UP BJP Minister Dharam Singh Saini becomes third to resign: உத்திரபிரதேசத்தின் பாஜக கட்சிக்கு மற்றொரு பெரிய அடியாக, அம்மாநில ஆயுஷ், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அமைச்சர் தரம் சிங் சைனி வியாழக்கிழமை கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார், அம்மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அவ்வாறு செய்யும் மூன்றாவது கேபினட் அமைச்சரானார்.
தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், விவசாயிகள், படித்த வேலையற்ற இளைஞர்கள் மற்றும் சிறு வணிகர்கள் மீது மாநில அரசாங்கத்தால் "மோசமான புறக்கணிப்பு" இருப்பதாகக் குறிப்பிட்டு, தரம் சிங் சைனி பிற்பகலில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்தார்.
உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதுவரை மொத்தம் 8 பாஜக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
முன்னதாக இன்று, பாஜக எம்எல்ஏக்கள் முகேஷ் வர்மா மற்றும் வினய் ஷக்யா ஆகியோர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். “சுவாமி பிரசாத் மௌரியா தாழ்த்தப்பட்டவர்களின் குரல், அவர் எங்கள் தலைவர். நான் அவருடன் இருக்கிறேன்” என்று ஷக்யா தனது ராஜினாமா கடிதத்தில் கட்சிக்கு எழுதியுள்ளார். முகேஷ் வர்மா, தனது ராஜினாமா கடிதத்தில், சுவாமி பிரசாத் மவுரியா எடுக்கும் எந்த முடிவையும் ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், “சுவாமி பிரசாத் மௌரியா எங்கள் தலைவர். அவர் எடுக்கும் எந்த முடிவையும் நாங்கள் ஆதரிப்போம். வரும் நாட்களில் இன்னும் பல தலைவர்கள் எங்களுடன் இணைவார்கள்,'' என்றும் முகேஷ் வர்மா கூறியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் உள்ள 172 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜகவின் மத்திய தேர்தல் குழு வியாழக்கிழமை கூடி இறுதி செய்தது. தற்போது சட்ட மேலவை உறுப்பினர்களாக உள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா ஆகிய இருவரையும் கட்சி வேட்பாளராக நிறுத்த வாய்ப்பு உள்ளதாக கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு பிறகு தெரிவித்தனர். செய்தி நிறுவனமான பிடிஐ அணுகிய கட்சி வட்டாரங்களின்படி, ஆதித்யநாத் அயோத்தியில் களமிறங்க வாய்ப்புள்ளது, கேசவ் பிரசாத் மௌரியா சிரத்து தொகுதியில் போட்டியிடுவார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil