிகள், வீடியோ கிளிப்புகள் மூலம் அடையாளம் காணப்படுகிறார்கள். எந்தவொரு அப்பாவி நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என தெரிவித்தார்.
மேலும், வெள்ளிக்கிழமை தொழுகைக்கு எதிராக சமூக ஊடகங்களில் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்த இந்து மகாசபாவின் தேசிய செயலாளர் பூஜா ஷகுன் பாண்டே மீது அலிகார் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil